கார்த்திக் சுப்பராஜ் தமிழ் சினிமாவில் பீட்சா படத்தின் மூலம் அறிமுகமாகி ஜிகர்தண்டா, பேட்ட ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என பல வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். தற்போது இவர் சூர்யா நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கியிருக்கிறார். சூர்யாவின் 44 வது படமான இந்த படத்திற்கு ரெட்ரோ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை சூர்யா – ஜோதிகாவின் 2D என்டேர்டெயின்மென்ட் நிறுவனமும் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கிறது. சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். காதல் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ் மற்றும் பலரும் நடித்திருக்கின்றனர். இந்த படத்தில் நடிகர் சூர்யா இரண்டு விதமான லுக்கில் நடித்திருக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படமானது 2025 மே 1ஆம் தேதி திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
மேலும் கடந்தாண்டில் வெளியான சூர்யாவின் கங்குவா திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை என்பதால் ரெட்ரோ படம் சூர்யாவிற்கு வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.