spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைகரூர் துயரம் சமூகம் சார்ந்த பிரச்சினை! விஜய்க்கு இருப்பது புகழ் போதை! விளாசும் சுப.வீரபாண்டியன்!

கரூர் துயரம் சமூகம் சார்ந்த பிரச்சினை! விஜய்க்கு இருப்பது புகழ் போதை! விளாசும் சுப.வீரபாண்டியன்!

-

- Advertisement -

விஜய்க்கு இருப்பது “புகழ் போதை”. இப்படி எந்த தலைவரும் இருந்தது கிடையாது என திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் தமிழ் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் - சுப.வீரபாண்டியன்

சங்கமம் அமைப்பின் 20வது ஆண்டு விழாவையொட்டி, தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் மற்றும் ஆணிவேர் படைப்பரங்கம் இணைந்து, செல்வின் இயக்கத்தில் “மீசைத் திமுரு” என்ற நவீன நாடகம் கோவை ஹோப்ஸ் காலேஸ் தனியார் அரங்கில் நடைபெற்றது. இதில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன் உள்ளிட்ட முற்போக்கு அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக நிகழ்ச்சியில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் சிறப்புரை ஆற்றினார்.

we-r-hiring

அப்போது அவர் கூறியதாவது :- கரூர் பற்றி எத்தனையோ செய்திகள் உண்டு. ஆனால் இப்போது கரூர் பேரவலமாக, கரும்புள்ளியாக தமிழ்நாட்டில் அமைத்து விட்டது. நான் அறிந்த வரை ஒருவரை பார்க்கப் போய் 41 பேர் இறந்ததாக கேள்விப் படவில்லை. கும்ப மேளா போன்ற நிகழ்வுகள் வேறு. தனி மனிதரை பார்க்கச் சென்று மக்கள் உயிரை பலி கொடுத்துள்ளனர். மக்களிடமும் பெரிய மாற்றம் கொண்டு வர வேண்டிய தேவை எல்லாரிடமும் உள்ளது என்பதை உணர முடிகிறது. கரூர் துயர சம்பவத்திற்கு யார் காரணமோ? அவர்கள் இதை பற்றி பேசாமல் இருப்பதும், மக்களை பார்க்காமல் இருப்பதும், இன்னொரு அவலமாகப் படுகிறது.

இந்த விவகாரத்தில் தமிழக அரசு மிகவும் நிதானமாக நடந்து கொள்கிறது. ஏன் விஜய் கைது செய்யப்படவில்லை? என கூட்டணி கட்சிகளில் இருந்து குரல் வந்த பின்னரும் கூட அரசு அவசரப்படாமல் நிதானமாக நடந்துகொள்கிறது. காரணம் இதை யாரையோ பழிவாங்கும் நோக்காமாக இருக்க கூடாது. எது சரியோ அதை செய்ய வேண்டும் என கருதுவதாக இருக்கிறது. உயர்நீதிமன்றமே அழுத்தமாக எல்வாற்றையும் கூறிவிட்டது. தற்போது தவெகவினர் உச்ச நீதிமன்றம் போயுள்ளனர். கரூர் கூட்ட நெரிசல் மரணங்கள் வெறும் சட்டம் தொடர்பான பிரச்சினை அல்ல. சமூகம் தொடர்பான பிரச்சினையாகும்.

புதிதாக துவங்கிய கட்சிக்கு அமைப்பும், அனுபவமும் இல்லை என்பது தான் காரணம். எந்த தலைவர் வந்தாலும், இனி இப்படி பட்ட நிகழ்சிகள் வேண்டாம். திடலில் சென்று பேசட்டும். மக்களின் பாதுகாப்பு முக்கியம். தமிழகம் எல்லா நிலையிலும் மேலோங்கி நிற்கிறோம். ஆனால் இந்த நிகழ்ச்சி தமிழகம் இவ்வளவு தானா? என்று பிற மாநிலத்தார் நினைக்க வைக்கும் அளவிற்கு தரம் தாழ்த்தி இருக்கிறது. இதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இனி கரூர் துயரச் சம்பவம் மாதிரியான நிகழ்வுகள் நடக்காமல் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு அரசு, மக்கள் என எல்லோருக்கும் உள்ளது.

கரூர் போன்று வேறு எங்கும் நடக்கவில்லை என விஜய் கேட்பதே அடிப்படையில் தவறானது. மதுரை மாநாட்டில் மக்கள் இறந்துள்ளனர். நாமக்கல்லில் பலருக்கு மூச்சுத்திணறல் பிரச்சினை ஏற்பட்டது, கரூரில் கூடுதலாக நடந்துள்ளது. மேலும் விஜய்க்கு மக்கள் மீதுள்ள அக்கறை என்ன? என்பதையும் கேட்க வேண்டியதாக உள்ளது. இது ஒரு புகழ் போதை, எந்த தலைவரும் இப்படி செய்தது இல்லை. ஊர்தியில் அமர்ந்துகொண்டு விஜய் விளக்கை அணைத்து அணைத்து போடுவது.

விளையாட்டு காட்டும் போக்கு, அனுபவம் இன்மை, வயது குறைவு, கட்சிக்கான அமைப்பு பலமின்மை போன்றவற்றை தான் இவை காட்டுகின்றன. திமுக உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் தலைவர் வரும்போது ஒழுங்குகளை செய்வார்கள். இந்த கட்சியில் அப்படி யாரும் இல்லையோ? என தோன்றுகிறது. யார் பேச்சை வேண்டுமானாலும் கேளுங்கள், யார் முன்னாலும் பைத்தியம்போல ஓடாதீர்கள். இது மக்களுக்கும் அழகில்லை, அவர்களுக்கும் மரியாதை இல்லை, தமிழ்நாட்டிற்கும் பெருமை தராது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ