Homeசெய்திகள்கட்டுரைரவி ஊட்டி மீட்டிங் நடக்காது! தடுத்து நிறுத்தும் ஸ்டாலின்!

ரவி ஊட்டி மீட்டிங் நடக்காது! தடுத்து நிறுத்தும் ஸ்டாலின்!

-

- Advertisement -

ஊட்டியில் ஆளுநர் ஆர்.என்.ரவி நடத்தும் துணை வேந்தர்கள் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தடுத்து நிறுத்துவார் என்று திராவிட இயக்க ஆய்வாளர் வல்லம் பஷிர் தெரிவித்துள்ளார்.

துணை வேந்தர்கள் மாநாடு குறித்து வல்லம் பஷிர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறி இருப்பதாவது:- ஊட்டியில் துணை வேந்தர்கள் மாநாட்டை நடத்துவதன் மூலம் மீண்டும்  மீண்டும் சர்ச்சைகளுக்கு வித்திடுகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. இதுவரை நாட்டில் ஆளுநர்களின் அதிகாரம் இவ்வளவுதான் என்று வரையறை செய்தது இல்லை. இதுதான் நீதிமன்றம் இதுபோன்ற தீர்ப்பை வழங்கியுள்ளது. எப்படி எல்லாம் ஆளுநர் இயங்க வேண்டும் என்கிற வழிகாட்டு நெறிமுறையை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. ஒரு மாநிலத்தின் உச்சபட்ச அதிகாரம் யாருக்கு என்றால் முதலமைச்சருக்கு தான் உள்ளது. ஒரே நேரத்தில் மற்றொரு அரசாங்கத்தை நடத்தாதீர்கள் என்பதுதான் நமது கோரிக்கையாக இருந்தது. இந்த வேண்டுகோளை புறக்கணித்து விட்டுதான், ஆர்.என்.ரவிக்கு வானளாவிய அதிகாரம் உள்ளதை போன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். துணை வேந்தர்கள் நியமனத்தில் இதுவரை பின்பற்ற நடைமுறை இனிமேல் பின்பற்றப்படாது என்று நீதிமன்ற தீர்ப்பு சொல்கிறது. அப்படி என்றால் ஆளுநர் அதில் இன்வாலிட் ஆகிவிட்டார்.

முன்பு தேடுதல் குழு அமைக்கப்பட்டு, பரிந்துரை பட்டியலை செனட்டிற்கு வழங்கும். அந்த செனட் ஆளுநரிடம் ஒப்புதலை பெற வேண்டும். தற்போது முதலமைச்சர் நேரடியாக துணை வேந்தரை நியமிக்கப் போகிறார். துணை வேந்தர்களை அழைத்து ஒரு கூட்டத்தை நடத்திவிட்டார். பல்கலைக்கழகங்களில் எப்படி கற்பித்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று நேரடியாகவே உத்தரவை பிறப்பித்துவிட்டார். கடந்த காலத்தில் துணை வேந்தர்களை, ஆளுநர் அழைத்துப் பேசினார். சேலம் பெரியார் பல்கலைக்கழக விவகாரத்தில் எப்படிபட்ட அணுகுமுறை துணை வேந்தர்களிடம் இருந்தது. பதிவாளர்கள் எப்படி நடந்து கொண்டனர் என்று பார்த்தோம். பல்கலை. நிதியை எடுத்து அறக்கட்டளை தொடங்கினார்கள். ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஷாகா வகுப்புகள் நடைபெறும் என்று துணை வேந்தர் சுற்றறிக்கை அனுப்பினார்.

பெரியார் பல்கலைக்கழகத் தேர்வுகள் தள்ளிப்போக காரணம் என்ன?- விரிவான தகவல்!
File Photo

அதெல்லாம் எதை பொருட்டு நடைபெற்றது என்றால் 4 பல்கலை. துணைவேந்தர்களை தன்னை ராஜ்பவனில் சந்திக்குமாறு ஆளுநர் அறிவிப்பை வெளியிட்டார். அதற்கு பின்னர் அந்த 4 பல்கலைகளும் சர்ச்சைக்குரிய பல்கலை.களாக மாறியுள்ளது. இப்போது திடீரென வந்து துணை வேந்தர்கள் மாநாடு நடத்தப்போவதாக அறிவித்தார். ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கான மசோதா தொடர்பாக பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, நான் மசோதனை நிறுத்தி வைத்திருக்கிறேன் என்றால் மசோதாவை நிராகரித்துவிட்டேன் என்றுதான் அர்த்தம் என்று சொன்னார். குடியரசுத் துணை தலைவர் ஜெகதீப் தன்கர் நீதிமன்றங்கள் எப்போதும் சட்டம் இயற்றும் மாமன்றங்களாக இருக்க முடியாது. நாடாளுமன்றம் தான் சட்டம் இயற்றும் மாமன்றமாக இருக்க முடியும் என்று சொன்னார். அதைதான் நாமும் சொல்கிறோம். சட்டப்பேரவைதான் சட்டம் இயற்றுகின்ற மன்றங்களாக இருக்க முடியும். அவர் நீதிமன்றத்திற்கு எதிராக சொல்கிறார். நாங்கள் ஆளுநருக்கு எதிராக சொல்கிறோம்.

சமத்துவத்தை நோக்கி நமது சமூகம் நகர வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
 

ஜெகதிப் தன்கர் இன்னும் தன்னை ஆளுநராகவே நினைத்துக் கொண்டிருக்கிறார். தான் குடியரசுத் துணை தலைவரானதை மறந்துவிட்டார். ஆளுநர் அழைத்து இந்த துணை வேந்தர்கள் மாநாட்டிற்கு ஜெகதிப் தன்கர் வருவார் என்றால், அவர் இந்த நாட்டின் சட்டத்திற்கு எதிராக  நடந்துகொள்கிறார் என்றுதான் பொருள்படும். ஏனென்றால் இந்த மாநாடு சட்டத்திற்கு புறம்பாக நடைபெறுகிற மாநாடு ஆகும். இன்னொன்றையும் சொல்கிறேன். முதலமைச்சர் இதற்கு முற்றுப்புள்ளி வைப்பார் என்று உறுதியாக நம்புகிறேன். துணை வேந்தர்கள் இனிமேல் போக வேண்டுமா? வேண்டாமா? என்று உயர்கல்வித்துறை அமைச்சர்தான் முடிவு செய்ய முடியும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ