spot_imgspot_img
Homeசெய்திகள்ஆவடிஆவடியில் இரண்டு தலையுடன் பிறந்த ஆட்டுக்குட்டி

ஆவடியில் இரண்டு தலையுடன் பிறந்த ஆட்டுக்குட்டி

-

- Advertisement -

ஆவடியில் இரண்டு தலையுடன் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி. ஆச்சரியத்தில் அப்பகுதி மக்கள்!

திருவள்ளுர் மாவட்டம், ஆவடி அடுத்த கோவில்பதாகை பகுதியில் உள்ள கலைஞர் நகர் விரிவாக்கம், கன்னி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மதி(42). இவர், அப்பகுதியில் உணவகம் ஒன்று நடத்தி வருகிறார்.

we-r-hiring

இவர், வளர்த்து வரும் வெள்ளாடு ஒன்று, நேற்று மாலை இரண்டு தலை, நான்கு கண்கள், இரண்டு வாய் என ஒட்டி பிறந்தது.  இந்த அதிசய ஆட்டுக்குட்டியை பார்த்த அப்பகுதி மக்கள் ஆச்சரியத்தில் உள்ளனர்.

MUST READ