HomeBreaking Newsதமிழக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்தது தவெக அரசு: 144 வாக்குகள் பெற்று முதலமைச்சர் விஜய் வெற்றி!

தமிழக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்தது தவெக அரசு: 144 வாக்குகள் பெற்று முதலமைச்சர் விஜய் வெற்றி!

-

- Advertisement -

தமிழக சட்டப்பேரவையில் தமிழக வெற்றிக் கழகம் அரசின் மீதான நம்பிக்கை போரும் தீர்மானம் வெற்றி பெற்றது. அரசுக்கு ஆதரவாக 144 பேர் ஆதரவுடன் விஜய் அரசு தனது பெரும்பான்மையை அவையில் நிரூபித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்தது தவெக அரசு: 144 வாக்குகள் பெற்று முதலமைச்சர் விஜய் வெற்றி!

we-r-hiring

தமிழகத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று, கடந்த மே 10-ஆம் தேதி முதலமைச்சராகப் பொறுப்பேற்றார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ச. ஜோசப் விஜய். ஆளுநர் அறிவுறுத்தலின்படி, இன்று சட்டப்பேரவையில் தனது அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை அவர் கோரினார்.

சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தலைமையில் இன்று காலை சட்டப்பேரவை கூடியது. தொடக்கத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் (திமுக) மற்றும் அதிமுக தரப்பில் காரசாரமான விவாதங்கள் முன்வைக்கப்பட்டன. விவாதங்களுக்குப் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் விஜய், “இந்த அரசு குதிரை பேரத்தால் அமையவில்லை; குதிரை வேகத்தில் மக்களுக்காகப் பணியாற்றும் மதச்சார்பற்ற அரசு” என்று உறுதிபடத் தெரிவித்தார்.

வாக்கெடுப்பின் முடிவில் தவெக அரசுக்கு ஆதரவாக 144 வாக்குகள் கிடைத்தன. இதன் மூலம் சட்டப்பேரவையில் ஆட்சி அமைக்கத் தேவையான 118 என்ற பெரும்பான்மை இலக்கை விட கூடுதல் பலத்துடன் விஜய் அரசு தனது பலத்தை நிரூபித்துள்ளது.

வாக்கு விவரம்:

  • ஆதரவு: 144
  • எதிர்ப்பு: 22
  • நடுநிலை: 5

தவெக-வின் சொந்த பலமான 108 எம்.எல்.ஏ-க்களுடன் சேர்த்து, அதன் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் (5), விசிக (2), சிபிஐ(எம்) (2), சிபிஐ (2), மற்றும் ஐயுஎம்எல் (2) ஆகியவை ஆதரவு அளித்தன. மேலும், அதிமுகவில் இருந்து பிரிந்த ஒரு பிரிவைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்களும் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.

வெளிநடப்பு செய்த திமுக:
வாக்கெடுப்பு தொடங்குவதற்கு முன்னதாகவே, “மக்களின் முழுமையான அங்கீகாரம் இல்லாத கூட்டணி ஆட்சி இது” என்று குற்றம்சாட்டி, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். கடந்த 60 ஆண்டுகளாக திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்து வந்த தமிழக அரசியலில், ஒரு மாற்று சக்தியாகத் தவெக உருவெடுத்து இன்று சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை நிலைநாட்டியிருப்பது ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

“65% மக்களால் நிராகரிக்கப்பட்ட ஆட்சி”: சட்டமன்றத்தில் உதயநிதி ஸ்டாலின் அதிரடி!

MUST READ