HomeBreaking Newsமிரட்டலான லுக்கில் நடிகர் சூரி.... 'மண்டாடி' பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

மிரட்டலான லுக்கில் நடிகர் சூரி…. ‘மண்டாடி’ பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

-

- Advertisement -

சூரி நடிக்கும் மண்டாடி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.மிரட்டலான லுக்கில் நடிகர் சூரி.... 'மண்டாடி' பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

நடிகர் சூரி தற்போது மண்டாடி எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை வெற்றிமாறனின் உதவி இயக்குனர் மதிமாறன் புகழேந்தி இயக்குகிறார். இப்படத்தில் சூரியுடன் இணைந்து சத்யராஜ், மகிமா நம்பியார் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஆர் எஸ் இன்ஃபோடைன்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் இந்த படத்தை தயாரிக்கிறார். ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசை அமைக்கிறார். வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தில் நடிகர் சூரி முத்துக்காளி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டுள்ளது. மிரட்டலான லுக்கில் நடிகர் சூரி.... 'மண்டாடி' பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!இந்த போஸ்டர்களை பார்க்கும்போது படகு போட்டிகள் தொடர்பான கதைக்களம் போல் தெரிகிறது. இந்த போஸ்டரில் இதுவரை இல்லாத ஆக்ரோஷமான, மிரட்டலான லுக்கில் காணப்படுகிறார் சூரி. மேலும் நடிகர் சூரி எந்தவித பில்டப்பும் இல்லாமல் கரடு முரடான லுக்கில் மாஸ் காட்டுகிறார். இந்த போஸ்டர்களின் மூலம் இயக்குனர் மதிமாறன், நடிகர் சூரியை வேறொரு பரிமாணத்தில் காட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போஸ்டர்கள் தற்போது இணையத்திலும் வைரல் ஆகி வருகிறது.

MUST READ