ஆழ்மனம் எழுச்சி – மாற்றம் முன்னேற்றம் – 9
- Advertisement -
9.ஆழ்மனம் எழுச்சி – என்.கே. மூர்த்தி
நான் முப்பது வருடங்களுக்கு மேல் அனுபவங்களை சேகரித்திருக்கிறேன். சாலையில் பசியோடு திரிந்திருக்கிறேன். வறுமையின் உச்சத்தை தொட்டவன் என்கின்ற முறையில் இதை எழுதுகிறேன்.

என் எழுத்து ஒவ்வொன்றும் ஒருவருடைய வாழ்க்கை. அதனால் இன்று முதல் எவரும் பசியோடு இருக்க வேண்டாம். வறுமையில் வாழ வேண்டாம்.
நமது ஆழ்மனதில் சக்தி வாய்ந்த லட்சியங்களை பதிவு செய்ய வேண்டும்.
நமது வாழ்வின் வழிகாட்டியாக இருப்பது நமது ஆழ்மனம் என்பதை மறந்து விடாதீர்.
ஆழ்மனதில் நமக்கு வேண்டியவற்றை அழகாக காட்சிப்படுத்த வேண்டும். அவற்றை வார்த்தைகளால் அடிக்கடி உச்சரிக்க வேண்டும். ஆயிரக்கணக்கான முறையில் உச்சரிக்க வேண்டும். அந்த உச்சரிப்பு ஒரு புதிய பரிமாணத்தை உருவாக்கும். அந்த உச்சரிப்பு மன எழுச்சியை ஏற்படுத்தும். அந்த மன எழுச்சி உற்சாகத்தை கொடுக்கும். அப்பொழுது முதல் நாம் புதிய மனிதர் என்பதை உணர முடியும்.
நமக்கு சிலரை கண்டாலே வெறுப்பாக இருக்கும். சோம்பல், உணர்ச்சியற்று, வெறுப்பான பேச்சு, அது முடியாது, இது நடக்காது என்று எப்பொழுதும் எதிர்மறையான சிந்தனையை வைத்திருப்பார்கள். அவர்களை மற்றவர்களுக்கு பிடிக்கவே பிடிக்காது. அவர்களை அடையாளம் கண்டு ஒதுங்கிக் செல்வோம்.

நமது வாழ்க்கையின் இலக்கை உற்சாகமாக கற்பனை செய்ய வேண்டும்.
உற்சாகமான மனக்காட்சிகளை மட்டுமே ஆழ்மனம் ஏற்கும். உற்சாகம் வாழ்வில் சோம்பலை நீக்கி வாழ்க்கையின் மீது பிடிப்பை ஏற்படுத்தும்.
ஆழ்மனதில் ஏற்படுகின்ற உற்சாகம், மனக்காட்சிகளை கட்டளைகளாக மாற்றும்.
உற்சாகம் பலம் பொருந்திய முயற்சி, உற்சாகம் மன உணர்வுகளை தூண்டுகிறது. நமது முகத்தில் உற்சாகம் ததும்பினால் எதிராளிகளும் நேசிப்பார்கள். சோம்பேரிகளை ஒருவரும் நேசிக்க மாட்டார்கள். உற்சாகம் சுறுசுறுப்பை ஏற்படுத்துகிறது. சுறுசுறுப்பு வாழ்க்கையின் வெற்றிக்கு அழைத்து செல்கிறது.
நமது வாழ்க்கையை உற்சாகப்படுத்துவோம். லட்சியத்தை அடைய தைரியமாக பயணம் செய்வோம். தொடரும்…