spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைஸ்டாலினின் பக்கா ரூட்! அதிமுகவின் மெகா கூட்டணி கணக்கு என்ன? உடைத்துப்பேசும் லெட்சுமணன்!

ஸ்டாலினின் பக்கா ரூட்! அதிமுகவின் மெகா கூட்டணி கணக்கு என்ன? உடைத்துப்பேசும் லெட்சுமணன்!

-

- Advertisement -

தமிழ்நாட்டில் இன்றைய சூழலில் திமுக கூட்டணிதான் வலிமையான கூட்டணி என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

திமுக பொதுக்குழுவில் முதலமைச்சரின் உரை மற்றும் திமுக அரசின் மீது உள்ள விமர்சனங்கள் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் பிரபல யூடியுப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- திமுக பொதுக்குழுவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துரோக அதிமுகவையும், வஞ்சக பாஜகவையும் 2026ல் விரட்டிய அடிக்க களப்பணியை தொடங்குவோம் என்று சொல்கிறார். இதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்தார். நாங்கள் என்ன துரோகம் செய்தோம் என்ன கேட்கிறார். அடிமையாக இருக்கிறார்கள் என்று விமர்சிக்கும் அளவுக்கு கொஞ்சம் பணிந்து போயிருக்கலாம். அடிப்படை கொள்கைகளில் இதுவரை எதையாவது விட்டுக்கொடுத்திருக்கிறார்களா? தவெக தலைவர் நீட் மட்டும்தான் உள்ளதா? என்று கேள்வி எழுப்புகிறார்.

அன்றைக்கு அனிதா வீட்டிற்கு சென்று என்ன சொன்னீர்கள். இன்றைக்கு என்ன சொல்கிறீர்கள் என்று விமர்சனம் வருகிறதா? ஒரு தலைவர் இப்படி மாற்றி பேசலாமா என்கிற அளவுக்கு அதிமுக தன்னுடைய நிலைப்பாட்டை எங்காவது மாற்றி உள்ளதா? நீட் தேர்வில் அவர்கள் நிலைப்பாடு ஒன்றுதான். கச்சத்தீவு விவகாரத்திலும் அவர்களது நிலைப்பாடு அப்படியே தான் உள்ளது. இந்த விவகாரம் குறித்து ஜெயலலிதா தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் தான் உள்ளது. ஆனால் வஞ்சக பாஜக என்று சொல்கிறார்கள். அது நியாயமானதுதான். ஒரு சாதாரண நகைக்கடன் வாங்குவதற்கு, அதற்கான ரசீதை கேட்கிறார்கள். ஒரு அவசர உதவிக்கு பயன்படுகிற விஷயத்திற்கு ஆயிரம் கட்டுப்பாடுகளை விதிக்கிறார்கள். 50 ஆயிரம் கடன் வாங்குவதற்கு இத்தனை விதிகள் எதற்கு? தற்போது கட்டுப்பாடுகளை தளர்த்தி உள்ளனர். ஆனால் அப்படி ஒரு எண்ணம் வந்ததே… அதுவே வஞ்சம் என்கிறோம். மினிமம் பேலன்ஸ் என்று சொல்லி ஏழைகள் வயிற்றில் அடிக்கிறார்கள். இன்றைக்கு கனரா பேங்க் ரத்து செய்வதாக அறிவிக்கிறார்கள்.

நகை கடன் கட்டுபாடுகளை மறுபரிசீலனை செய்ய முதலமைச்சர் வலியுறுத்தல்!

திமுக ஆட்சியில் விமர்சிக்க தகுந்த பல விஷயங்கள் உள்ளன. சட்டத்தை மீறுபவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிற விதமாக எதுவும் இல்லை. இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் கூட்டணி பலம். நடைபெற்று முடிந்த தேர்தல் முடிவுகளை பார்க்கிறபோது திமுக வலுவான அணிதான். இன்றைக்கு தேர்தல் நடைபெற்ற திமுகதான் வெற்றி  பெறும் என்பதை யாரும் மறுக்கவில்லை. ஆதரவு அலை வீசுகின்றது என்று எதை வைத்து சொல்கிறார்கள். பொதுமக்கள் மட்டும் அல்ல திமுககாரனும் சந்தோஷமாக இல்லை. 4 வருடங்களுக்கு பிறகு தொகுதி வாரியாக நிர்வாகிகளை பார்க்கிறேன் என்கிறார். இப்போதாவது பார்க்கிறாரே என்று சந்தோஷப்படுகிறேன்.

உங்களுடைய உடல்நிலை, வேலைப்பளு காரணமாக இருந்தால் உதயநிதி என்ன செய்கிறார். கட்சியின் அடுத்த வாரிசு என்கிற அடிப்படையில் நிர்வாகிகளை அழைத்து அவர்களின் பிரச்சினைகளை கேட்டிருக்கலாமே. துணை முதலமைச்சர் என்கிற அதிகாரப்பூர்வ பதவி வந்தஉடன் எத்தனை பேருக்கு நல்லது செய்திருக்கிறீர்கள்.  நிர்வாகிகளை நேருக்கு நேர் சந்திக்கிற எண்ணம் இப்போதுதான் வந்ததா? மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்களுடன் நேருக்கு நேர் உட்கார்ந்து பேசியுள்ளீர்களா? எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இருக்கும்  தொண்டர்கள் இன்றைக்கும் அதிமுக, திமுக இயக்கங்களில் உள்ளதால்தான், 2 கட்சிகளும் மாறி மாறி ஆட்சி செய்கின்றன.

அண்மையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எல்லோரும் தொகுதிக்கு போய் வேலை பாருங்கள். சென்னையிலேயே இருக்காதீர்கள் என்கிறார்.அவர்கள் இல்லாமல் நாம் இல்லை என்று முதல்வர் சொல்கிறார். அது இவ்வளவு தாமதமாக தான் தெரிந்ததா? அந்த தொண்டன் படுகிற பாடு தெரியுமா? எதிரணி பலவீனமாக உள்ளதை வைத்துதான் திமுக வண்டி ஓடுகிறது. ஆனால் அது அப்படியே தொடரும் என்று நினைக்காதீர்கள். என்னுடைய ஒரே இலக்கு திமுகவை வீழ்த்துவது தான் என்று விஜய் அதிமுக கூட்டணிக்கு வந்தார் என்றால்? திமுகவின் கதை கந்தல்தான்.

அதனால்தான் கோமாளி அரசியல் என்று சொல்கிறார். அந்த வார்த்தையை அவர் தவிர்த்திருக்கலாம். ஆக மொத்தம் ஒரு அச்சுறுத்தல் உள்ளது என்பதை புரிந்துகொண்டிருக்கிறார். 30 சதவிதம் வாக்குகள் இலக்கு நிர்ணயித்துள்ளார். ஒவ்வொரு வீட்டிற்கும் நலத்திட்ட உதவிகள் சென்றடைகிறது. அதேபோல் டாஸ்மாக் கடைகளால் அவலங்கள் ஏற்படுகிறது. உள்ளாட்சி பிரதிநிதிகளால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். முதலமைச்சர் சாட்டையை எடுத்து சுழற்ற வேண்டும். ஆனால் அவர் செய்ய மறுக்கிறார்.

MUST READ