மதுரை மாநாட்டில் கச்சத்தீவை மீட்போம் என விஜய் அறிவித்துள்ளதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள இலங்கை அரசு, விஜய் படங்களை தங்கள் நாட்டில் திரையிட அதிரடியாக தடை வித்துள்ளதாக மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் கச்சத்தீவு தொடர்பாக தெரிவித்துள்ள கருத்து மற்றும் அதற்கு இலங்கை மேற்கொண்டுள்ள எதிர் நடவடிக்கைகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் உமாபதி வெளியிட்டுள்ள காணொலி பதிவில் தெரிவித்துள்ளதாவது:- இலங்கையில் நடிகர் விஜய்க்கு தடை விதித்து அந்த நாட்டு அரசு உத்தரவிட்டு உள்ளது. இனி விஜய் படங்களை இலங்கையில் உள்ள திரையரங்குகளில் ஒலிபரப்ப முடியாது. அத்துடன் தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மாகாண பகுதிகளில் விஜயின் கொடிக்கம்பத்தை புல்டோசர் வைத்து சுக்கு நூறாக உடைத்துள்ளனர். இனி யாராவது தவெக என்று கொடி ஏற்றினால் அவர்களை கைது செய்து சிறையில் வைத்து விடுவோம் என்று எச்சரித்துள்ளனர். இலங்கையில் புதிதாக பொறுப்பேற்று உள்ள அனுரகுமார திசநாயகே அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கையில் இறுதிகட்ட போர் முடிந்த பிறகு, பிறந்தவர்கள் ஈழ மக்களின் 28 ஆண்டுகால விடுதலைப் போராட்டம் குறித்து அறியாமல் உள்ளனர். யாழ்ப்பாணத்தில் தற்போது மால்கள், நட்சத்திர விடுதிகள் என்று அபரிமிதமான வளர்ச்சியை அடைந்துள்ளது. அங்கு புதிதாக வந்த திரையரங்குகளில் விஜய் படங்களுக்கு பெரிய அளவில் வரவேற்பு இருந்தது. அவருக்கு என்று நிறைய ரசிகர்கள் இருந்தனர். தற்போதுள்ள இளம் தலைமுறையினருக்கு விஜய்தான் ஆதர்ச நாயகராக திகழ்கிறார்.
இலங்கையை பொருத்தவரை அவர்கள் தமிழ் நடிகர்களை மிகவும் ரசிப்பார்கள். கொண்டாடுவார்கள். ஆனால் அரசியல் என்று வருகிறபோது அவர்கள் நடிகர்களை சார்ந்து போக மாட்டார்கள். காரணம் இலங்கையில் நடிகர்கள் கிடையாது. இந்நிலையில், மதுரை மாநாட்டில் பேசிய நடிகர் விஜய், கச்சத்தீவை மீட்போம் என்று சொன்னார். அங்குதான் பிரச்சினை வெடித்தது? விஜய் எப்படி கச்சத்தீவை மீட்பார் என்று அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். காரணம் இந்தியாவில் ஒரு மாநில முதலமைச்சரால் இவற்றை எல்லாம் செய்ய முடியாது. வெளியுறவு கொள்கை, பணம் அச்சடிப்பது, ராணுவம் உள்ளிட்ட குறிப்பிட்ட துறைகள் மத்திய அரசிடம் தான் உள்ளன. மாநில அரசுக்கு எந்தவித அதிகாரங்களும் கிடையாது. இலங்கையில் உள்ள மாகாணங்கள் அனைத்தும் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளன. ஆளுநர்தான் அங்கு அதிகாரம் மிகுந்தவராக உள்ளார். இந்த சூழலில் இலங்கையில் விஜயின் கட்சி தொடங்கி, அதனை கொடிக்கம்பத்தில் ஏற்றி உள்ளனர்.
தற்போது விஜய், கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று சொல்லியுள்ள நிலையில், இதன் காரணமாக இந்தியா – இலங்கை இடையிலான நட்புறவு கெட்டுவிடும் என்பதால் அவர் நடிக்கும் படங்களை இந்தியாவில் இருந்து வாங்க மாட்டோம். அங்கு திரையிடவும் முடியாது. இலங்கையில் உள்ள விஜய் ரசிகர்கள், அவரின் கட்சி கொடியை ஏற்றி பிரச்சினையை ஏற்படுத்தினர். மேலும் விஜய் கச்சத்தீவு குறித்து பேசியதால், தற்போது இலங்கையில் விஜய் படங்களே வெளியாகாத நிலை ஏற்பட்டுவிட்டது. இனி அவர்கள் இணையதளம் மூலமாக பார்த்தால்தான் உண்டு. சரி கச்சத்தீவை விஜய் மீட்பதாக செல்வது தமிழ்நாட்டிற்கு நல்ல விஷயம் தானே என்று தோன்றலாம். கச்சத்தீவு என்பது தீவு கிடையாது. அது ஒரு கிலோ மீட்டர் சுற்றளவிலான ஒரு மண்மேடு ஆகும். அங்கு தண்ணீர் கிடையாது. எந்த ஒரு உயிரினமும் வாழத் தகுதியற்ற இடமாகும்.
எதற்காக இந்திரா காந்தி காலத்தில் கொடுத்தார்கள் என்று பலருக்கும் தெரியாது. கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்துவிட்டு அதற்கு ஈடாக, இலங்கை கடல் எல்லைக்குள் நமது நாட்டு கப்பல்கள் செல்வதற்கு அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது. வழக்கமாக சர்வதேச கடல் எல்லை வழியாகதான் கப்பல்கள் செல்ல முடியும். அப்படி செல்வதால் 50 கிலோ மீட்டர் தொலைவுக்கு சுற்றி செல்ல வேண்டும். அதனால் எரிபொருள் செலவு, நேர விரயம் அதிகரிக்கும். இதை கருத்தில் கொண்டு தான் இந்திரா காந்தி, இலங்கை கடல் எல்லையை பயன்படுத்த அனுமதியை பெற்றுக்கொண்டு அதற்கு ஈடாக கச்சத்தீவை அவர்களுக்கு வழங்கினார். இந்த வரலாறு தெரியாமல் கச்சத்தீவை மீட்போம் என்று சொல்கிறார்கள். தமிழ்நாட்டில் எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் கச்சத்தீவை மீட்க முடியாது. மத்திய அரசு நினைத்தால் மட்டும்தான் மீட்க முடியும். மத்திய அரசு மற்றொரு நாட்டுடன் ஒப்பந்தம் போட்டுவிட்டால் அதை திரும்ப பெறவே மாட்டார்கள். போர் போன்ற சூழலில்தான் ஒப்பந்தங்களை ரத்து செய்வார்கள். இல்லாவிட்டால் சர்வதேச அளவில் இந்தியாவை யாரும் மதிக்க மாட்டார்கள்.
இந்திரா காந்திதான் இந்த ஒப்பந்தத்தை போட்டார். பாஜக அரசால் அதை செய்ய சொல்லுங்கள் பார்ப்போம். காரணம் இந்த ஒப்பந்தம் காரணமாக இந்தியாவுக்கு மிகப்பெரிய அளவிலான லாபம் உள்ளது. இலங்கையின் கடல் எல்லை வழியாக இந்திய சரக்கு கப்பல்கள் சாரை சாரையாக வந்து கொண்டிருக்கின்றன. அதற்காகதான் இந்திரா காந்தி கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்தார். அதற்கு வேறு காரணம் கிடையாது. விஜய்க்கு ஏற்கனவே உள்ளூர் அரசியலே சரியாக தெரியாது. தற்போது அவர் சர்வதேச அரசியலில் வாயை கொடுத்து தற்போது படங்களும் வெளியாகா முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. இனி விஜய் ரசிகர்கள் திரையங்கில் விஜய் படத்தை பார்க்க முடியாத நிலைமை ஏற்பட்டுவிட்டது. அவருடைய கட்சி கொடிம்கம்பத்தை இடித்து அகற்றிவிட்டார்கள், இவ்வாறு அவர் தெரிவித்தார்.