spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகள்ளக்குறிச்சி விவகாரம் : அதிமுகவினர் உண்ணாவிரத போராட்டம்; பிரேமலதா நேரில் ஆதரவு

கள்ளக்குறிச்சி விவகாரம் : அதிமுகவினர் உண்ணாவிரத போராட்டம்; பிரேமலதா நேரில் ஆதரவு

-

- Advertisement -

அதிமுக உண்ணாவிரதப் போராட்டம்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய இறப்புகளுக்கு நீதி கோரி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தனது ஆதரவை நேரில் வந்து தெரிவித்துள்ளார்.

we-r-hiring

கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கருணாபுரத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் கள்ளச்சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைகள், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி இதுவரை 63 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், ஆளும் திமுக அரசுக்கு எதிரான கண்டனங்களும் வலுத்து வருகின்றன. இதற்கிடையே, கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் அதிமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

பிரேமலதா விஜயகாந்த்

மேலும், சட்டப்பேரவையில் கடந்த நான்கு நாட்களாக கள்ளக்குறிச்சி மரணங்கள் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் எனவும் அமளியில் ஈடுபட்டுவந்தது. தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்ததால் நடப்புக் கூட்டத் தொடர் முழுவதுமே அதிமுக உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணங்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க தவறிய திமுக அரசை கண்டித்தும், இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த கோரியும், சட்டப்பேரவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏ-க்கள் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் இந்த உண்ணாவிரதப் போராட்டம் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வேலுமணி, செங்கோட்டையன், ஆர்பி உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி, பொள்ளாச்சி ஜெயராமன், தங்கமணி ஆகியோர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்திற்கு தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் நேரில் ஆதரவு தெரிவித்துள்ளார்.

MUST READ