- Advertisement -
கோவை உக்கடம் பெரிய குளத்தில் அமைக்கப்பட்டுள்ள படகு இல்லத்திற்கு வந்த “ஷார்க் படகு” பொதுமக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டு நவீனப்படுத்தப்பட்ட உக்கடம் பெரியகுளம், செல்வசிந்தாமணி குளம், வாலாங்குளத்தின் ஒரு பகுதி புரைமைக்கப்பட்டு வரும் குமாரசாமி மற்றும் செல்வம்பதி குளத்தின் ஒரு பகுதி ஆகியவற்றை மாதகராட்சி நிர்வாகம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தது.

இங்கு குழந்தைகள் மற்றும் பொதுமக்களை கவரும் வகையில் பாண்டூன், ஸ்பீட், ஜெட்ஸ்கி வகை படகுகள் வைக்கப்பட்டுள்ள நிலையில் புதிதாக வந்துள்ள ஷார்க் போட் பொதுமக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.