சென்னை பெருநக நகர சரக்கு போக்குவரத்து திட்ட ஒருங்கிணைப்பு குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.


பொருளாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சியில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு விளங்கி வருகிறது. 2030-ம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டில் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார வளர்ச்சி என்ற இலக்கை அடைய பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
தொழில் நிறுவனங்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு கொள்கைகள் தொழில்துறை சார்பில் வெளியிடப்பட்டு உள்ளன. இதன்படி, தமிழ்நாடு சரக்கு போக்குவரத்து கொள்கை மற்றும் ஒருங்கிணைந்த சரக்கு போக்குவரத்து திட்டத்தை கடந்த ஆண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
தமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! (apcnewstamil.com)
இந்நிலையில், சென்னை பெருநகர சரக்கு போக்குவரத்து திட்ட
ஒருங்கிணைப்பு குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்து குழும சிறப்பு அலுவலர் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் குழுவில், சென்னை, ஆவடி, தாம்பரம் மாநகராட்சிகள், தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம், சென்னை மெட்ரோ ரயில், சென்னை, தாம்பரம் ஆவடி காவல் ஆணையரகங்கள், சென்னை மற்றும் காமராஜர் துறைமுகம், தெற்கு ரயில்வே, சுங்கத்துறை, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் மற்றும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
நாளை கூடுகிறது தமிழக சட்டப்பேரவை: அதிமுக-வின் திட்டம் இதுதான்..! (apcnewstamil.com)
இந்த குழுவானது, சென்னை நகரில் தற்போது உள்ள சரக்கு போக்குவரத்து வசதியை ஆய்வு செய்து எதிர்காலத் தேவையின் அடிப்படையில் சரக்கு போக்குவரத்து திட்டத்தை இந்த குழுவானது தயார் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 6 மாதத்திற்குள் சென்னை பெருநகருக்கான நகர சரக்கு போக்குவரத்து திட்டத்தை தயார் செய்து அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னதாக, சென்னை பெருநகருக்கான சரக்கு போக்குவரத்து திட்டத்தை உருவாக்க
Ernst & Young LLP என்ற நிறுவனத்திற்கு டெண்டர் அளிக்கப்பட்டு இருந்தது.


