spot_imgspot_imgspot_imgspot_img
HomeBreaking Newsநல்ல பாம்பை கையில் எடுத்து சுழற்றிய போதை ஆசாமி - அலறியடித்து ஓட்டம் பிடித்த மக்கள்

நல்ல பாம்பை கையில் எடுத்து சுழற்றிய போதை ஆசாமி – அலறியடித்து ஓட்டம் பிடித்த மக்கள்

-

- Advertisement -

சென்னை பூவிருந்தவல்லியில் திடீரென சாலைக்கு வந்த நல்ல பாம்பை அங்கிருந்த போதை ஆசாமி கையால் எடுத்து சுழற்றியதால் அங்கிருந்த மக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.நல்ல பாம்பை கையில் எடுத்து சுழற்றிய போதை ஆசாமி - அலறியடித்து ஓட்டம் பிடித்த மக்கள்

சென்னை பூவிருந்தவல்லி ட்ரங்க் சாலையில் திடீரென 6 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பு வந்தது. இதனால் அவ்வழியாக வந்த வாகனங்கள் நின்றது. இதையடுத்து அருகே இருந்த போதை ஆசாமி ஒருவர் நல்ல பாம்பு என்றும் பாராமல் கையில் எடுத்து சுழற்றினார். இதனால் அங்கிருந்த மக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தாா்கள். இதையடுத்து அருகே இருந்த போதை ஆசாமியை அடித்து பாம்பை கீழே போட வைத்தாா்கள். போதை ஆசாமி சுற்றியதில் பாம்பிற்கு காயம் ஏற்பட்டது. இதனால் சாலையில் இருந்து செல்ல முடியாமல் சாலையிலே கிடந்தது. பாம்பு சாலையில் இருப்பதை காண மக்கள் கூட்டம் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ஒரு மணி நேரத்திற்கு மேலாக அங்கிருந்த பாம்பு ஒரு வழியாக சாலையை கடந்து அங்கிருந்த மர கட்டைக்குள் புகுந்தது. நல்ல பாம்பை போதை ஆசாமி கையில் சுற்றும் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு வருகிறது.

தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் ஆளுநர்

we-r-hiring

 

MUST READ