spot_imgspot_imgspot_imgspot_img
HomeGeneralநரியை நீக்குங்கள் - நரிகுரவர்கள் வழக்கு

நரியை நீக்குங்கள் – நரிகுரவர்கள் வழக்கு

-

- Advertisement -

எம்பிசி பட்டியலில் நரிக்குறவர் என்ற பெயரில் உள்ள நரி என்பதை நீக்கம் செய்து குறவர், என அழைக்க உத்தரவிட கோரி வழக்கு.

மனு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

we-r-hiring
நரியை நீக்குங்கள் - நரிகுரவர்கள் வழக்கு

மதுரை விளாங்குடியைச் சேர்ந்த முத்துமுருகன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு. தமிழை பூர்வீகமாகக் கொண்டு மலைப்பகுதியில் வசித்தவர்கள் குறவர் சமூகத்தினர். தமிழ்நாட்டில் எஸ்சி-எஸ்டி பட்டியலில் உள்ளனர். மலைப்பகுதியில் இருந்து தற்போது சமதள பரப்பில் வசிக்கின்றனர். நரிக்குறவர்கள் கடந்த 1951ல் எம்பிசி பட்டியலில் சேர்க்கப்பட்டனர். குறவர்கள் தமிழை தாய் மொழியாக கொண்டவர்கள். ஆனால், நரிக்குறவர்கள் சமயம், பழக்கவழக்கம், திருமண முறைகள் வேறுபாடு கொண்டது. இவர்கள் ஆந்திராவில் குருவிக்காரர்கள், நரிக்குறவர்கள் என்றும், குஜராத்தில் வாக்கிரிவாலா என்றும் அழைக்கப்படுகின்றனர். இவர்கள் தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள் அல்ல. ஆந்திரா மற்றும் குஜராத்தில் இருந்து வந்தவர்கள். இவர்களது கலாச்சார முறை வேறுபட்டது. அவர்களுக்கு இடஒதுக்கீட்டு சலுகை வழங்குவதில் எங்களுக்கு எந்தவித ஆட்சேபமும் இல்லை.

நரிக்குறவர்கள் கடந்த 1951ல் எம்பிசி பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.

எனவே, எங்களது குறவர் என்ற பெயரை எம்பிசி பட்டியலில் உள்ள நரிக்குறவர் என்ற பெயரில் இருந்து நீக்க வேண்டும். அவர்களை நரிக்காரர், குருவிக்காரர், வாக்கிரிவாலா, நக்கலே என எப்படி வேண்டு மானாலும் அழைக்கலாம். குறவர், குறவன் என்பது எங்களின் பெயர். இதனால், எங்களது கல்வி, வேலைவாய்ப்பில் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, எம்பிசி பட்டியலில் நரிக்குறவர் என்ற பெயரில் உள்ள குறவர் என்பதை நீக்கம் செய்ய வேண்டும்.

நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயணபிரசாத் ஆகியோர் இந்த மனுவை விசாரித்த மத்திய, மாநில அரசுகள் பதிலளித்குமாறு நோட்டிஸ் அனுப்பு உத்தரவிட்டனர்.

திருவள்ளுர் அடுத்த அதிகத்தூர் நரிக்குறவர் மக்கள் மாவட்ட ஆட்சியர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம்.

திருவள்ளூர் அடுத்த அதிகத்தூர் கிராமத்தில் வாழும் நரிக்குறவர் மக்கள் குடியிருப்பு பகுதியில் சடலங்கள் எரிப்பதை தடுக்க கோரியும் அப்பகுதியில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரியும் பல ஆண்டுகளாக போராடி வந்திருந்த மக்கள் இன்று மாவட்ட ஆட்சியர் வீட்டை முற்றுகையிட்டு குடும்ப அட்டை, ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை போன்ற ஆவணங்களை கொண்டு வந்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி. ஜான் வர்கீஸ் வீட்டில் ஒப்படைக்கும் போராட்டத்தை மேற்கொண்டதால் ஆட்சியர் வீட்டு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

MUST READ