spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைமுதல் நாளே விஜய்க்கு ஆப்படித்த அஸ்ரா கர்க்! சிக்கிய ஒய் பிரிவு அதிகாரி! ப்ரியன் நேர்காணல்!

முதல் நாளே விஜய்க்கு ஆப்படித்த அஸ்ரா கர்க்! சிக்கிய ஒய் பிரிவு அதிகாரி! ப்ரியன் நேர்காணல்!

-

- Advertisement -

கரூர் துயர சம்பவம் குறித்த வழக்கு அரசியல் ரீதியாக மிகவும் சென்சிட்டிவானதாக மாறி கொண்டிருக்கிறது. ரசிகர்கள் நீதிபதிக்கே உள்நோக்கம் கற்பிக்கும் நிலைக்கு சென்றுள்ள நிலையில், அஸ்ரா கார்க் எந்த அளவுக்கு சுதந்திரமாக செயல்பட போகிறார் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.

priyan
priyan

கரூர் துயரம் தொடர்பாக அமைக்கப்பட்ட எஸ்.ஐ.டி-யின் விசாரணை குறித்து மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் பிரபல யூடியுப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்திருப்பதாவது:- கரூர் கூட்டநெரிசல் தொடர்பாக விசாரிக்க வடக்கு மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு விசாரணைக்குழுவை அமைத்துள்ள உயர்நீதிமன்றம், விஜய் கேரவனை பறிமுதல் செய்யவும், அதில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றவும் உத்தரவிட்டு உள்ளனர். அந்த கேரவனில் 4 புறமும் நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கிறது. அவை துல்லியமாக விபத்துக்காட்சிகளை படம் பிடித்திருக்கும். அதனால் துல்லியமாக எந்த பகுதியில் என்ன நடைபெற்றது என்பது அந்த கேமரா பதிவுகள் இருந்தால் தெரியவரும்.

we-r-hiring

எனவே விஜய் நேர்மையான ஒரு அரசியல் தலைவராக இருந்திருந்தால் அவர் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதுடன், காவல்துறை கேட்பதற்கு முன்னதாகவே தானாகவே முன்வந்து சிசிடிவி பதிவுகளை ஒப்படைத்திருக்க வேண்டும். அதை செய்ய தவறிவிட்டு, அவர் அமைதி காத்தார் என்றால், மற்றவர்கள் மீது பழிபோட பார்க்கிறார் என்றுதான் போய் முடியும்.

41 மரணம் நிகழ்ந்த அன்றே இது பல்வேறு கைது நடவடிக்கைகளுக்கு போய் நிற்கும் என்று காவல்துறையினருக்கு நன்றாகவே தெரியும். அப்படி தெரிகிற போது விபத்து நடைபெற்ற இரவு முதல் ஆதவ் அர்ஜுனா அந்த வாகனத்தில் இருக்கிறார். அவர்தான் வண்டியை 50 மீட்டர் முன்னால் கொண்டுபோக சொல்கிறார். எனவே இந்த மரணங்களுக்கு ஒரு வகையில் அவரும் காரணமாக இருக்கிறார். முதலில் வழக்குப் பதிவு செய்கிறபோது ஆதவ் அர்ஜுனா மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், அவருக்கு திமுக உயர்மட்டத்தில் யாரோ ஒருவர் ஆதரவு அளிப்பதாக தகவல் வருகிறது. ஆனால் அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரிய வில்லை.

ஆனால் சம்பவத்திற்கு பிறகு புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் போன்றவர்களை கண்காணிக்க வேண்டும். ஆனால் அவர்கள் தலைமறைவாகி விட்டார். கரூர் கூட்டநெரிசல் சம்பவத்தில் விஜயும் முக்கியமான சாட்சி. அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. அவரால்தான் அந்த கூட்டமே சேர்ந்தது. அப்போது அவரை வழக்கில் சேர்க்க வேண்டாமா? அல்லது காவல்துறைக்கு திமுக மேலிடத்தில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டதா? முதல்வரின் பார்வையில் விஜயை கைது செய்ய வேண்டாம். ஆனால் அவர் மீது ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை?

பாதுகாப்பு குறைபாடான இடத்திற்கு செல்ல வேண்டாம் என்று விஜய், ஒய் பிரிவு பாதுகாப்பு படையினர் ஏன் அறிவுறுத்தவில்லை என்று உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டிருக்கிறது. அப்படி கேட்க வேண்டியது சரியானதுதான். ஆனால் தமிழக காவல்துறை எச்சரித்துள்ளனர். ஆனால் ஆதவ் அர்ஜுனா தான் வற்புறுத்தி கூட்டத்திற்குள்ளே கொண்டு சென்றுள்ளார். விஜய் கரூர் நகருக்குள் வந்த உடனேயே உள்ளே உட்கார்ந்துகொண்டு லைட்டுகளை ஆப் செய்துவிட்டார். பாதி பேர் அவரை பார்த்திருந்தால் கிளம்பி போயிருப்பார்கள். அவர்கள் போய்விடுவார்கள் என்கிற பயம் காரணமாக தான் அவர் உள்ளே உட்கார்ந்து கொண்டார். பேசுகிற இடம்வந்தபோது தான் எழுந்து வந்தார்.

நீதிமன்றம் சிறப்பு விசாரணைக்குழு அதிகாரியாக நியமித்துள்ள அஸ்ரா கார்க் நல்ல அதிகாரி தான். ஆனால் அவர் எந்த அளவுக்கு சுதந்திரமாக செயல்பட போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்த வழக்கு அரசியல் ரீதியாக மிகவும் சென்சிட்டிவானதாக மாறி கொண்டிருக்கிறது. நீதிபதிக்கே உள்நோக்கம் கற்பிக்கும் அளவுக்கு விஜய் ரசிகர்கள் போய் கொண்டிருக்கிறார்கள்.

ஆதவ் அர்ஜுனா தற்போது டெல்லிக்கு போயிருக்கிறார். சிபிஐ வசம் வழக்கு ஒப்படைக்கப்பட்டால் விஜய் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் தப்பிக்க வாய்ப்பு இருக்கிறது. சென்னை உயர்நீதிமன்றம் எஸ்.ஐ.டி அமைத்திருந்தாலும், தவெக தரப்பில் சிபிஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தை நாடவும் வாய்ப்புகள் இருக்கிறது. ஒருவேளை வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டால், விஜய் பாஜகவுக்கு சாதகமாக செயல்பட்டால் விசாரணை ஒரு கண்துடைப்பு நாடகம் போல நடைபெறும்.

செந்தில் பாலாஜி கொங்கு மண்டலத்தில் திமுகவுக்கான வாய்ப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கிறார். அது எதிர்க்கட்சிகளுக்கு எரிச்சலை கொடுக்கிறது. அவர் மீது சேற்றை வாரி வீச வேண்டும் என்று நினைக்கிறார்கள். நீங்கள் கூட்டம்போட்டால் செந்தில் பாலாஜி குறித்து தான் பேச போகிறீர்கள். இதில் சதி செய்வதற்கான தேவை என்ன இருக்கிறது. உண்மையில் ஆதவ் அர்ஜுனா தான் சதி செய்வதற்கான திட்டத்தை போட்டார். அவர் தான் கலவரத்துக்கு வித்திட்டார். அவரை தான் காவல்துறை கைதுசெய்ய வேண்டும்.

கரூர் சம்பவம் நடைபெற்று இத்தனை நாட்கள் ஆகியும் தவெக நிர்வாகிகள் யாரும் அங்கு போகவில்லை. அதேவேளையில் திமுக, அதிமுக போன்ற கட்சிகளின் கூட்டத்தில் இப்படி நடந்திருந்தால் அக்கட்சியினர் தங்களால் முடிந்த உதவிகளை செய்திருப்பார்கள். இங்கு உதவிக்கு சென்ற செந்தில்பாலாஜி மீது குற்றம் சொல்கிறார்கள். செந்தில் பாலாஜியை அரசியல் ரீதியாக என்ன வேண்டும் என்றாலும் குற்றம்சாட்டலாம். புஸ்ஸி ஆனந்த், கருர் கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் தான் பொறுப்பாளர், தனக்கு அதற்கும் தொடர்பில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இந்த சூழலில் எதிர்பாராத ஒன்றாகும். இதை எதிர்கொள்பவர்கள் தான் அரசியல்வாதிகள். முதலில் விஜய் அடிப்படை மனிதாபிமானம் கூட இல்லாமல், கருரில் இருந்து சென்னைக்கு ஓடி வந்துவிட்டார். அவர் சொல்கிறார் என் மீது கை வைய்யுங்கள். என் தொண்டர்கள் மீது கை வைக்காதீர்கள் என்று.

இது கட்சியினரிடையே அனுதாபத்தை சம்பாதிப்பதற்காக இப்படி செய்கிறார். கட்சியினர் இடையே விஜய் ஏன் இன்னும் சென்று பார்க்கவில்லை என்கிற கேள்வி எழுந்துள்ளது. விஜய் சென்றால் அங்கு ஒன்றும் புரட்சி எல்லாம் வெடிக்காது. விஜய் நினைத்தால் அன்றைக்கே போயிருக்கலாம். ஆனால் அச்சப்படுகிறார். அவரை போலவே ஆனந்த், நிர்மல்குமார் போன்றவர்களும் பயப்படுகிறார்கள். போலீசாருக்கு பயந்து தலைமறைவாகிவிட்டனர். அப்போது இவர்கள் என்ன அரசியல் கட்சி நடத்துகிறீர்கள்?, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ