spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரை“பண வாசம்”- பட்ஜெட்டில் விழும் பொன்னாடை - குரு மித்ரேஷிவா

“பண வாசம்”- பட்ஜெட்டில் விழும் பொன்னாடை – குரு மித்ரேஷிவா

-

- Advertisement -

குரு மித்ரேஷிவா

“பண வாசம்”- பட்ஜெட்டில் விழும் பொன்னாடை -  குரு மித்ரேஷிவா

கேள்வி :குரு, எவ்வளவு சம்பாதித்தாலும் போத வில்லை, செலவுக்கு மேல் வருமானம் வர என்ன வழி?

we-r-hiring

இந்த அத்தியாயத்திற்கு ஏன் இப்படியொரு தலைப்பு என்று கேட்கிறீர்களா? ஏன் எப்போதும் பட்ஜெட்டில் துண்டு விழவேண்டும். ஒரு மாற்றத்திற்கு பொன்னாடை விழலாமே என்றுதான்.:-)

தெருமுனையில் இருக்கும் பெட்டிக்கடைக்காரர் தினமும் ஆயிரத்திற்கும் ரெண்டாயிரத்திற்கும் கஷ்டப்படுகிறார். மளிகைக்கடைக்காரரோ பத்தாயிரம். இருபதாயிரம் புரட்டுவதற்குப் படாத பாடு படுகிறார். சரி, ஒரு பெரிய ஹோட்டல் முதலாளி? அவரும் தினமும் இரண்டு லட்சத்திற்குப் போராடுகிறார். இதுவே ஒரு பெரிய கார்பரேட் நிறுவனம் என்று எடுத்துக்கொண்டால் 500 கோடிக்கு அல்லாடிக்கொண்டிருப்பார்கள். அரசன் முதல் ஆண்டி வரை பற்றாக்குறைதான்.

எவ்வளவு சம்பாதித்தாலும் பட்ஜெட்டில் இடிக்கிறது. பத்தாயிரம் சம்பாதித்தால் மாதக் கடைசியில் பட்ஜெட் இடிக்கும். முப்பதாயிரம் சம்பாதித்தால் பிரச்சனையில்லாமல் இருக்கலாம் என்று நினைத்தால் நாற்பதாயிரம் செலவு வருகிறது. ஏன் இப்படி? இது கொஞ்சம் மாறினால் நன்றாக இருக்குமே? எல்லாருக்கும் இந்த ஆசை உண்டு இல்லையா?

இந்த மாதம் ஒரு ஐம்பதாயிரம் செலவு செய்யவேண்டும். ஏகப்பட்ட பொருட்கள் வாங்கவேண்டியிருக்கிறது என்று நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள். உங்கள் வருமானமோ நாற்பதாயிரம். ஆனால், திடீரென்று இந்த மாத வருமானம் இரண்டு லட்ச ரூபாய் வந்தால்?

ஐம்பதாயிரம் செலவு பண்ண வேண்டும் என்று நினைத்தவுடன் பிரபஞ்சம் உங்களுக்கு இரண்டு லட்சம் கொடுக்கிறது. ஆஹா! இரண்டு லட்சம் கிடைத்துவிட் டதே செலவை இன்னும் கொஞ்சம் அதிகமாக்கினால் என்ன என்று நினைத்து அடுத்த மாதம் ஒன்றரை லட்சம் செலவு செய்கிறீர்கள். உடனே பிரபஞ்சம் உங்களுக்கு மூன்று லட்சம் தருகிறது. அடுத்த முறை மூன்று லட்சம் செலவு செயலாம் என்று நினைத்தபோது, பிரபஞ் சம் ஐந்து லட்சம் கொடுக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். எப்படியிருக்கும்? மிகவும் நன்றாக இருக்கும் இல்லையா?

“பண வாசம்”- பட்ஜெட்டில் விழும் பொன்னாடை -  குரு மித்ரேஷிவா

செலவு செய்யவேண்டும் என்று நினைத்தவுடன் அதற்கான பணம் கையில் கிடைத்துவிட்டால்… நினைத்துப் பாருங்கள். அதற்காகத்தானே எல்லாரும் இரவும் பகலும் ஓடி ஓடி உழைத்துக்கொண்டிருப்பது.

சரி, ஒருவேளை இப்படி நம் சூழ்நிலை மாறி விட்டது என்றே வைத்துக்கொள்வோம். எப்படியிருக்கும்? இதெல்லாம் நடக்குமா? சாத்தியம்தானா என்று யோசிக்கிறீர்களா? நிச்சயமாக சாத்தியம். சந்தேகமே வேண்டாம்.

அதெப்படி நடக்கும்? இல்லவே இல்லை. ஏதோ கட் டுக்கதை சொல்கிறார் என்று நினைக்கிறீர்கள். அப்படித்தானே? கட்டுகதையல்ல இது. தடையில்லாத செல்வத்தைப் பெறுவதற்கு ஒரு சின்ன சூத்திரம் இருக்கிறது. அதைத் தெரிந்துகொண்டால், நான் கூறியது அனைத்தும் சாத்தியம் என்பது உங்களுக்கே புரியும்.

நினைவிருக்கட்டும். ஒரு செலவை நீங்கள் செய்வதனால் உங்கள் செல்வம் ஒருபோதும் குறையாது. செலவு செய்யும்போது உங்கள் மனநிலை என்ன? பணம் கரைகிறதே என்று பயந்து பயந்து செய்தால் எல்லாம் கட் டுக்குள் இருக்கும் என்று நினைக்கிறீர்கள். சிக்கனமாக செலவு செய்தால் கஷ்டம் இல்லாமல் இருக்கும் என்று நம்புகிறீர்கள். ஆக செலவு செய்யும்போது பயந்து கொண்டே செலவழிக்கிறீர்கள்?

பயந்து பயந்து செலவு செய்தால், வரவுக்குள் வாழ்ந்து விட முடியுமா? அது சாத்தியம் என்றால் இப்படி ஒரு கேள்வி கேட்கவேண்டிய நிலையே யாருக்கும் வந்திருக்காதே .

“எனக்கு மாதம் ஐம்பதாயிரம் வருமானம் வந்துகொண் டிருக்கிறது .வீட்டு வாடகைக்கு இவ்வளவு, மளிகைக்கு இவ்வளவு, படிப்புச் செலவு இவ்வளவு, இன்ஸூரன்ஸ் இவ்வளவு, வங்கித்தவணை இவ்வளவு. ஐயோ புதுசா எதாவது செலவு வந்துவிட்டால் பட்ஜெட் இடிக்குமே? காலேஜ் போகும் பயல் திடீரென்று பைக் வேண்ட மென்று கேட்டால் என்ன செய்வது? மனைவி திருமண நாளுக்கு வைர நெக்லஸ் வேண்டுமென்று கேட் டால் என்ன செய்வது? திடீரென்று அப்பாவிற்கு மருத்துவச் செலவு வந்துவிட்டால் என்ன ஆவது?” இப்படி விதம் விதமாக உங்களுக்கு மாதம் முழுக்க ஒரு பதட்டம் இருந்துகொண்டே இருக்கிறதில்லையா?

பட்ஜெட்டுக்குள் செலவு செய்யவேண்டும், பணத்தை எப்படியாவது மிச்சப்படுத்தி தேக்கி வைத்துவிட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு எப்போதுமே பட்ஜெட்டின் மீது ஒரு பதட்டம் இருக்கும். இந்தப் பணம் அப்படியே இருக்கவேண்டும். எனக்கு எந்தச் செலவும் வந்து விடக் கூடாது என்று ஒரு பதட்டம் வரும்போது என்ன நடக்கும் என்றால், பிரபஞ்சம் உங்கள் வருமானத்தை நிறுத்திவிடும். இதுதான் மிகப் பெரிய உண்மை.

பதட்டத்தோடு செலவு செய்யக்கூடாது. செலவு செய்வதில் பதட்டமே இருக்கக்கூடாது. செலவு செய்துவிட்டோமே என்ற பதட்டமும் இருக்கக்கூடாது.

அது எப்படி பதட்டம் இல்லாமல் செலவு பண்ணுவது என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

சூத்திரம் தெரிந்துவிட்டால் பதட்டம் வராது. தெரியாததால்தான் பதட்டம் வருகிறது.

செலவைக் கட்டுப்படுத்த நினைக்காமல் இந்தச் செலவுக்குத் தேவையான வருமானத்தை நீ கொடுத்துக் கொண்டே இரு. நான் செலவழித்துக்கொண்டே இருப்பேன் என்று மானசீகமாகச் சொன்னால், நமக்குத் தேவையான பணத்தை பிரபஞ்சம் கொடுக்கும்.“பண வாசம்”- பட்ஜெட்டில் விழும் பொன்னாடை -  குரு மித்ரேஷிவா

சரியாகச் சொல்வதானால், பிரபஞ்சம் நமக்குக் கொடுப்பது இல்லை. அது ஏற்கனவே இருக்கிறது. இது நன்றாகத் தெரிந்தவனுக்குப் புரிந்துவிடும். அப்படியென்றால் இதில் எங்கு பிரச்சனை வருகிறது? நீங்கள் செலவு எவ்வளவு செய்தாலும் பிரபஞ்சம் உங்களுக்குச் செல்வத்தைக் கொடுத்துக்கொண்டே இருக் கும். ஆனால், இப்போது செலவு செய்யும் பணத்தைக் கொடுக்காமல் வருமானத்தை நிறுத்தி கஷ்டத்தைக் கொடுக்கிறதே, பட்ஜெட்டில் துண்டு விழுகிறதே, இதற்கு என்ன காரணம்?

ஒருமுறை இதே கேள்வியோடு, ரங்கனும் ராஜனும் என்னை வந்து பார்த்தார்கள். அவர்களுக்கு மட்டுமல்ல. அங்கு கூடியிருக்கும் அனைவருக்கும் அனுபவப்பூர்வமாக இதைப் புரியவைத்தால் என்ன என்று தோன்றியது.

ராஜனை அழைத்து தெருமுனையில் இருக்கும் டீக்கடைக்குச் சென்று ஒரு டம்ளர் பால் யாசகமாக வாங்கி வா என்றேன். சரி என்று வேகமாகச் சென்றவன் சற்று நேரத்தில் முகத்தில் வழியும் நீரைத் துடைத்துக்கொண்டு வந்து, இப்படி செய்துவிட்டீர்களே என்று வருத்தப்பட்டான்.

அடுத்து ரங்கனை அழைத்து, நீ சென்று அதே கடை யில் ஒரு டம்ளர் பால் யாசகமாகப் பெற்று வா என்றேன். உடனே ராஜன் பதட்டமாக ஐயோ வேண்டாம் அந்த டீக்கடைக்காரன் கெட்ட கெட்ட வார்த்தையில் திட்டுகிறான் என்றான்.

ரங்கனை அழைத்து அவரது காதில் ஒரு ரகசியத்தைச் சொல்லி அனுப்பினேன். ரங்கன் சிறிது நேரத்தில் ஒரு டம்ளர் பாலுடன் ஒரு பன்னும் கூடுதலாகக் கொண்டு வந்தான்.

ராஜனுக்கு மட்டுமல்ல. அங்கு இருந்த அனைவருக்கும் ஆச்சர்யமாக இருந்தது.

ரங்கன் அந்தப் பாலையும் பன்னையும் அருகே இருந்த மர நிழலில் படுத்திருந்த ஒரு நாய்குட்டிக்கு வைத்துவிட்டு வந்தான். அது வேக வேகமாக வாலாட்டிக் கொண்டே அதைக் குடித்தது.

ரங்கன் என்னிடம், “எனக்கு அந்தச் சூத்திரம் புரிந்து விட்டது” என்றான். ராஜனுக்கு ஒன்றும் புரியவில்லை. இது எப்படி சாத்தியமானது என்று மற்றவர்கள் முழித்துக் கொண்டிருந்தார்கள்.

அப்போது நான் ராஜனிடம் சொன்னேன், “உன்னிடம் பால் யாசித்து வா என்று மட்டும்தான் சொன்னேன். ரங்கனிடம் அந்த நாய்குட்டிக்குக் கொடுப்பதற்கு பால் யாசித்துப் பெற்று வா என்று சொன்னேன்.”

ரங்கனும் மனதிற்குள், டீக்கடைக்காரர் ஒரு டம்ளர் பால் கொடுத்தால், அதைக்கொண்டு இந்த நாய்குட்டிக்குத் தரவேண்டும் என்று நினைத்துகொண்டே சென்று பால் கேட்டான் ஒரு நிமிடம் யோசித்தாலும், டீக்கடைக்காரர் பாலுடன் ஒரு பன்னும் சேர்த்துக் கொடுத்தார்.

நம்முடைய நோக்கம் நல்லதாக இருந்தால், நாம் நினைப்பதைவிட அதிகமாகவே இந்தப் பிரபஞ்சம் நமக்குக் கொடுக்கும். இதுதான் வற்றாத செல்வத்தைப் பெறுவதற்கான சூத்திரமும் கூட.

ஒரு பொருளுக்காகவோ, காரணத்திற்காகவோ அல்லது ஒரு சூழ்நிலைக்காகவோ நீங்கள் செய்கிற செலவு கொடுக்கும் தன்மையில் இருக்கவேண்டும். வாங்கும் தன்மையில் இருக்கக்கூடாது. இதுதான் சூட்சுமம். உங்கள் செலவுக்குப் பின்னால் ஆக்கப்பூர்வமான நோக்க மும் கொடுக்கும் தன்மையும் இருந்தால், அந்தச் செலவுக்கு மேல் செல்வத்தை இந்தப் பிரபஞ்சம் கொடுத்துக்கொண்டே இருக்கும்.

என்னுடைய சொந்த உதாரணத்திலிருந்து ஒன்றைச் சொல்கிறேன். எனக்கு அருளப்பட்ட இந்தப் பிரபஞ்ச ரகசியங்களை, வாழ்க்கையின் பேருண்மைகளை இந்த உலகத்திற்கே சொல்லவேண்டும் என்று நினைக்கிறேன். இந்த உண்மைகள் உலகில் உள்ள எல்லா மக்களுக்கும் போய்ச் சேர வேண்டும் என்பது என்னுடைய நோக்கம்.

இந்த ஞானம் எல்லாருக்கும் போய்ச் சேர வேண்டும். அதே சமயம் இதில் எனக்கு எந்தவித கால விரயமோ நேர விரயமோ ஏற்படக் கூடாது. எல்லா மக்களுக்கும் போய்ச் சேர வேண்டும். சென்னையில் இருக்கும் மக்களுக்கு ஒருநாள் ப்ரோகிராம் நடக்கிறது. மறுநாள் திருச்சியில் அதற்கடுத்த நாள் மதுரையில் அதற்கும் அடுத்த நாள் சிங்கப்பூரில் நடக்கிறது என்று வையுங்கள்.

நடந்தே சென்று சென்னையில் இருக்கும் மக்களுக்கு ஞானத்தைக் கொடுத்துவிட்டு, அங்கிருந்து திருச்சிக்கு நடந்து சென்று நிகழ்ச்சி நடத்துவது என்பது சாத்தியம் அல்ல. நான் எல்லாருக்கும் இதைக் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதையும் சீக்கிரமாகச் செய்ய நினைக்கிறேன் அதனால், இப்போது இந்த உண்மையைக் கொடுக்க வேண்டும் என்பதற்காக ஒரு வாகனத்தைக் கேட்கிறேன்.

எனக்கு ஒரு வாகனம் இருந்தால் நன்றாக இருக்கும். இந்த வாகனம் எனக்குக் கிடைத்தால் நான் இந்தக் காரியத்தைச் செய்வதற்கு, இந்த மகத்தான உண்மைகளை எல்லாருக்கும் கொடுப்பதற்கு வசதியாக இருக்கும் என்ற என் நோக்கத்தை அடிப்படையாக வைத்து, இந்தக் காருக்கு உண் டான செலவை நான் செய்தேன் என்றால், நான் பத்து லட்சம் செலவு செய்து கார் வாங்கினால் இந்தப் பிரபஞ்சம் எனக்கு இருபது லட்சம் கொடுக்கும்.

இதே காரை ஊரில் நாலு பேர் என்னைப் பற்றி பெருமையாகப் பேசவேண்டும். நான் பந்தாவாக சென்று இறங்கினால்தான் எனக்குப் பெருமை என்று என்னுடைய அகங்காரத்தை வளர்ப்பதற்காக இந்தக் காரை வாங்கி இந்தப் ப்ரோகிராம் செய்தேன் என்றால் எனக்கு அந்த பத்து லட்சத்தை பிரபஞ்சம் கொடுக்காது.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். செலவைக் கட்டுப்படுத்துவதனாலோ அல்லது செலவைச் சிக்கனமாகச் செய்வதனாலோ உங்களுக்கு செல்வம் வராது. அந்தச் செலவின் நோக்கம் சரியாக இருக்கவேண்டும்.“பண வாசம்”- பட்ஜெட்டில் விழும் பொன்னாடை -  குரு மித்ரேஷிவா

நோக்கம்தான் கர்ம வினையை உண்டுபண்ணுகிறது. எப்போது பிரபஞ்சத்தில் ஒரு சிருஷ்டியை நீங்கள் கேட்கிறீர்களோ அதற்குப் பின்னால் இருக்கக்கூடிய நோக்கம் சரியாக இருக்கவேண்டும். சரியான நோக்கம் தான் உங்களுக்கு அனைத்தையும் பெற்றுத்தரும். எதை வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், நோக்கம் சரியாக இருந்தால் அது கர்ம வினையை உண்டுபண்ணாது.

அப்படி கர்ம வினை ஏற்படாதபோது பிரபஞ்சம் உங்களுக்குச் செல்வத்தை கொடுத்துக்கொண்டே இருக்கும். நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யலாம். என்னுடைய குடும்பத்திற்காக, எனக்காக ஒரு வசதியான வீட்டைக் கட்டவேண்டும் என்று உங்களிடம் வந்து பணம் கேட்டால் தருவீர்களா? ஆனால், உலகத்திற்கு ஒரு பெரும் ஞானத்தை தரப்போகிறோம். அதற்கு ஒரு கோயில் கட்டப்போகிறேன் அல்லது அனைவருக்கும் கல்வி வழங்குவதற்காக இலவசமாக ஒரு கல்லூரி கட்டப்போகிறேன், அதற்குப் பணம் வேண்டுமென்று கேட்டால் இந்த உலகமே கொண்டுவந்து கொடுக்கும்.

ஒன்றை நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள். உங்களுக்காக நீங்கள் எதைச் செய்தாலும், உங்களுடைய அகங்காரத்திற்காகவோ, பேருக்காகவோ புகழுக்காகவோ நீங்கள் செய்யக்கூடிய செலவிற்கான பணத்தை உங்களுக்குப் பிரபஞ்சம் கொடுக்காது. ஆனால், அதே செலவை சரியான நோக்கத்திற்காகச் செய்யும்போது செல்வம் உங்களைத் தேடி வரும்.

ஒருவர் பாட்டு பாடுகிறார். இந்த உலகமே அவர் பாட்டை ரசிக்கிறது. உலக மக்கள் அனைவரும் அந்தப் பாட்டைக் கேட்டாலே ஆனந்தமடைகிறார்கள். எம். எஸ். சுப்புலக்ஷ்மி அவர்கள் என்றோ ஒருநாள் பாடிய சுப்ரபாதத்தை இன்றும் வீட்டில் கேட்கையில் அது மிகப் பெரிய ஆனந்தத்தைக் கொடுக்கிறது இல்லையா?

கேட்பவருக்கு ஆனந்தத்தைக் கொடுக்க வேண்டும் என்று நினைத்து அவர்கள் பாடும்போது பிரபஞ்சம் செல்வத்தைக் கொண்டுவந்து வாசலில் கொட்டும். இன்னும் இன்னும் என செல்வம் மலையாகக் குவியும். எந்த மகத்தான மேதையும் வெறும் பணத்திற்காக இசையை உருவாக்குவதில்லை. வணிக நோக்கங்களுடன் உருவாகும் இசை உங்களை மகிழ்விப்பதில்லை. இரவானால், கண்ணதாசனைத்தானே கேட்கிறீர்கள்? குத்துப்பாட்டைக் கேட்டுவிட்டா தூங்குகிறீர்கள்?

எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யுங்கள். எந்த நோக்கத்திற்காகச் செய்கிறோமோ அந்த நோக்கம் சரியாக இருக்கும் பட்சத்தில் அது கர்ம யோகமாக மாறி, அதிலிருந்து செல்வம் வந்துகொண்டே இருக்கும். இதுதான் சூட்சுமம்.

இதைத் தெரிந்துகொள்ளாமல் உல்டாவாக மாற்றி தன் னுடைய தனிப்பட்ட சௌகர்யங்களை மட்டுமே கவனத்தில் கொண்டு ‘பட்ஜெட் சரியாக வேண்டும்’ என நினைத்து, அஞ்சி அஞ்சி செலவு செய்கையில் பய உணர்வுதான் மிஞ்சுகிறது. இந்த பய உணர்வு ஏன் வருகிறது? உங்களுக்காக செலவு செய்வதால் வருகிறது. இன்னொருவருக்காகச் செலவு செய்கையில் இந்த பயம் உங்களுக்கு வராது.

‘தமக்கென முயலா நோன்றாட் பிறர்க்கென முயலுந ருண்மையானே’ எனும் புறநானுற்று வரி முன்வைக்கிற தமிழ்த் தரிசனம் அல்லவா இது. கடலைக் கட்டியாண்ட பாண்டியச் சக்கரவர்த்தி இளம்பெருவழுதிக்குச் செல்வம் இப்படித்தானே குவிந்தது.

தனக்கு என்று ஒன்றை எடுத்துக்கொள்ள நினைக்கும் போது, தன் செல்வம் குறையும்போது ஒருவருக்கு பயம் வரும். அந்த பய உணர்வு ஒரு அதிர்வை உருவாக்கும். அந்த அதிர்வு செல்வத்தைத் தடை செய்துவிடும் அல்லது செலவை அதிகரித்துவிடும். கொடுக்க வேண்டும் என்று நினைக்கும்போது செல்வம் குறைகிறதே என்ற பயமே இருக்காது. அது மனதிற்குள் எதிர்மறை எண்ணங்கள் உருவாகாமல் தடுத்துவிடும்.

நோக்கத்தை சரியாக வைத்து செலவு செய்யுங்கள். எவ்வளவு செலவு செய்கிறீர்களோ அதைவிட பல மடங்கு செல்வம் உங்களுக்கு வந்துகொண்டே இருக்கும். கவலையே படவேண்டாம். இதுதான் சூட்சுமம்.

தேஜஸ்வியால் முதல்வராகவோ, ராகுல் காந்தியால் பிரதமராகவோ ஆக முடியாது – அமித்ஷா பேச்சு..

MUST READ