spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைநீதிபதியவே திட்டுவியா நீ! 10 பேர தூக்கி உள்ள வைங்க! வீடியோவில் சிக்கிட்டீங்க விஜய்!

நீதிபதியவே திட்டுவியா நீ! 10 பேர தூக்கி உள்ள வைங்க! வீடியோவில் சிக்கிட்டீங்க விஜய்!

-

- Advertisement -

சென்னை உயர்நீதிமன்றம் விஜய்க்கு கசப்பான தீர்ப்பு வழங்கியிருக்கும் நிலையில், அதை எதிர்த்து அவர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம். அதை விடுத்து தொண்டர்களை வைத்து நீதிபதியை விமர்சிப்பது சரியானது அல்ல என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

விஜய்க்கு எதிரான தீர்ப்பு வழங்கிய நீதிபதியை தவெகவினர் கடுமையாக விமர்சித்து வருவது குறித்து மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லெட்சுமணன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் முன்பாக வந்த வழக்கு, வாகன பிரச்சாரம் தொடர்பாக நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தான். அவர் எல்லை மீறி பேசிவிட்டதாக தோற்றத்தில் தெரியும். ஆனால் அந்த மனுவில் கரூர் சம்பவத்தை குறிப்பிட்டுதான், இப்படி நடந்துவிட்டதாக சொல்கிறபோது, அது குறித்து ஆராயாமல், வழக்கை விசாரிக்கவே முடியாது. வழக்கு விசாரணையின்போது நீதிபதி கடுமையான கருத்துக்களை தெரிவித்தபோதும், தன்னுடைய தீர்ப்பில் அவற்றை சொல்லவில்லை. ஏனென்றால் அது உணர்வுகள் உள்ள ஒரு தனி மனிதராக நீதிபதி சொன்ன வார்த்தைகள். அவர் அதற்கு விதி விலக்கானவர் அல்ல. சட்டத்தின் பார்வையில், நீதிமன்றத் தீர்ப்பு எப்படி இருக்க வேண்டுமோ அப்படிபட்ட ஒரு தீர்ப்பு எழுத்துப் பூர்வமாக 16 பக்கங்களுக்கு வந்துள்ளது. இது என்ன கட்சி? நீங்கள் ஒரு தலைவரா? உங்களிடம் தலைமைப் பண்பு இருக்கிறதா? என்று விஜயை வேறு யார் கேட்க முடியும்?

ஸ்டாலின் கேட்டால் அரசியல் ரீதியாக பேசுகிறார் என்பார்கள். எல்லா தகுதியும் இருக்கிற எடப்பாடி கேட்டால்? விஜயை கூட்டணிக்கு அழைக்க வாய்ப்பிருக்கிறது என்று சொல்லலாம். யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் ஒரு எம்பிக்கள் குழுவை அனுப்பிவைத்து, கமிட்டியை போடுகிறீர்கள் என்றால் பின்னால் அரசியல் இருக்கிறது என்று பார்க்கலாம். ஆனால் நீதிபதிகள் அந்த வார்த்தையை சொல்கிறபோதுதான், மக்களுடைய உணர்வுகளை அவர்கள் பிரதிபலிப்பதாக பார்க்கிறோம். அதற்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கிறது. நம்மை போன்றவர்களுக்கு ஒரு கவசமாக தீர்ப்பு இருக்கிறது என்றால், அது வரவேற்கப்பட வேண்டியதுதான். கரூரிலேயே இருக்கக்கூடாது. போய் ஆறுதல் சொல்லக்கூடாதா? என்று சொல்ல சட்டத்தில் எங்கே இடம் இருக்கிறது என்று கேட்கலாம். ஆனால் ஒரு உணர்வுமிக்க மனிதராக நீதிபதி கேட்காமல் யார் கேட்பார்கள்?

இலங்கை கைதி மனு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு

விஜய் வீடியோ வெளியிடுகிறபோது முதல்வர் எங்களை பழிவாங்குகிறார் என்று போடுகிறார். வெளியில் பேசும் தவெக நிர்வாகிகள் சதி நடைபெற்றுள்ளது என்று தகவல்களை கசிய விடுகிறார்கள். இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வருகிறபோது இது ஒரு விபத்து தான் என்று வாதம் வைக்கிறீர்கள். அப்போது எது உண்மை? நீங்கள் சொல்வதை நீதிமன்றத்திற்கு உள்ளேயும் சென்று சொல்ல வேண்டும். போட்டோக்கள், வீடியோக்கள் என ஆதாரங்களை கொடுக்க வேண்டும். சும்மா போகிற போக்கில் சொல்ல முடியாது. தற்போதுள்ள அரசியல்வாதிகளுக்கு தன்னை மாற்று என்று சொல்கிற விஜய் சற்று நேர்மையாளராக நடந்துகொள்வார் என்று மக்கள் எதிர்பார்ப்பார்கள் அல்லவா? ஆனால் நீதிமன்றத்தில் ஒரு ஆதாரத்தை கூட விஜய் தரவில்லை. தவெக மாவட்ட செயலாளரின் மனைவி பேட்டி கொடுக்கிறார். கழுத்தை நெரித்து 2 பேரை கொன்றார்கள். 15 பேரை கத்தியை வைத்து கிழித்தார்கள். நாங்கள் மருத்துவமனைக்கு சென்றிருந்தால் எங்களையும் பிணமாக தான் தந்திருப்பார்கள் என்று சொல்கிறார்கள். அந்த அம்மாவை அப்படி பேசாதீர்கள் என்று விஜய் அழைத்து சொன்னாரா? அப்படி ஆடியோ , வீடியோ வெளியிட்டிருந்தார் என்றால் சமூகத்தில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்கின்ற முயற்சி என்று நாமெல்லாம் பாராட்டி இருக்கலாம். அப்போது விஜய் அதை ரசிக்கிறார் என்று தானே நினைக்க தோன்றுகிறது.

எந்த தலைவரும் தன் தொண்டன் இறப்பதை விரும்ப மாட்டார் என்று விஜய்க்கும் சேர்த்து தான் முதலமைச்சர் வக்காலத்து வாங்கினார். அதை புரிந்துகொண்டு இந்த அசாதாரண சூழ்நிலையை எப்படி சகஜநிலைக்கு கொண்டுவரலாம் என்று துளிகூட கவலை இல்லாமல், திரும்ப திரும்ப பிரச்சினையை பெரிதுபடுத்துவது மாதிரிதான் விஜய் 3 நாட்களுக்கு பிறகு வெளியிட்ட வீடியோ இருந்தது. அந்த வீடியோவில் கூட ஒரு திமிர் தனம் தெரிந்ததே தவிர, தன்னை அறியாமல் நிகழ்ந்த ஒரு சம்பவத்திற்கு தார்மீக பொறுப்பேற்க வேண்டும் என்கிற தலைவனுக்குரிய பண்பு துளியும் இல்லை. அதைதான் நீதிபதியும் சொல்லிக்காட்டுகிறார். எப்.ஐ. ஆரில் விஜயின் பெயரையே சேர்க்கவில்லையே பிறகு எப்படி பழிவாங்குகிறார் என்று சொல்கிறார். விபத்தை ஏற்படுத்திய பேருந்தை ஏன் பறிமுதல் செய்யவில்லை? என்று நீதிபதி கேட்கிறார். இதே காவல்துறை சென்று அந்த பேருந்தை பறிமுதல் செய்திருந்தால், ஜனநாயக படுகொலை என்று கொந்தளித்து இருப்பார்கள். விஜயிடம் அரசு மென்மையாகவே நடந்துகொள்கிறது என்றுதான் தோன்றுகிறது. நேற்று விஜயை மட்டும் நீதிபதி விமர்சிக்கவில்லை. அரசாங்கம் தட்டிக்கழித்த பொறுப்புகளை, அவர்களின் மௌனத்தையும் கொஞ்சம் கொட்டிக் காட்டியிருக்கிறார். சுட்டிக்காட்டியிருக்கிறார். அரசாங்கமும் தன்னை திருத்திக்கொள்ள வேண்டும். சட்டம் என்றால் எல்லோருக்கும் ஒன்றுதான். இனிமேல் பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி கொடுக்கிற விஷயத்தில் அரசு வெளிப்படைத் தன்மையோடு நடந்துகொள்ள வேண்டும்.

நட்பை ஆவணங்களால் நிரூபிக்க முடியாது – சென்னை உயர்நீதி மன்றம்

திருமாவளவன் சொன்ன அரசியல் ரீதியான கருத்தை, சட்டத்தின் பார்வையில் நீதிமன்றம் சொல்லியுள்ளது. நீதிபதி இந்த கருத்துக்களை சொன்னதற்காக அவரை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கிறார்கள். நீதிபதியின் வீட்டின் திருமணத்திற்கு முதலமைச்சர் செல்வது குற்றம் என்று ஐபிசியின் எந்த பிரிவு சொல்கிறது? இது சட்ட விரோதமோ, மரபு மீறலோ கிடையாது. உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகளாக இருந்தவர்கள் தங்களுடைய பிள்ளைகளின் திருமணத்திற்கு அப்போதைய முதலமைச்சர்களை அழைப்பது வழக்கமான ஒன்றுதான். அதே திருமணத்தில் அதிமுகவினர் உள்பட அனைத்துக்கட்சியினரும் கலந்துகொண்டிருக்கிறார்கள். ஏன் நீதிபதிகளுக்கு குடும்பம் இருக்கக்கூடாது? உறவுகள் இருக்கக்கூடாதா? உணர்வுகள் இருக்கக்கூடாதா? சட்டத்திற்கு புறம்பாக நீதிபதிகள் என்ன சொன்னார் என்று சொல்லுங்கள். அதை உச்சநீதிமன்றத்திற்கு எடுத்துச்சென்று தீர்ப்பை ரத்து செய்ய சொல்லுங்கள். அவருடைய தீர்ப்பு உங்களுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது என்று சொல்லுங்கள். அது உண்மை. ஆனால் சட்டவிரோதமாக எதாவது சொன்னாரா? அவர் வீட்டு கல்யாண வீடியோவை வைத்துக்கொண்டு விமர்சிப்பது சட்டவிரோதம். தண்டனைக்குரிய குற்றமாகும்.

கரூர் சம்பவம்: விஜய்க்கு கண்டனம்.... சிறப்பு புலனாய்வு குழு அமைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

விஜய் மீது கைவைத்தால், அவருடைய ஆதரவாளர்கள் வெகுண்டெழத்தான் செய்வார்கள். ஆனால் சட்டத்தின் பார்வையில் எல்லோரும் ஒன்றுதான். கலைஞர், ஜெயலலிதா போன்றவர்கள் கைதாகவில்லையா? கைதுக்குரிய நடவடிக்கையை செய்தால் எவர் ஒருவருக்கும் இங்கே விதிவிலக்கு கிடையாது. அந்த புரிதல் முதலில் மக்களுக்கு வர வேண்டும். அப்படி வர இன்றைக்கு நீதிபதியை விமர்சித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் சிறையில் அடைக்க வேண்டாம். அவர்களுக்கு புரிய வையுங்கள். நீதிமன்றத்திலேயே விபத்து என்று சொல்லிவிட்டு வெளியில் வந்து, எங்குமே நடக்காதது கருரில் எப்படி நடந்தது என்கிறார். நீங்களும் பல கேமராக்களில் வீடியோ எடுத்து வைத்திருக்கிறீர்கள். ஒரு ஆதாரத்தை இன்றைக்கு எடுத்து கையில் வைத்திருக்க வேண்டாமா? நீதிமன்றத்தில் ஏன் கொடுக்கவில்லை? காரணம் அப்படி ஆதாரம் இல்லை. அதனால் கொடுக்கவில்லை. சும்மா போகிற போக்கில் குற்றச்சாட்டை சொல்லி ஒரு சமுதாயத்தையே தவறாக வழிநடத்தாதீர்கள். சட்டத்தின் ஆட்சி நடக்கிற இந்த நாட்டில் சட்ட நடவடிக்கைகளுக்கு விஜய் எந்த குறுக்கீடும் செய்யக்கூடாது. கசப்பான தீர்ப்புதான் என்றாலும் விஜய் ஒத்துழைக்க வேண்டும். இந்த தீர்ப்பு தப்பு என்று நீங்கள் மேல்முறையீட்டிற்கு தான் செல்ல வேண்டுமே தவிர, பசங்களை விட்டு விளையாட்டு காட்டுவது யார் செய்தாலும் தவறுதான், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ