Homeசெய்திகள்கட்டுரைஆளுநர் வழக்கில் ஜனாதிபதி எழுப்பும் கேள்விகள்! முதல்வர் எதிர்ப்பு ஏன்? விளக்கும் வழக்கறிஞர் வில்சன்!

ஆளுநர் வழக்கில் ஜனாதிபதி எழுப்பும் கேள்விகள்! முதல்வர் எதிர்ப்பு ஏன்? விளக்கும் வழக்கறிஞர் வில்சன்!

-

- Advertisement -

ஆளுநருக்கு காலக்கெடு விதித்த விவகாரத்தில் குடியரசுத் தலைவர் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு, ஏற்கனவே உச்சநீதிமன்றம் ஏற்கனவே பல்வேறு தீர்ப்புகளில் விளக்கம் அளித்து விட்டதாக மூத்த வழக்கறிஞரும், திமுக மாநிலங்களை உறுப்பினருமான வில்சன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் ஆளுநர்களுக்கு எதிராக போர்க்கொடி- எதிர்கட்சிகள் திட்டம்

உச்சநீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக ஜனாதிபதி 14 கேள்விகளை எழுப்பி, விளக்கம் கோரியுள்ளது தொடர்பாக மூத்த வழக்கறிஞர் வில்சன் யூடியுப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- ஆளுநர்களுக்கு மசோதா மீது முடிவு எடுக்க கால நிர்ணயம் செய்யப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யாமல், ஜனாபதி மூலம் விளக்கம் கோரியுள்ளது. இந்த விவகாரத்தில் மக்களை குழப்பும் எண்ணத்தோடு மத்திய அரசு செயல்படுகிறது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் இனி ஜனாதிபதிக்கோ, ஆளுநருக்கோ வானளாவிய அதிகாரம் என்பது கிடையாது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மசோதாக்களுக்கு முடிவு எடுக்க வேண்டும். இதனை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இனி வரும் காலங்களில் பாஜக அல்லாத மாநில அரசுகள் மசோதாக்கள் நிறைவேற்றி அனுப்பினால், ஆளுநர் 3 மாதங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும். அப்படி முடிவு எடுக்காவிட்டால் உச்ச நீதிமன்றத்திற்கு செல்லலாம். அப்படி செல்கிறபோது ஆளுநர் எந்த நோக்கத்திற்காக மசோதாவுக்கு அனுமதி வழங்கவில்லை என்ற உண்மை வெளிப்பட்டு விடும். அதனால் அவர்கள் பயப்படுகிறார்கள்.

சென்னை பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா- மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார் குடியரசுத் தலைவர்!
Photo: President Of India

ஆளுநர் அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஒரு வேளையும் செய்யாமல் மக்களுக்காக கொண்டு வரும் சட்டங்களை எப்படியாவது நிறுத்திவைத்து, மாநில அரசுக்கு கெட்டப் பெயரை ஏற்படுத்த வேண்டும் என்கிற எண்ணம் இருந்தது. இனி அதை செய்ய முடியாது. சில ஆளுநர்கள் ஒரு மாநிலத்திற்கு வருகிற போது தங்களை யாரும் கேள்வி எழுப்ப முடியாது . தான் நினைத்ததுதான் சட்டம் என்று நினைத்தார்கள். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு காரணமாக இனி அப்படி செய்ய முடியாது. அவர்கள் மக்களுக்கும், நீதிமன்றத்திற்கும் கட்டுப்பட்டவர்கள் ஆவர். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு காரணமாக மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு வந்துவிட்டது. இதனால் இனி மசோதாக்களை நிறைவேற்றாமல் மக்கள் கேள்வி எழுப்புவார்கள் என்கிற அச்சம் வந்துவிட்டது. அதனால் இதுபோன்று ஜனாதிபதி மூலம் விளக்கம் கோரினால், அதை காரணம் காட்டி மசோதாக்களை நிலுவையில் வைக்கலாமா என்று நினைக்கிறார்கள். ஆனால் அது தவறானது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அவர்களை கட்டுப்படுத்தும். என்னதான்  ஜனாதிபதி மூலம் கேள்வி எழுப்பினாலும் எந்த விதத்திலும் இந்த தீர்ப்பை பாதிக்காது.

வாக்காளர்கள் அனைவரும் கலந்து கொண்டு ஜனநாயக கொண்டாட்டத்தை அழகாக வேண்டும் -  பிரதமர் நரேந்திர மோடி

உச்சநீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக ஜனாதிபதி  கேள்வி எழுப்பியதற்கு, முதலமைச்சர் தனது கண்டனத்தை தெரிவித்திருந்தார். அதற்கு காரணம் ஜனாதிபதி விளக்கம் கோரியுள்ள 14 கேள்விகளும்  ஏற்கனவே உச்சநீதிமன்ற தீர்ப்புகளில் சொல்லியாகி விட்டது. ஆளுநர், குடியரசுத் தலைவரின் வேலை என்ன? என்று அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளது. அரசியலமைப்பு சட்டம் வந்து 75ஆண்டுகள் வந்துவிட்டது. உச்ச நீதிமன்றம் பல்வேறு தீர்ப்புகளில் ஆளுநர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அமைச்சரவை பரிந்துரை அடிப்படையில்தான் நடக்க வேண்டும் என்று சொல்லி விட்டனர். கடந்த 1973ஆம் ஆண்டு சம்சேத் சிங் என்பரது வழக்கிலேயே இதை சொல்லி விட்டனர். 1984ஆம் ஆண்டில் 9 மாநில அரசுகளை கலைத்தார்கள். அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்றம், ஆளுநர்கள் எப்படி எல்லாம் நடந்துகொள்ள வேண்டும். அவர்களுடைய பணிகள் என்ன என்ன? அதை மீறினால் உச்சநீதிமன்றமே தலையிட்டு, சட்டப்பிரிவ  142ன் படி அரசை கலைத்தது செல்லாது என்று சொல்லி மீண்டும் அரசுகளை கொண்டுவந்தார்.

இதேபோல், 2016ல் நபம் தபியா என்கிற புகழ்பெற்ற வழக்கில்,  ஆளுநரின் பணிகள் என்ன? அவர் தன்னிச்சையாக எதில் செயல்பட முடியும் என்று விளக்கியுள்ளனர். அவ்வளவு தூரம் உச்சநீதிமன்றம் விளக்கம் அளித்துள்ள நிலையில், ஜனாதிபதி எழுப்பியுள்ள 14 கேள்விகளையும் பார்த்தோம் என்றால்? ஏன் இப்படி உச்ச நீதிமன்றத்தின் நேரத்தை வீணாக்குகிறீர்கள். ஜனாதிபதி மூலம் கேள்வி எழுப்பிவிட்டு பின்னால் ஒளிந்து கொண்டுள்ளது மத்திய அரசுதான். சட்டப்பிரிவு 143ன் கீழ் ஜனாதிபதி தன்னிச்சையாக கேள்வி எழுப்பி இருக்க மாட்டார்கள். அவர்களுக்கு ஆலோசனை வழங்குகிற மத்திய அமைச்சரவை எழுதி கொடுப்பதை ஜனாதிபதி கையெழுத்து போட்டு அனுப்புகிறார். அதன் காரணமாக ஜனாதிபதிக்கு எதிராக கண்டனம் தெரிவிக்கக்கூடாது என்று எப்படி சொல்ல முடியும். எஸ்.ஆர்.பொம்மை வழக்கிலே உச்சநீதிமன்றமே கண்டனம் தெரிவித்து, கலைக்கப்பட்டது தவறு என்று சொல்லி ஆட்சியை மீண்டும் ஏற்படுத்தி உள்ளனர். எனவே முதலமைச்சர் சரியான முறையில்தான் எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார்.

இழப்பீடு வழங்க காப்பீட்டு நிறுவனங்களுக்கு உத்தரவு! உச்ச நீதிமன்ற நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான அமர்வு

ஜனாதிபதி எழுப்பியுள்ள கேள்விகள் அனைத்தும் நாடாளுமன்ற முறையை முறியடிக்கும் விதமாகவும், கூட்டாட்சி தத்துவத்தை முறியடிக்கும் விதமாகவும், மாநில சுயாட்சியை முறியடிக்கும் விதமாகவும் தான் அமைந்துள்ளன. ஆளுநர்கள் எந்தவித வேலையும் செய்யாமல் 5 ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டு செல்லலாம் என்பது போன்றுதான் கேள்விகள் உள்ளன. அதனால்தான் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஜனாதிபதி மத்திய அரசு சொல்வதற்காக கண்ணை மூடிக்கொண்டு செய்யக்கூடாது. ஏன்? எதற்கு? என்று கேள்வி எழுப்ப வேண்டும். மத்திய அரசு கேள்விகளை கொடுக்கிறபோது, ஏற்கனவே இந்த வழக்கில் கொடுக்கப்பட்ட தீர்ப்பில் சொல்லி விட்டார்களே என்று ஆராய வேண்டும். இந்த நடவடிக்கை உச்ச நீதிமன்றத்தில் பின்வாசல் வழியாக சென்று ஆளுநர் வழக்கில் தீர்ப்பு தவறானது என்று சொல்லுங்கள் என்பது போன்று உள்ளது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ