நடிகர் ரவி, கெனிஷா தான் தன்னுடைய வாழ்க்கைத் துணை என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு பிரபல தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகள் ஆர்த்தியை காதலிக்க திருமணம் செய்து கொண்டார் ரவி. இவர்கள் இருவருக்கும் இரண்டு மகன்கள் இருக்கின்ற நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ரவி அறிக்கை ஒன்றனை வெளியிட்டு தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக தெரிவித்திருந்தார். ஆனால் ஆர்த்தி, ரவிதான் தன்னுடைய கணவர் என்றும் அவருடன் சேர்ந்து வாழ விரும்புவதாகவும் கூறியிருந்தார். இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் ரவி மோகனும், பாடகி கெனிஷாவும் நெருங்கி பழகி வருவதாகவும் இதனால்தான் ரவி, ஆர்த்தியை பிரிந்து விட்டார் எனவும் பல தகவல்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வந்தது. அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் ஐசரி கணேஷ் வீட்டு திருமண நிகழ்ச்சியிலும் ரவி மோகன் – கெனிஷா இருவரும் ஜோடியாக கைகோர்த்து வந்திருந்தனர். அதன் பிறகு கெனிஷாவுக்கு, ரவி மோகன் மும்பையில் ரூ. 10 கோடியில் வீடு ஒன்றை வாங்கித் தந்திருப்பதாக செய்திகள் வெளியானது.
All these years I was being stabbed in the back, now I’m only glad that I’m being stabbed in the chest..
First and Final One From My Desk !
With Love
Ravi Mohan
‘Live and Let Live’ pic.twitter.com/Z0VbFYSLjU— Ravi Mohan (@iam_RaviMohan) May 15, 2025

இந்நிலையில் ரவி புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டு கெனிஷா தான் தனது வாழ்க்கை துணை என அறிவித்துள்ளார். மேலும் அந்த அறிக்கையில், “இத்தனை ஆண்டுகளாக முதுகில் குத்தப்பட்டேன். இப்போது நெஞ்சில் குத்தப்பட்டிருக்கிறேன். தற்போது நான் எடுத்த முடிவினால் முன்பு எப்போதும் இல்லாத அளவு மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அந்த அறிக்கையில், “என் முன்னாள் மனைவியை மட்டுமே விலக முடிவு செய்தேன். என் குழந்தைகளை அல்ல. என் குழந்தைகள் தான் எனது பெருமை, மகிழ்ச்சி, அவர்களுக்காக எதையும் செய்வேன். நான் வீட்டை விட்டு எதுவும் இல்லாமல் வெளியேறிய போது எனக்கு துணையாக இருந்தவர் கெனிஷா. அவர் என் வாழ்க்கையின் ஒரு அழகான துணை. வாழ்க்கையில் சந்தித்த எல்லா பிரச்சனைகளிலும் அவர் என்னுடன் இருந்தவர். என் வாழ்வில் ஒளியை கொண்டு வந்தவர்” என்று குறிப்பிட்டுள்ளார்.