சிவகார்த்திகேயன் அயலான் படத்தின் ரிலீஸுக்கு பிறகு தனது 21வது படமான அமரன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்திலும் கமல்ஹாசனின் தயாரிப்பிலும் உருவாகி இருக்கும் இந்த படம் 2024 செப்டம்பர் மாதத்தில் வெளியாகும் என சமூக வலைதளங்களில் தொடர்ந்து பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதே சமயம் நடிகர் சிவகார்த்திகேயன், ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தனது 23 வது படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரி போன்ற பகுதிகளில் நடைபெற்ற நிலையில் இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு தூத்துக்குடி மற்றும் சென்னையில் அடுத்தடுத்து நடைபெற இருக்கின்றன.
மேலும் இந்த படத்திற்கு சிங்க நடை என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு 2025 ஆம் ஆண்டில் வெளியிடப்பட குழு திட்டமிட்டுள்ளதாக தற்போதைய தகவல்கள் கூறுகிறது. இதைத்தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன், டான் பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் SK24 படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ராஷ்மிகாவும் வில்லனாக எஸ் ஜே சூர்யாவும் நடிக்க உள்ளனர் என்று ஏற்கனவே செய்திகள் வெளியானது.
அத்துடன் இந்த படத்திற்கு பாஸ் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவித்தன. இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் இந்த படத்தின் படப்பிடிப்பு 2024 செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் தொடங்கப்படும் என்று புதிய அப்டேட் கிடைத்துள்ளது. எனவே 2025 ஆம் ஆண்டில் சிவகார்த்திகேயனின் SK23 மற்றும் SK24 ஆகிய இரண்டு படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- Advertisement -