spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாகே.ஆர்.எஸ்., கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கே.ஆர்.எஸ்., கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

-

- Advertisement -

கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் தென்மேற்கு பருவமழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கே.ஆர்.எஸ்., கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

we-r-hiring

கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதில் குறிப்பாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக கனமழையின் தாக்கம் அதிகரித்துள்ளது.

கே.ஆர்.எஸ்., கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

இதன் காரணமாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று கபினி அணையின் நீர்வரத்து 16 ஆயிரத்து 977 கன அடி ஆக இருந்த நிலையில் இன்று அணையின் நீர்வரத்து 20 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை தீவிரம் – அணையின் நீர் வரத்து அதிகரிப்பு (apcnewstamil.com)

நேற்று கே.ஆர்.எஸ் அணையின் நீர்வரத்து 3,856 கன அடியாக இருந்த நிலையில் இன்று நீர்வரத்து 13,437 கன அடியாக அதிகரித்துள்ளது. கடந்த வருடம் தென்மேற்கு பருவமழை பொய்த்துப் போன நிலையில் விவசாயிகள் தண்ணீர் இன்றி கடும் நெருக்கடியை சந்தித்தனர். இந்த வருடம் கனமழையின் காரணமாக அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து வருவதை கண்டு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

MUST READ