spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஎன்னோட அண்ணன், என்னோட தளபதி..... விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன அட்லீ!

என்னோட அண்ணன், என்னோட தளபதி….. விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன அட்லீ!

-

- Advertisement -

நடிகர் விஜய் தற்போது நடிகராக மட்டுமல்லாமல் அரசியல்வாதியாகவும் வலம் வருகிறார். என்னோட அண்ணன், என்னோட தளபதி..... விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன அட்லீ!இவர் தமிழ்நாட்டைத் தாண்டி கேரளாவிலும் தனி ரசிகர்கள் பட்டாளத்தையே வைத்துள்ளார். அது மட்டும் இல்லாமல் இவர் தமிழ் சினிமாவில் ஒரு சிறந்த நடிகராக மட்டுமல்லாமல் பாடகராகவும் வலம் வருகிறார். இவர் பாடிய பெரும்பாலான பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியுள்ளது. மேலும் உடலை வளைத்து நெளித்து ஆடுவதிலும் திறமை பெற்றவர். கிட்டத்தட்ட 68 படங்களில் நடித்துள்ள விஜய் அன்று முதல் இன்று வரை அதே இளமையுடன் இருக்கிறார். இந்நிலையில் இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடி வரும் விஜய்க்கு ரசிகர்களும் திரை பிரபலங்களும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். என்னோட அண்ணன், என்னோட தளபதி..... விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன அட்லீ!அந்த வகையில் இயக்குனர் அட்லீ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “என்னோட அண்ணே, என்னோட தளபதி விஜய் அண்ணாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என்று தான் விஜயுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஏற்கனவே இயக்குனர் அட்லீ, விஜயின் தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இந்த மூன்று படங்களுமே ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ