பெருந்துறை அருகே வீட்டின் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பவானியை அடுத்த சன்னியாசிபட்டி, மேட்டுப்பாளையத்தைச் சோ்ந்தவா் ஆறுமுகம் மகன் வினோத் (28). இவருக்கு மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ளனா். சென்ட்ரிங் தொழிலாளியான இவா், பெருந்துறையை அடுத்த, பிச்சாண்டம்பாளையத்தில் ஒரு வீட்டின் கான்கிரீட் மேற்கூரை அமைப்பதற்காக கம்பி கட்டும் பணியில் கடந்த 19 ஆம் தேதி ஈடுபட்டிருந்தாா்.
7½ கிலோ கஞ்சா பறிமுதல் – பெண் உள்பட 3 பேர் கைது (apcnewstamil.com)
அப்போது அவரது கையில் இருந்த கம்பி, அங்குள்ள மின் கம்பியில் உரசியது. இதில் மின்சாரம் பாய்ந்ததில் வினோத் தூக்கி வீசப்பட்டாா். அங்கிருந்த சக தொழிலாளா்கள் அவரை மீட்டு ஈரோட்டிலுள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைகாக சோ்த்தனா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இது குறித்து, பெருந்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.