தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக இருக்கும் அஜித் தான் உண்டு தன் வேலை உண்டு இருப்பவர். ஆனாலும் இப்படி இருக்கிற மனிதரை தான் பிரச்சினைகள் தானாக தேடி போய் விழும். அதே போல் தான் ஏகப்பட்ட பிரச்சினைகள் , வதந்திகள் என அஜித்தை சுற்றி சுற்றி வளைத்தன. விஜய் கட்சி ஆரம்பிக்க, உதயநிதி அஜித்துக்கு வாழ்த்து சொல்ல… அதுவும் இப்போது அரசியல் விவாதப்பொருளாகி விட்டது.

முப்போதும் எதையும் கண்டு கொள்ளாமல் தில்லாக எதிர்த்து நிற்பவர் அஜித். அதன் காரணமாகவே மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு பிடித்தமான நடிகராகவே திகழ்ந்தார் அஜித். 2010 ஆம் ஆண்டு கலைஞருக்கு பாராட்டு விழா நடத்திய போது அஜித் மேடையில் பேசிய பேச்சால் எழுந்த சர்ச்சையால் ஒட்டுமொத்த அதிமுகவும் அஜித் பக்கம் இருந்தனர். அதிலிருந்தே ஜெயலலிதாவிற்கு அஜித் மீது ஒரு தனிப் பிரியம் உண்டு என்கிறார்கள்.
இதை பற்றி பிரபல சினிமா பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு கூறும்போது, ‘‘ஜெயலலிதா எப்போதுமே அஜித்தை தன் மகன் போலவே பாவித்து வந்தார். தனக்கு ஒரு மகன் இருந்தால் இதே மாதிரி அழகும், கலரும் வாய்க்கபெற்றவனாக இருந்திருப்பார் என்றும் நினைத்தார்’’ என்கிறார்.
அஜித் திருமண வரவேற்பில் முதல் ஆளாக கலந்து கொண்டு வாழ்த்தினார் ஜெயலலிதா. வழக்கமாக ஜெயலலிதாவை கண்டால் எல்லோரும் கரம் கூப்பி வணங்குவது வழக்கம். ஜெயலலிதா மேடையில் ஏறி அஜித்துக்கு வாழ்த்து சொல்ல அருகில் வந்த போது தீடீரென்று அஜித் கை கொடுப்பதற்காக கையை நீட்ட திகைத்துப் போன ஜெ, பின்னர் சிரித்துகொண்டே கை கொடுத்து வாழ்த்து சொன்னார். அப்போது இருந்தே சினிமா நடிகர்களிலேயே அஜித் மீது தனி அன்பு செலுத்தி வந்தார் ஜெயலலிதா.
ஜெயலலிதாவுக்கு அஜித் மேல் இருந்த அன்புக்கு இன்னொரு உதாரணம் உண்டு. 2011-ல் அதிமுக ஆட்சி அமைந்த போது, திமுக சார்ந்த நிறுவனங்கள் தயாரித்த படங்கள் கெடுபிடிகளை சந்தித்த போது. தயாநிதி அழகிரி தயாரித்த, அஜித்தின் ‘மங்காத்தா’ மட்டும் சுமூகமாக வெளிவந்தது.
குறிப்பாக ஜெயலலிதாவுக்கு பதவி ஆசை இல்லாதவர்களை ரொம்பவே பிடிக்கும். எத்தனையோ கால கட்டங்களில் அஜித்தை அதிமுக-வுடன் இணைத்து பல செய்திகள் வெளிவந்தன. குறிப்பாக ஜெயலலிதா மறைந்த சமயத்தில், இனி அதிமுக அஜித்தின் கைக்கு செல்லப் போகிறது என்ற செய்தி தீவிரமானது. ஆனால் எதையும் அஜித் கண்டுக் கொள்ளவில்லை. முக்கியமாக தனது ரசிகர் மன்றத்தை கலைத்த, அஜித்தின் அந்த தைரியம் ஜெயலலிதாவை ரொம்பவே இம்ப்ரெஸ் செய்தது!
அஜித்திடம் ஜெயலலிதா அரசியலுக்கு வருவதை பற்றி பேசினாராம். ஆனால் அஜித்தோ இல்லை, கடைசி வரை படங்களில் நடித்துக் கொண்டே போயிடுவேன் என்று ஜெயலலிதாவிற்கு பதில் கூறியிருக்கிறார் அஜித்.
ரஜினி, கமல், விஜய் இவர்கள் எல்லாம் தானாக தேடி போய் அரசியலில் குதித்தார்கள். ஆனால் அரசியல் அஜித்தை தேடி வந்தும் அன்றிலிருந்து இன்று வரை அரசியல் இருந்து ஒதுங்கியே இருக்கிறார் அஜித். தன் ரசிகர் மன்றம் நிர்வாகிகள் அரசியலில் ஆதாயம் தேட பார்க்கிறார்கள் என்று தெரிந்து தான் தன் மன்றத்தையே கலைத்தார் அஜித்.
ஜெயலலிதா மறைந்த பொழுது திரையுலகமே அஞ்சலி செலுத்திய போது அஜித் விவேகம் படப்பிடிப்பிற்காக வெளி நாட்டில் இருந்தார். அங்கிருந்து வந்ததும் மெரினாவில் ஜெயலலிதாவிற்கு குடும்பத்தோடு அஞ்சலி செலுத்தினார் அஜித். இதுவும் ஜெயலலிதா மீது அஜித் காட்டிய அன்பு என்று தான் காட்டுகிறது. அஜித்துக்காக ஜெயலலிதா செய்த விஷயம் இப்போதும் பேசப்படுகிறது. சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி (இப்போது உயிருடன் இல்லை) அஜித்துக்கு நெருக்கமானவர். இருவரும் பல இடங்களுக்கு ஒன்றாக பயணம் செய்திருக்கிறார்கள். வெற்றியின் திருமணத்துக்கு அஜித் சென்றிருக்கிறார்.
அந்த சமயத்தில் ஜெயலலிதாவின் கான்வாயும் வந்திருக்கிறது. அஜித்தை பார்த்த ஜெயலலிதா உடனடியாக தனது கான்வாயை நிறுத்தி காரிலிருந்து இறங்கிவந்து அஜித்திடம் நலம் விசாரித்துவிட்டு சென்றாராம். இதுபோல் அவர் யாருக்குமே செய்ததில்லை என்று கூறப்படுகிறது.