பெரிய அளவிலான தலித் கிறிஸ்துவ இளைஞர்கள், ஆதவ் அர்ஜுனா மூலம் விஜயிடம் சென்றுவிட்டதாகவும், இதனால் தான் விஜய் மீது திருமாவளவன் கடும் விமர்சனங்களை முன்வைப்பதாகவும் மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- கரூர் சம்பவத்தில் விஜய் திருப்தியாக இல்லை என்பது அவருடைய தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கருத்து மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது. விஜயின் மாமா நாட்டிலேயே மிகப்பெரிய ஷிப்பிங் கம்பெனி நடத்துகிறார். அதில் எஸ்.ஏ.சந்திரசேகரும் இயக்குநராக உள்ளார். விஜய் மாமா உள்ளிட்டோருடன் எஸ்.ஏ.சி பேசியபோது, தற்போது நடந்த சம்பவம் எல்லாம் சும்மா. 41 பேரின் மரணம் என்பதை தாண்டி இதைவிட ஒரு பெரிய சம்பவத்தில் விஜயை மாட்ட வைப்பார்கள் என்று சொல்லியுள்ளார். 50 வயதுக்கு மேல் தேவையில்லாத நபர்களுடன் சேர்ந்து, தேவையில்லாத சகவாசம் வைத்துள்ளார். இதைவிட மோசமான சம்பவம் ஒன்று நடைபெறும். அதிலும் விஜயின் பெயர் அடிபடும் என்று சொல்கிறார்.
எஸ்.ஏ.சி கலைஞருக்கு நெருக்கமானவர். திமுக அனுதாபி. அவரது பார்வையில் விஜய் முழுக்க அதிமுக அனுதாபியாக இருக்கிறார். கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு விஜய் மிகவும் அதிர்ச்சியாக உள்ளார். இந்த நிகழ்வோடு தன்னுடைய அரசியலை முடித்துக்கொண்டிருக்கலாம். நல்லது செய்யலாம் அரசியலுக்கு வந்த தனக்கு இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என்று நினைக்கிறார். ஆதவ் அர்ஜுனாவின் திட்டம் வேறாக இருந்தது. அந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக தான் விஜயை பிளானுக்குள் கொண்டு வந்தனர். இதை தான் விஜய் குறிப்பிட்டு பேசுகிறார்.
பத்திரிகையாளர் சார்லஸ், ஆதவ் அர்ஜுனா, அதற்கு பிறகு ஒரு டீம் டெவலப் ஆகிறது. விஜயை கேப்ச்சர் செய்து, அரசியல் கட்சிக்குள் கொண்டு வருவது. அதன் மூலம் விஜயை வைத்து பயணித்து வருகிறார்கள். கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் புகைப்படங்களுக்கு தற்போது தான் தவெகவினர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். கரூருக்கு விஜய் நேரடியாக செல்வது தான் திட்டம். ஆனால் அதற்கான நடவடிக்கைகள் எதுவும் நடக்கவில்லை. இதற்கு பிறகு 2 மாவட்டங்களுக்கு சேர்த்து விஜய் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள்.
கரூர் சம்பவத்தை தொடர்ந்து அதிமுக, பாஜக, விஜய் கூட்டணி உருவானது போன்ற மாயை உருவாகியுள்ளது. கேரளாவில் பாஜகவை வளர்க்க சிரியின் கிறிஸ்டியன் என்கிற கிறிஸ்தவ அமைப்பை பாஜக கையில் எடுத்தது. அதன் காரணமாகவே திருச்சூரில் சுரேஷ் கோபி எம்.பி. ஆகினார். அதேபோல், தமிழ்நாட்டில் பாஜகவை வளர்க்க ரோமன் கிஸ்தவப் பிரிவை சேர்ந்த விஜயை கையில் எடுக்கிறார்கள். விஜயுடன் வேவ் லென்த்தில் பெரிதாக நின்றது தலித் கிறிஸ்தவ இளைஞர்கள். ஒரு பெரிய செட் விஜயிடம் சென்றுவிட்டது. அதனால் தான் திருமாவளன் விஜயை எகிறி அடிக்கிறார்.
விசிகவில் ஏற்கனவே இருந்ததால், அதை செய்வது ஆதவ் அர்ஜுனாவுக்கு மிகவும் எளிதான விஷயமாகும். அடுத்தக்கட்டமாக வேறு எதாவது சிறிய கலவரத்தை ஏற்படுத்துவார்கள். விஜய் பிரச்சார கூட்டத்தில் விஜய் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அங்கே கலவரம் வெடிக்கும். அதன் மூலம் பிரச்சினை ஏற்படுத்த ஆதவ் அர்ஜுனா திட்டமிடுகிறார் என்று எஸ்.ஏ.சந்திர சேகர் சந்தேகப்படுகிறார்.
பாஜக – தவெக கூட்டணி உடன்பாடு ஆகிவிட்டதாகவும், இதனை குருமூர்த்தி ஒருங்கிணைப்பதாகவும் ஒரு கருத்து உள்ளது. மற்றொன்று தவெக தரப்பில் 100 இடங்கள் கேட்கப்படுவதாக சொல்லப்படுகிறது. பவன் கல்யாண் பார்முலாவை ஏற்றுக் கொண்டு துணை முதலமைச்சராக வந்துவிடுங்கள் என்று சொல்கிறார்கள். விஜய்க்கு ஆத்திரம் எல்லாம், 4 படங்களில் நடித்துவிட்டு உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆகிவிட்டார் என்பதுதான். அவர் கலைஞரின் பேரன் என்பதும், அவரை திமுக ஆதரிக்கிறது என்பதும் தெரியவில்லை. ஆனால் சிரஞ்சீவி பார்முலாவா? பவன் கல்யாண் பார்முலாவா? என்பது பிரச்சினையாக உள்ளது.
எடப்பாடி முதல்வர், நயினார், விஜய் ஆகியோர் துணை முதலமைச்சர் என்பதை வெற்றி பெற்றதற்கு பிறகு வேண்டுமெனில் சொல்லலாம். ஆனால் வெற்றி பெறுவதற்கு முன்னதாக சொன்னால் ஏற்க மாட்டார்கள். மொத்தத்தில் இவர்கள் எல்லாம் குழப்பத்தில் தான் இருக்கிறார்கள். விஜயிடம் கூட்டணி தொடர்பாக பேச ஆட்கள் இல்லை. இவற்றை எல்லாம் ஆதவ் அர்ஜுனா தான் கசியவிட்டு கொண்டு செல்கிறார். இருந்தபோதும் இதுவரை கூட்டணி பேச்சுவார்த்தைகள் இறுதியாகவில்லை, இவ்வாறு அவர் தெரிவித்தார்.