spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைஆழ்மனக்காட்சியே வாழ்க்கையாகிறது - மாற்றம் முன்னேற்றம் – 7

ஆழ்மனக்காட்சியே வாழ்க்கையாகிறது – மாற்றம் முன்னேற்றம் – 7

-

- Advertisement -

ஆழ்மனக்காட்சியே வாழ்க்கையாகிறது – என்.கே. மூர்த்தி

“என் முயற்சிகள் என்னை பலமுறை கைவிட்டதுண்டு ஆனால் நான் ஒரு முறை கூட முயற்சியை கைவிடவில்லை” – தாமஸ் ஆல்வா எடிசன்

இதுவரை நாம் படித்து வந்ததின் சுருக்கம். இதை கவனமாக மனப்பாடம் செய்துக்கொள்ளுங்கள்.

  1. நமது மனம் ஒரு தொடர் மனத்திரைப்படம்.
  2. நமது மன திரைப்படம் ஆழ்மனத் திரையில் ஓடும் காட்சி.
  3. நமது மனக்காட்சிகள் ஆழ் மனதில் நிரந்தரமாகத் தங்கி நிற்பவை.
  4. நமது ஆழ்மனம் படங்களை வாழ்க்கையில் நடைமுறையாக்குகிறது.
  5. நமது ஆழ்மனக் காட்சிகள் நமது எதிர்காலமாகின்றன. லட்சியத்தை அடைய வழிகாட்டுகிறது.

  இதுதான் நடைமுறை விதி.

we-r-hiring

ஆழ்மனத்திரையில் ஏற்படும் காட்சிகள் எதிர்காலத்தை தீர்மானிக்கிறது.

ஆழ்மனத்திரையில் ஏற்படும் காட்சிகள் எதிர்காலத்தை தீர்மானிக்கிறது.

அம்பேத்கர், பெரியார், காமராஜரை படியுங்கள்- நடிகர் விஜயின் முற்போக்கு அரசியல்..

உலகின் பணக்காரர்கள் பட்டியலில் இருப்பவர்கள் எப்பொழுதும் வளர்ச்சியை பற்றியே நினைக்கிறார்கள். அதை சுற்றியே இயங்குகிறார்கள். அதனாலேயே மீண்டும் மீண்டும் அவர்களிடம் பணம் குவிந்து கொண்டே இருக்கிறது.

தீவிர அரசியல்வாதிகள், விஞ்ஞானிகள் காலை முதல் நேரத்தை பார்க்காமல் இயங்கிக் கொண்டே இருக்கிறார்கள். அதனால் மேலும் பொறுப்புகள் அவர்களை வந்தடைகிறது.

வளர்ச்சியை பற்றியே நினைக்கிறார்கள்

ஆனால் நம்மில் பெரும்பாலானவர்கள் சிறிய சிறிய விஷயத்தைப் பேசி அதில் நின்று காலத்தை வீணடிக்கிறோம்.

ஏழ்மையை பற்றி பேசுகிறோம், சிந்திக்கிறோம். கடைசி வரை வறுமையிலேயே வாழ்கிறோம். இந்த நிலையில் இருந்து மாறுவதற்கு முயற்சிகள் செய்ய வேண்டும். வெற்றியைப் பற்றி வைராக்கியம் கொள்ள வேண்டும்.

மனக்காட்சியில் என்ன விதைக்கிறோமோ அதுவே வாழ்க்கையாகிறது.

பாஜகவின் மூன்று திட்டங்கள்..

மிகவும் சக்தி வாய்ந்த, உயிர் துடிப்புள்ள ஆளுமையான மனக்காட்சிகளை நமது கற்பனையில் உருவாக்க வேண்டும். தீர்க்கமாக அதை செய்ய வேண்டும்.

நமது கற்பனையில் உருவான முழுமையான மனத்திரைப்படங்கள் நமது ஆழ் மனதில் பதிந்து எதிர் காலத்தை தீர்மானிக்கும்.

திரும்பத் திரும்ப அழுத்தமாக ஆழமாக பணத்தைப் பற்றி கற்பனை செய்யுங்கள். நம்மால் பணக்காரராக முடியும்.

திரும்பத் திரும்ப அழுத்தமாகவும், ஆழமாகவும் மக்கள் செல்வாக்கு நிறைந்த தலைவரைப் போன்று தலைமைப் பண்பில் உங்களைப் பொருத்தி கற்பனை செய்யுங்கள். நிச்சயம் ஒருநாள் நாம் தலைவர் பதவிக்கு வர முடியும்.

ஒரு நாட்டின் தளபதி இன்னொரு நாட்டின் மீது போர் தொடுக்க கப்பலில் போய் இறங்கினார். இறங்கியதும் முதல் வேலையாக அவர்கள் வந்து இறங்கிய சொந்த கப்பலை தீ வைத்து சாம்பலாக்கினார்.

படை வீரர்கள் திருதருவென்று விழித்தார்கள். அப்போது தளபதி,    ”எதிரிகளை ஜெயித்து அவர்களின் கப்பலில் நம் நாட்டிற்கு செல்லலாம்” என்றார். வீரர்களுக்கு நிலைமை புரிந்தது. தோல்வி அடைந்தால் நாடு திரும்ப கப்பல் இல்லை. எதிரியும் நம்மை உயிரோடு விடமாட்டான். துணிந்து போராடுவதை தவிர நமக்கு வேறு வழியில்லை. ஆக்ரோஷமாக சண்டையிட்டார்கள். வெற்றி மகுடத்துடன் நாடு திரும்பினார்கள்.

இவை அனைத்தும் நினைத்தவுடன் வந்து விடக் கூடியது அல்ல. எதுவும் சுலபத்தில் கிடைத்து விடாது. நாம் எதை தீர்மானமாய், அழுத்தமாய் நினைக்கிறோமோ அது நடைமுறைக்கு வரும்.

உழைப்பவர்கள் மட்டுமே மாபெரும் சக்திமானாக மாறுகிறார்கள்

மனக்காட்சிகள்  வழியை மட்டுமே காட்டும். அதற்கு பின்னர் நமது தீவிர உழைப்பை கொடுக்க வேண்டும்.

திமுக கதறல் – பாஜக கதறல் : யார் யாரை மிரட்டிப்பார்க்க நினைக்கிறார்கள்?

உழைப்பவர்கள் மட்டுமே மாபெரும் சக்திமானாக மாறுகிறார்கள். மனக் காட்சிகளை செயல்படுத்துபவர்கள் பலம் மிக்க மனிதனாக மாறுவார்கள்.

நமக்கு எது பிடிக்குமோ அதனை மனக்காட்சியாக்க வேண்டும். மனம் காட்சிப்படுத்தியதை உடனடியாக செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

                                                                                                       தொடரும்…

MUST READ