spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைபீகார் பேரணியில் ராகுல் போட்ட புது குண்டு! மிரண்டு போன தேர்தல் அதிகாரி! பீதியில் பிரதமர்!

பீகார் பேரணியில் ராகுல் போட்ட புது குண்டு! மிரண்டு போன தேர்தல் அதிகாரி! பீதியில் பிரதமர்!

-

- Advertisement -

வாக்கு திருட்டு தொடர்பான எதிர்க்கட்சிகளின் போராட்டம் சர்தேச நாடுகளின் கவனத்தை பெற்று, ஐ.நா. சபை வரை செல்லும் என்று உச்சநீதிமன்ற வழக்கறிஞர் காஸ்ட்ரோ தெரிவித்துள்ளார்.

we-r-hiring

வாக்கு திருட்டுக்கு எதிரான ராகுல்காந்தியின் பேரணி மற்றும் தேர்தல் ஆணையத்தின் பதில் உள்ளிட்டவை குறித்து டெல்லியை சேர்ந்த உச்சநீதிமன்ற வழக்கறிஞர் கேஸ்ட்ரோ யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- வாக்கு திருட்டுக்கு எதிராக ராகுல்காந்தி பீகாரில் பேரணியை தொடங்கி இருக்கிறார். அதேவேளையில் செய்தியாளர்களை சந்தித்த தேர்தல் ஆணையர்கள், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ராகுல்காந்தி அவதூறுகளை பரப்புவதாக தெரிவித்துள்ளனர். தேர்தல் ஆணையம் என்பது பாஜக, ஆர்எஸ்எஸ்-ன் கைப்பாவையாகும். அவர்கள் சொல்வது அனைத்தும் பச்சையான பொய். ராகுல் காந்தி டெல்லியில் இரண்டு முறை வாக்கு மோசடி நடைபெற்றது தொடர்பாக தெளிவாக விளக்கம் அளித்துள்ளார். முதலாவது தனது வீட்டில் இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்களுக்கு விளக்கம் அளித்தார். இரண்டாவது டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் சட்டப்பிரிவு மாநாட்டிலும் ராகுல்காந்தி பங்கேற்று தேர்தல் ஆணைய மோசடிகளை எடுத்துரைத்தார். அதன் பிறகு அனைத்து ஊடகங்களையும் அழைத்து வாக்கு மோடி எவ்வாறு நடைபெற்றது என்றும், அதற்கான ஆதாரங்களையும் வெளியிட்டார்.

இந்நிலையில், பீகாரில் வாக்காளர் உரிமை பேரணியை தொடங்கியுள்ள ராகுல்காந்தி பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அதில் வாக்காளர் பட்டியலில் போலியான நபர்களை சேர்ப்பதாகவும், பாஜகவுக்கு சாதகமான ஒரு வாக்காளர் பட்டியலை தயாரிப்பதாகவும் ராகுல் குற்றம்சாட்டியுள்ளார். பீகாரில் நவம்பர் மாதம் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர் சிறப்பு திருத்த நடவடிக்கையை தற்போது நடத்துவது ஏன்?  மகாதேபுரா தொகுதியில் நடைபெற்றது போன்று, நாடு முழுவதும் வாக்கு திருட்டு நடைபெற்றுள்ளது. கடந்த 2014, 2019 மற்றும் 2024 என்று மூன்று மக்களவை தேர்தல்களிலும், வாக்கு திருட்டு மூலமாகதான் மோடி வெற்றி பெற்றுள்ளார். எதுவும் ஜனநாயக ரீதியாக பெற்ற வெற்றி கிடையாது. பீகாரில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மோடி பிரச்சாரத்திற்கு தயாராகிவிட்டார். காங்கிரஸ் கட்சி பிரச்சாரத்தை தொடங்கி மேற்கொண்டு வருகிறது. SIR நடவடிக்கையில் என்ன என்ன மோசடிகள் செய்கிறார்கள் என்று பொதுமக்களிடம் எடுத்து வைத்துள்ளார்.

அத்துடன், SIR என்கிற பெயரில் 6.5 லட்சம் பேரை தமிழ்நாட்டில் கொண்டுவந்து வாக்காளர்களாக சேர்க்க உள்ளனர். இதன் மூலம் தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரிய மோசடியை செய்யப் போகிறார்கள். அவர்கள் 2021 சட்டமன்றத் தேர்தலில் நாங்கள் மூன்றாவது இடத்தில் இருந்தோம். 2024 மக்களவை தேர்தலில் பல இடங்களில் 2வது இடத்திற்கு வந்துவிட்டோம். 2026 தொகுதியில் நாங்கள் தேர்தலை வென்றுவிட்டோம் என்று 50 இடங்களில் பாஜக எம்எல்ஏக்கள் வருவார்கள். எழுதி வைத்துக்கொள்ளுங்கள். எடப்பாடி பழனிசாமி, பாஜகவின் பி டீம் விஜய், சீமான் போன்றவர்கள் பாஜகவிடம் பணத்தை வாங்கிக் கொண்டு தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்கிறார்கள். 5 லட்சம் கோடி தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மார்க்கெட் ஆகும். அதை கைப்பற்றுவதற்காக தமிழ்நாட்டில் 5 ஆயிரம் கோடியை அதிமுக, விஜய் போன்றவர்கள் மீது முதலீடு செய்துள்ளனர். பாஜக 5 கோடியை முதலீடு செய்து, 5 லட்சம் கோடியை அம்பானிக்கும், அதானிக்கும் வழங்க வேண்டும் என்பதுதான் பாஜக – ஆர்எஸ்எஸ்ன் திட்டமாகும். அதற்கு வாக்கு மோசடியை அவர்கள் நம்புகிறார்கள். எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக 100 சீட்டுகள் கொடுத்தாலும், அதில் 50 இடங்களில் பாஜக வெற்றி பெறும்.

இந்த அச்சுறுத்தலை தான் பீகாரில் ராகுல்காந்தி மக்களிடம் எடுத்துச்சொல்கிறார். பீகாரில் நிதிஷ்குமார், தேஜஸ்வி யாதவ் போன்றவர்களை காலி செய்ய வேண்டும்.  பாஜக ஆட்சிக்கு வர வேண்டும். எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையின் நோக்கம் அதுதான். பீகாரில் நீக்கப்படும் 6.5 லட்சம் வாக்காளர்களை தமிழ்நாட்டில் சேர்க்கப் போகிறார்கள். மகாதேவபுரா தொகுதியில் நடைபெற்றது போன்ற மோசடி, பீகாரில் நடைபெற போகிறது என்பதை ராகுல்காந்தி உணர்ந்துவிட்டார். இதை நாட்டு மக்கள் உணர்ந்து வெகுண்டு எழுந்து போராட வேண்டும். வாக்கு திருட்டு தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு பாஜக உத்தரவிட்டு உள்ளது. இல்லாவிட்டால் நாடு முழுவதும் போராட்டம் வெடிக்கும் என்று இதனை செய்ய சொல்லியுள்ளனர். அதன் பேரில்தான், தேர்தல் ஆணையர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். ராகுல்காந்தி குற்றச்சாட்டை முன்வைத்து இத்தனை நாட்கள் கழித்து தேர்தல் ஆணையம் செய்தியாளர்களை சந்தித்தது ஏன்?

ஆர்எஸ்எஸ் :‘இந்தியாவின் அழியாத கலாசாரத்தின் ஆலமரம்’- பிரதமர் மோடி புகழாரம்

ராகுல்காந்தி இறந்து போன வாக்காளர்களின் வாய்மொழி ஆதாரங்கள், தேர்தல் ஆணைய ஆவணங்களுடன் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதன் மூலம் உலக அளவில் மத்திய அரசுக்கு அழுத்தம் ஏற்படும். இது உலக பிரச்சினையாக மாறி ஐ.நா.சபை வரைக்கு செல்லும். வரும் செப்டம்பர் 17ஆம் தேதி மோடிக்கு 75 வயது நிறைவு பெறுகிறது. அதற்கு பிறகு மோடிக்கு, ஆர்எஸ்எஸ் மூடு விழா நடத்தி விடுவார்கள். சர்வதேச சக்திகளும் அதை நடத்திவிடுவார்கள். அதற்காக இன்றைக்கு எல்லாம் பூதாகரமாக வெடித்துள்ளது. பீகாரில் வாக்கு திருட்டுக்கு எதிராக பேரணியை தொடங்கியுள்ள ராகுல்காந்தி, பாஜக – ஆர்எஸ்எஸ் சதிவலையில் மக்கள் சிக்கிவிடக்கூடாது என்று வலியுறுத்தியுள்ளார். பீகாரில் வாக்குச்சாவடியை கைப்பற்றுதல், வாக்குக்கு பணம் கொடுப்பது, வாக்கு எந்திரத்தில் மோசடி செய்வது என்று பல்வேறு முறைகேடுகள் அரங்கேற உள்ளன. எஸ்.ஐ.ஆர் முறையில் செய்த மோசடிகள் ஆகியவற்றை மக்களிடம் அம்பலப்படுத்தும் பணியை மேற்கொள்கிறார், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ