திருவள்ளுரில் உள்ள பட்டாபிராம், அம்பேத்கர் நகர், சோழன் தெருவைச் சேர்ந்தவர் துர்காதேவி (வயது 55). இவரது மகன் தினேஷ் குமார் (வயது 35) ஐ. சி. எப்., பில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார்.
இவர், கடந்த 2016ல் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இந்த நிலையில், திருமணமாகி இரண்டு வருடங்களில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையால் கடந்த 2018ம் ஆண்டு, நீதிமன்றம் வாயிலாக விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
அப்பெண் வேறொரு திருமணம் செய்த நிலையில், தினேஷ்குமாருக்கு இன்னும் வரன் அமையவில்லை எனக் கூறப்படுகிறது.


இதனால் மன உளைச்சலில் இருந்த தினேஷ் குமார், கடந்த 20ம் தேதி மதியம் 1:30 மணி அளவில், பூச்சி மருந்து குடித்து மயக்கமடைந்தார். அவர் மயங்கி இருப்பதை கண்ட அவரின் உறவினர்கள் அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
தினேஷ் குமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று காலை 11:00 மணி அளவில் உயிரிழந்தார். மேலும், இதுக்குறித்து பட்டாபிராம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.


