spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமரகத நாணயம் 2 விரைவில் வெளியாகும் - நிக்கி கல்ராணி

மரகத நாணயம் 2 விரைவில் வெளியாகும் – நிக்கி கல்ராணி

-

- Advertisement -

தனது நடிப்பில் மரகத நாணயம் 2 படம் விரைவில் வெளியாகும் எனவும் எனது அடுத்த திட்டத்தை விரைவில் பார்ப்பீர்கள் என்ற சஸ்பென்ஸையும் நடிகை நிக்கி கல்ராணி வெளிப்படுத்தினார்.

மரகத நாணயம் 2 விரைவில் வெளியாகும் - நிக்கி கல்ராணி

we-r-hiring

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தனியார் நிறுவனத்தின் 12ஆம் ஆண்டு விழா இன்று நாகர்கோவிலில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகை நிக்கி கல்ராணி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

அப்போது அவர் செய்தியாளரிடம் கூறியதாவது, தனது நடிப்பில் மரகத நாணயம் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகும் என தெரிவித்தார். மேலும் தமிழ் மலையாளம், பஞ்சாபி போன்ற பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்துள்ள நிலையில், பத்தாண்டு நடிப்பு பணியில் அனைத்து மாநில திரைத்துறையையும் ஒரே மாதிரியாக பார்ப்பதாகவும் கூறினார்.

வருஷமெல்லாம் வசந்தம் படத்தின் இயக்குனர் ரவிசங்கர் தூக்கிட்டு தற்கொலை!

வெவ்வேறு மாநிலங்களில் மொழியும் கலாச்சாரமும் மாறினாலும் அனைத்து மொழி மற்றும் திரைத்துறை மீதும் தனக்கு மிகுந்த அன்பு உள்ளதாகவும் தொடர்ந்து திரை துறையில் பணி செய்வது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார். மலையாளத்தில் தான் நடித்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், தொடர்ந்து நடிக்க உள்ளதாகவும் கூறினார். தனது நடிப்பில் மரகத நாணயம் 2 விரைவில் வெளியாகும் தனது அடுத்த கட்ட திட்டம் குறித்து, விரைவில் பார்ப்பீர்கள் என சஸ்பென்ஸாக கூறினார்.

MUST READ