spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரை2 நாள் சிபிஐ வேட்டை! எவிடன்சை வைத்து கதறிய புஸ்ஸி! கோட்டீஸ்வரன் நேர்காணல்!

2 நாள் சிபிஐ வேட்டை! எவிடன்சை வைத்து கதறிய புஸ்ஸி! கோட்டீஸ்வரன் நேர்காணல்!

-

- Advertisement -

கரூர் விவகாரத்தில் விஜய், பாஜகவிடம் வசமாக சிக்கிவிட்டார். பாஜகவின் சொல்பேச்சு கேட்டு அவர் நடக்காவிட்டால், சிபிஐ உரிய முறையில் விசாரிக்கும் என்று மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

கரூர் கூட்டநெரிசல் சம்பம் தொடர்பாக விஜய் தரப்பில் சிசிடிவி உள்ளிட்ட ஆவணங்கள் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டிருப்பதன் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- கரூர் கூட்டநெரிசல் சம்பவத்தை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகள், பனையூர் அலுவலகத்திற்கு சென்று சம்பவம் தொடர்பான ஆவணங்களையும், சிசிடிவி பதிவுகளையும் வழங்கிடுமாறு சம்மன் வழங்கி இருந்தனர். இந்த நிலையில், அந்த ஆவணங்களை வழங்கும் முன்பாக பிள்ளையார்பட்டி கோயிலில் வைத்து புஸ்ஸி ஆனந்த் வழிபாடு நடத்தியுள்ளார். கரூர் கூட்டநெரிசல் தொடர்பாக தவெகவினர் அச்சத்திலும், பதற்றத்திலும் இருக்கும் நிலையில், அவர்கள் கோயிலில் சென்று வழிபாடு நடத்தியுள்ளனர்.

தற்போது பிரச்சினை கரூரில் இருந்து டெல்லிக்கு சென்றுவிட்டது. டெல்லி அரசியல் என்பது மிகவும் மோசமானது. அது வாழவும் விடாது. சாகவும் விடாது. காலை சுற்றிய பாம்பை போன்று இருக்கும். விஜய்க்கு, இது புதிது. அவசியம் இன்றி இவர்களே கோரிக்கை வைத்து, சிபிஐக்கு மாற்றிவிட்டார். ஸ்டாலினை பொருத்தவரை பழிவாங்கும் அரசியல் செய்யக்கூடியவர் அல்ல. கலைஞர் குறித்து மிகவும் கடுமையாக விமர்சித்த சேகர்பாபுவுக்கே அமைச்சர் பதவி கொடுத்த அழகுபார்த்தவர். ஆனால் விஜய் தேவையில்லாமல் பாஜகவிடம் சென்று மாட்டிக் கொண்டார்கள். யார் பக்கம் உண்மை இருக்கிறதோ, அவர்களுக்கு தான் சாமி உதவும் என்று நான் நினைக்கிறேன்.

தவெக தரப்பில் சிபிஐ வசம் சிசிடிவி காட்சிகள், விஜய் பயன்படுத்திய கேரவன் சிசிடிவி வழங்கப்பட்டிருக்கிறது. பனையூர் அலுவலக நிர்வாகி குருசரணிடம் இரண்டாவது நாளாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். கரூர் கூட்டநெரிசல் விவகாரத்தில் மாநில, மத்திய அரசுகள் இரண்டுமே நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. விஜய், கரூரில் இருந்து சென்னை திரும்பியபோதே அவரை காவல்துறையினர் கைது செய்திருக்க வேண்டும். ஒரு விபத்து நிகழ்ந்தால் கூட குறைந்தபட்சம் சிலரை கைது செய்து விசாரணை மேற்கொள்வார்கள்.ஆனால் விஜய் கைதுசெய்யப்படவில்லை. மாறாக மாவட்ட செயலாளர் கைது செய்யப்பட்டார்.

சிபிஐ நியாயப்படி விசாரணை நடத்த வேண்டும் என்றால்? விஜயை சில நாட்கள் நேரில் அழைத்து விசாரிக்க வேண்டும். காரணம் கரூர் சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சி அவர்தான். சிபிஐ விசாரிக்கும்போது சில உண்மைகள் வெளியே வரும். அதை வைத்துக்கொண்டு அவர்கள் உண்மையை வெளிக்கொண்டு வருகிறார்களா? என்று பார்க்க வேண்டும். தவெக சிபிஐ விசாரணையை நம்புகிறது. தங்களுடைய பிரச்சினை அங்கே சரிசெய்யப்படும் என்றும் நினைக்கிறார்கள். ஆனால் பாஜக போடும் மெட்டிற்கு நீங்கள் ஆட வேண்டும். அப்படி இல்லாவிட்டால் சிபிஐ உரிய முறையில் விசாரிக்கும். அப்போது பாஜக எந்த மாதிரியான கட்சி என்பது அவர்களுக்கு தெரியவரும்.

கரூர் விவகாரம் : 3டி லேசர் ஸ்கேனர் உதவியுடன் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு..!!

விஜய் ஊழலை ஒழிக்கப்போவதாக சொல்கிற நிலையில், ஜனநாயகன் படத்தின் வெளியீட்டின் போது டிக்கெட்டுகளை நியாயமான விலையில் விற்க சொல்வாரா? என்று கேள்வி எழுகிறது. அவர் உண்மையிலேயே மக்களுக்காக தான் இருக்கிறார் என்றால், டிக்கெட்டுகளை நியாயமான விலைக்கு விற்க வேண்டும். முதல் நாள் முதல் காட்சியின்போதும் அந்த விலைக்கே விற்க வேண்டும். எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையை கண்டு ஊரே பற்றிக்கொண்டு எரிகிறது. பல லட்சம் வாக்குகளை திருடி விடுவார்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் இவர்கள் ஒன்றும் செய்யாமல் அப்படியே இருக்கிறார்கள்.

எஸ்.ஐ.ஆரை தடுக்க தவெக என்ன செய்துவிட்டது? சட்டமன்றத் தேர்தலில் வாக்குகளை பிளவுபடுத்தி, அதன் மூலமாக என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை.ஆனால் அவர்களால் ஒருபோதும் வெற்றி பெற முடியாது. விஜய் முதலமைச்சர் ஆவார் என்று சொல்கிறார்கள். ஆனால் எப்படி ஆவார் என்று சொல்ல மறுக்கிறார்கள். குறிப்பிட்ட எம்எல்ஏக்கள் இருந்தால்தான் முதலமைச்சர் ஆக முடியும். ஆனால் அது எப்படி வருவார்கள் என்றே சொல்ல மாட்டார்கள்.

திமுக, பாஜகவை எதிர்ப்பது போல விஜயும் எதிர்க்க வேண்டும். அல்லது குறைந்தபட்சம் எடப்பாடி பழனிசாமியிடம் சென்று, செங்கோட்டையனை நீக்க அவருக்கு எப்படி தைரியம் வந்தது என்று கேளுங்கள். அவர் யாராவது டெல்லிக்கு போனால் இது தான் நிலைமை என்று சொல்லிவிட்டார். அதுதான் நமக்கு தேவை. தமிழ்நாட்டின் தலையெழுத்தையோ, அரசியலையோ தமிழர்கள், தமிழ்நாட்டில் இருந்துதான் முடிவு எடுக்க வேண்டும். அது தவெகவும் இருந்தாலும் சரி இங்கிருந்து எடுங்கள்.

பாஜகவை எதிர்த்து தீர்மானம் போடுவது என்பது வெற்று அரசியலுக்கு தான். அதனால் எந்த பயனும் கிடையாது. இல்லாவிட்டால் தவெகவினரை டெல்லிக்கு அழைத்துச்சென்று  நாடாளுமன்றம் அருகே பாஜக செய்கிற தவறுகளை எதிர்க்கிறோம் என்று விஜய் சொல்ல வேண்டும். அதைவிடுத்து, நாங்கள் பாஜகவை எதிர்க்கிறோம் என்பது உண்மை அல்ல. சமீப நாட்களாக அவர்கள் பாஜக குறித்து எதுவும் பேசுவது கிடையாது. இனிமேலும் பேச மாட்டார்கள். அதற்கு காரணம் கரூர் சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணையாகும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ