spot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைத.வெ.க. செய்த திருட்டுத்தனம்! விஜய்க்கு ஏழரை சனி ஆரம்பம்! கோட்டீஸ்வரன் நேர்காணல்!

த.வெ.க. செய்த திருட்டுத்தனம்! விஜய்க்கு ஏழரை சனி ஆரம்பம்! கோட்டீஸ்வரன் நேர்காணல்!

-

- Advertisement -

தவெகவில் விருப்ப மனுக்களை ஒரு மணி நேரத்தில் 10 ஆயிரம் பேர் வாங்கியதாக கூறுவது எதார்த்தத்திற்கு ஏற்புடையது அல்ல. இதன் மூலம் விஜய் மாஸ் காட்ட முயற்சிக்கிறார் என்று மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- த.வெ.க தலைவர் விஜய்க்கு எதிரான வருமான வரித்துறை அபராதம் விதித்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, இந்த வழக்கில் தலையிட முகாந்திரமே இல்லை என்று கூறியுள்ளார். 37 பக்கங்கள் கொண்ட அந்த தீர்ப்பை நடிகர்கள் மற்றும் கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் கண்டிப்பாக அறிந்துகொள்ள வேண்டியதாகும். அபராதம் கட்டவில்லை என்றால் நம்முடைய கௌரவம் காற்றில் பறந்துவிடும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

விஜய் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாக உள்ளார். திராவிட கட்சிகளுக்கு மாற்று என்று சொல்லிக்கொண்டு வரும் விஜய், வருவதற்குள்ளே இவ்வளவு சேட்டை செய்கிறார். தவெகவில் விருப்ப மனுக்கள் வழங்கும் பணி தொடங்கியுள்ளது. ஒரு மணி நேரத்தில் 10 ஆயிரம் பேர் விருப்பமனுக்கள் வழங்கப்பட்டுள்ளது என்று சொல்கிறார்கள்.  இவர்கள் நடைமுறைக்கு உகந்த செயல்களை செய்வதே கிடையாது. வேற்று கிரகத்தில் வசிப்பவர்களை போன்றே எல்லாவற்றையும் செய்கிறார்கள்.

தவெக மீட்டிங் வருவதற்கு க்யூ.ஆர்.ஸ்கேனர் வைக்கிறார்கள். அதேபோல், விருப்ப மனு வினியோகத்திற்கும் ஸ்கேனர் வைக்க வேண்டியது தானே. இல்லாவிட்டால் மாவட்டத்திற்கு ஒரு நாள் என்று ஒதுக்கி விருப்பமனுக்கள் வழங்கினால், குறைவான கூட்டம் வரும். ஆனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் எல்லாம் டென்ஷன் ஆகி  போராட்டம் நடத்திய பிறகு ஆன்லைனில்  கொடுப்பதாக அறிவிக்கிறார்கள். அதிமுக, காங்கிரஸ் போன்ற கட்சிகளிலும் விருப்ப மனுக்கள் விநியோகம் செய்கிறார்கள். ஆனால் அங்கே எல்லாம் இப்படியான அலப்பறைகள் கிடையாது. இப்படி சுற்றுவட்டார பகுதிகளை மக்களை துன்பப்படுத்துவது, தேர்தலில் தவெகவுக்கு எதிராக வாக்களிப்பார்கள்.

சாலையில் யாரை கேட்டு தவெகவினர் தடுப்புகளை அமைக்கிறார்கள். அதேவேளையில் எதற்காக விருப்ப மனுக்களின் விலையை ரூ.100 ஆக குறைக்கிறார்கள். அவர்களை பொறுத்தவரை ஆயிரக்கணக்கான விருப்ப மனுக்கள் விற்பனையானதாக மாஸ் காட்ட விரும்புகிறார்கள். இல்லாவிட்டால் இலவசமாக இணையத்தில் பதிவு செய்து, தபால் மூலம் அனுப்ப சொல்லுங்கள்.

விஜயை பொருத்தவரை அவருக்கு பொதுமக்களுடன் பழகும் எண்ணம் கிடையாது. அதேவேளையில் விமான நிலையத்திற்கு வரும் கமல் மிகவும் எளிமையாக 2 பேருடன் செல்கிறார். செய்தியாளர்கள் எழுப்புகிற கேள்விக்கு சிரித்துக்கொண்டே பதில் அளிக்கிறார். காரணம் அவருக்கு தற்பெருமை கிடையாது. ஆனால் விஜய் தான் போனால் கூட்டம் வருகிறது என்று சொல்கிறார். இது ஒரு விளம்பர மாடல் ஆகும். இவருக்கு கூட்டம் நிறைய வருகிறது என்று விளம்பரம் காட்டி அரசியல் செய்ய வேண்டும். தவெகவில் 40 ஆயிரம் பேர் விருப்ப மனுக்கள் வாங்கிவிட்டார்கள் என்றால், அவர்கள் அனைவரையும் விஜய் சந்தித்து நேர்காணல் நடத்துவாரா? ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த், அருண்ராஜ் போன்றவர்கள் விஜயை காப்பாற்றுவதற்கு பதிலாக அவரை மாட்டி விடுகிறார்கள்.

விஜய் நாளைக்கு செய்தித்தாள்களில் விளம்பரம் கொடுக்க வேண்டும் என்றால் கூட 2 – 3 கோடி ரூபாய் செலவாகும்.  அப்போது உங்களுக்கு ரூ.1.5 கோடி ஒரு பணமா? வேறு யாருடைய சொத்தாக இருந்தால் வருமான வரித்துறை சொத்துக்களை பறிமுதல் செய்திருப்பார்கள். ஆனால் விஜய்க்கு மட்டும் சலுகை வழங்கப்படுகிறது. இதில் எங்கே அரசியல் காழ்ப்புணர்வு, அரசியல் பழிவாங்குதல் உள்ளது. அவராகவே தான் பிரச்சினைகளை தேடி போய் உட்கார்ந்து கொள்கிறார்.

ரஜினிக்கும் வருமான வரித்துறை நோட்டீஸ் போனது. அவர் அதை பேசி சரிசெய்யவில்லையா? பொது வெளியில் ஏதேனும் பிரச்சினை ஆனதா? கோச்சடையான், பாபா போன்ற படங்கள் ஓடவில்லை. அவர் கூப்பிட்டு தயாரிப்பாளர்களுக்கு பணத்தை கொடுத்துவிட்டார். இது சிறந்த உதாரணமாகும். கேரியரின் உச்சம் என்று சொன்னால், மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்க்க வேண்டும். அவர் அதிகமாக சம்பாதித்தார். அதனால் அதிகமாக வரிகட்டுகிறார். விஜய் ஒவ்வொரு நாளும் எக்ஸ்போஸ் ஆகி கொண்டிருக்கிறார். விஜய்  முதலில் தன்னை சுற்றியுள்ளவர்களிடம் நல்ல பெயர் எடுக்க வேண்டும். அதையே விஜய் கோட்டைவிட்டு விட்டார். அவர்கள் வாக்களிக்க வேண்டும் என்றால் அப்படி போய் நிற்பீர்களா? கேமரா வந்த உடன் பதுங்கி பேசுகிறார்கள். போராடிய மக்கள் மீது அந்த கட்சியினர் என்பதால் அவதூறுகளை பரப்புகிறார்கள் என்று சொல்கிறார்கள். உங்களுக்கு வெட்கமாக இல்லையா? பொதுமக்களை முதலில் பொதுமக்களாக பாருங்கள். அவர்கள் மீது  கட்சி, சாதி – மத சாயம் பூசும் வேலையை முதலில் நிறுத்துங்கள். அந்த கட்சியின் சதி, இந்த கட்சியின் சதி என்று சொல்வதை நிறுத்துங்கள். இது நீங்கள் செய்த சதியாகும்.

தற்போது சமூக வலைதளங்களில் மற்ற நடிகர்கள் குறித்து விமர்சிக்கிறார்கள். இதற்கு யார் காரணம்? தற்போதும் பிரச்சினை இல்லை. விஜய், சூர்யா, அஜித் போன்ற நடிகர்களை சென்று சந்திக்க ஆதரவு கோரலம். காரணம் அவருக்கு தான் வாக்கு தேவை. விஜய் தனக்கு பெரிய அளவில் வாக்குகள் வரும் என்று கணித்துள்ளார். அது கொஞ்சம் கொஞ்சமாக அடி வாங்கி கொண்டிருக்கிறது.  அதை அவர் தான் புரிந்துகொண்டு சரி செய்ய வேண்டும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ