Homeசெய்திகள்ஏழு நாட்களில் டெங்குவால் 113 பேர் பாதிப்பு - மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல்

ஏழு நாட்களில் டெங்குவால் 113 பேர் பாதிப்பு – மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல்

-

தமிழ்நாட்டில் கடந்த ஏழு நாட்களில் 113 பேர் டெங்குவால் பாதிப்படைந்துள்ளனர் என தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அவ்வப்போது மழை பெய்துவருவதால் சாலைகளில் உள்ள பள்ளங்கள், குழி, குட்டைகள், டயர், பழைய பிளாஸ்டிக்  பொருட்கள் மற்றும் தெருவில் வீசப்படும் டயர்களில் தேங்கியுள்ள தண்ணீரினால் டெங்கு வேகமாக பவவுகிறது. தற்போது தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 113 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஏழு நாட்களில் டெங்குவால் 113 பேர் பாதிப்பு - மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல்

 

தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 15 முதல் 20 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது. செப்டம்பர் மாதத்தில் நேற்று முன்தினம் வரை 204 நபர்களுக்கு டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

எனவே, நாம் நம் வீட்டில் உள்ள தேவையில்லாத பொருட்களை தெருக்களில் வீசாமல்  அதனை கவர்களின் போட்டு அதன் கட்டி முறைப்படி குப்பைத் தொட்டிகளில் போட வேண்டும்.

மேலும் கொசு உற்பத்தியை தடுக்க அரசு மற்றும் மாநகராட்சி பல்வேறு நடவடிக்கையை எடுத்து கட்டுக்குள் கொண்டு வந்தாலும், நாம் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்து நாமும் நம் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பது மிகமிக அவசியமாகும். இதனால் நாம் மட்டும் அல்ல நம் சந்ததியினரும், நம் சுற்றத்தாரும் டெங்கு முதலிய நோய் பாதிப்பிலிருந்து தப்பித்து நம்மை தற்காத்துக் கொள்ள முடியும்.

MUST READ