spot_imgspot_imgspot_imgspot_img
HomeBreaking Newsவிக்னேஷ் சிவன் - பிரதீப் ரங்கநாதனின் 'எல்ஐகே'.... இணையத்தில் வைரலாகும் கிளிம்ப்ஸ்!

விக்னேஷ் சிவன் – பிரதீப் ரங்கநாதனின் ‘எல்ஐகே’…. இணையத்தில் வைரலாகும் கிளிம்ப்ஸ்!

-

- Advertisement -

எல்ஐகே படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது.விக்னேஷ் சிவன் - பிரதீப் ரங்கநாதனின் 'எல்ஐகே'.... இணையத்தில் வைரலாகும் கிளிம்ப்ஸ்!

தமிழ் சினிமாவின் ‘நானும் ரெளடி தான்’ படத்தை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் விக்னேஷ் சிவன். இவர் தற்போது பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு ‘எல்ஐகே’ – LIFE INSURANCE KOMAPNY என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக கிரித்தி ஷெட்டி நடித்திருக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து எஸ்.ஜே. சூர்யா, யோகி பாபு, கௌரி கிஷன், சீமான் மற்றும் பலர் நடித்துள்ளனர். செவன் கிரீன் ஸ்டூடியோ நிறுவனமும், ரௌடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரித்திருக்கிறது. அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்க ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். விக்னேஷ் சிவன் - பிரதீப் ரங்கநாதனின் 'எல்ஐகே'.... இணையத்தில் வைரலாகும் கிளிம்ப்ஸ்!சயின்ஸ் பிக்சன் கலந்த காதல் கதைக்களத்தில் உருவாகியிருக்கும் இந்த படமானது 2025 அக்டோபர் 17ஆம் தேதி தீபாவளி தினத்தை முன்னிட்டு திரைக்கு வர தயாராகி வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும் ‘தீமா தீமா’ பாடலும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 27) விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இப்படத்திலிருந்து கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் இந்த படத்தின் கதையானது 2040-ல் நடப்பது போன்று காட்டப்படுகிறது. இதில் டெக்னாலஜி வளர்ந்த பிறகும் கிரித்தி ஷெட்டி – பிரதீப் ரங்கநாதன் இருவரும் உண்மையான உறவு வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.

we-r-hiring

ஆனால் அவர்களுக்கு இடையூறாக எஸ்.ஜே. சூர்யா வருவது போல் காட்டப்பட்டுள்ளது. இந்த இடையூறுகளை கடந்து கதாநாயகன், கதாநாயகியுடன் எப்படி சேருகிறார் என்பதுதான் படத்தின் கதை போல் தெரிகிறது. இந்த வீடியோவின் இறுதியில் அனிருத்தின் ஆல்பம் பாடலான ‘எனக்கென யாரும் இல்லையே’ பாடலும் இடம் பெற்றிருக்கிறது. இந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ