சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சரோஜா, கோவா ஆகிய படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி தற்போது அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக நடித்து வருபவர் நடிகர் வைபவ். அந்த வகையில் கடைசியாக இவரது நடிப்பில் பெருசு எனும் திரைப்படம் வெளியாகிய ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதற்கிடையில் இவர், ஆலம்பனா எனும் திரைப்படத்தையும் கைவசம் வைத்துள்ளார். மேலும் இவர், விக்ரம் ராஜேஸ்வர் மற்றும் அருண் கேசவ் ஆகியோரின் இயக்கத்தில் சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் வைபவுடன் இணைந்து அதுல்யா ரவி, மொட்ட ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், சுனில் ரெட்டி மற்றும் பலர் நடித்துள்ளனர். காமெடி கலந்த கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு டி இமான் இசையமைத்திருக்கிறார். பிடிஜி யுனிவர்சல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்து படத்திலிருந்து டீசர், ட்ரைலர், பாடல்கள் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் இந்த படம் 2025 ஜூன் மாதம் 20ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.