spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைஇந்துக்களைப் பாதுகாத்த சுயமரியாதை இயக்கம்!

இந்துக்களைப் பாதுகாத்த சுயமரியாதை இயக்கம்!

-

- Advertisement -

வி.சி.வில்வம்

ஒரு மனிதர் இவ்வுலகில் தோன்றினால் அவரின் அறிவு, ஆற்றல், உழைப்பிற்கு ஏற்ப தம்வாழ்வை அமைத்துக் கொள்வார். அதற்கேற்ற பலன்களையும், மகிழ்ச்சியையும் அனுபவித்து விட்டு, இவ்வுலகை விட்டு மறைந்து போவார்! இதுதான் பொதுவான நடைமுறை! ஆனால் இந்த நாட்டில் தோன்றிய மனிதர்களை மட்டும் வகைவகையாகப் பிரித்து வைத்தார்கள்?

இந்துக்களைப் பாதுகாத்த சுயமரியாதை இயக்கம்!

we-r-hiring

மனிதர்களா? சூத்திரர்களா?
சில மனிதர்களைப் பார்த்தாலே தீட்டு என்றார்கள், சிலரை சாலையில் நடக்காதே என்றார்கள், வேறு சிலரைப் பொதுக் குளத்தில் தண்ணீர் எடுக்காதே என்றார்கள், சிலரை செருப்பு போடாதே என்றார்கள். மொத்தத்தில் இந்த மனிதக் கூட்டத்தையே “சூத்திரர்கள்” என்று அழைத்தார்கள்! இரண்டு கால், இரண்டு கை, ஒரு வாய், ஒரு மூக்கு உள்ள உருவத்தை “மனிதர்கள்” என்றுதான் உலகம் அழைக்கிறது! இந்தியா மட்டும் தான் “சூத்திரர்கள்” என்று அழைக்கிறது!

எவ்வளவோ பேர் ஆராய்ச்சி செய்தார்கள். ஆய்வுப்படிப்புப் படித்தார்கள், விஞ்ஞானி என்று சொல்லிக் கொண்டார்கள். ஆனால் யாருமே இந்தச் சூத்திரத்தன்மையைக் கேள்வி கேட்கவில்லை. மனிதர்களை, மனிதர்கள் என்று அழைக்காமல், ஏன் சூத்திரர்கள் என்று அழைக்கிறீர்கள் என யாருமே கேட்கவில்லை!இந்துக்களைப் பாதுகாத்த சுயமரியாதை இயக்கம்!

உங்கள் மனநிலை என்ன?
சிலர் நம்மைப் பார்த்து, “எப்பொழுதும் சூத்திரன், சூத்திரன் என்கிற வார்த்தைதானா? உங்களுக்கு வேறு பேச்சே கிடையாதா? எங்களுக்குப் போரடித்துவிட்டது” என்கிறார்கள். நீங்கள் புரிந்து கொள்வதற்காக இப்படி சொல்கிறோம்! நீங்கள் எந்த ஜாதியாகவும் இருந்து விட்டுப் போங்கள். நாளை முதல் உங்களை, உங்கள் ஊரில் இந்தெந்தத் தெருக்களில் நடக்கக் கூடாது, ஊரில் உள்ள குளத்தைப் பயன்படுத்தக் கூடாது. செருப்பு அணியக் கூடாது, பள்ளிக் கூடத்திற்குச் செல்லக் கூடாது என்று சொன்னால், உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? அப்படித்தானே எல்லோருக்கும் இருக்கும்?

இன்றைக்கு நம்மால் நினைத்துக்கூடப்பார்க்க முடியாத கொடுமைகளையே, நம் தாத்தாவும், பாட்டியும் அனுபவித்து வந்தார்கள். உலகில் வேறெந்த மனிதர்களுக்கும் இப்படிப்பட்ட அவமரியாதைகள் தடந்ததில்லை. இது ஏதோ ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மட்டும் என்று சிலர் நினைக்கிறார்கள். தமிழர்களில் உயர்ஜாதி (?) என்போருக்கும் இந்த இழிவுகள் இருந்தன. வேண்டுமானால் வெவ்வேறான இழிவுகள் இருந்திருக்கும். ஆனால் ஒட்டுமொத்தமாகத் தமிழர்களையும் சூத்திரர்கள் என்றே அவமானம் செய்தனர்!

ஹிந்துக்களைக் கொடுமை செய்பவர்கள் யார்?
சரி… மேலே சொன்னவாறு தொடக் கூடாது, நடக்கக் கூடாது, படிக்கக் கூடாது என ஹிந்துக்களைக் கொடுமை செய்த மதம் எது? இஸ்லாம் மதமா? கிறிஸ்தவ மதமா? இல்லையே? பிறப்பு முதல் இறப்பு வரை அசிங்கப்படுத்தி, அவர்களின் நிம்மதியைக் கெடுத்தது ஹிந்து மதம்தானே? தம் மதத்தில் இருப்பவர்களையே இப்படி யாரும் கொடுமைப் படுத்துவார்களா? ஆனால் ஹிந்து மதத்தில் அப்படித்தான் நடந்தது. எனவே தான் கூறுகிறோம். ஹிந்து மதத்தால் தமிழர்கள் எந்தப் பயனையும் அடைந்ததில்லை!

அதேநேரம் இந்த நாட்டில் உருவான சுயமரியாதை இயக்கம், தமிழர் வாழ்வைச் செழுமைப்படுத்தியது ! தமிழர்களை நடக்கக் கூடாது. தண்ணீர் குடிக்கக் கூடாது, படிக்கக் கூடாது என்று சொன்ன ஆரியர்களை நீ யார் எனக் கேள்வி கேட்டது? அப்படி நீதி கேட்ட அந்தச் சுயமரியாதை இயக்கத்தின் வயது இப்போது 100.இந்துக்களைப் பாதுகாத்த சுயமரியாதை இயக்கம்!3% ஹிந்துக்களும்: 97% இந்துக்களும்!
“திராவிடர் இயக்கம் ஹிந்து மக்களுக்கு எதிரானது” எனச் சிலர் சொல்கிறார்கள். நாங்கள் சரியாகவே புரிந்து வைத்திருக்கிறோம். இங்கே இருக்கிற 97 விழுக்காடு இந்துக்கள் வேறு: 3 விழுக்காடு ஹிந்துக்கள் வேறு! இந்த 3 விழுக்காட்டினர் தான் உண்மையான ஹிந்துக்கள்! அவர்கள்தான் அதன் உரிமையாளர்கள்! மீதம் 97 விழுக்காட்டினர் ஒரே இரவில் மதம் மாற்றப்பட்டவர்கள். FIP வெளி வர முடியாத எங்கள் மூதாதையர் அங்கேயே மாட்டிக் கொண்டார்கள்!

சரி! தமிழர்கள் ஹிந்து மதத்திற்கு வந்து விட்டார்கள், அவர்களுக்குக் கேடு விளைவிக்க வேண்டாம், அவர்களை அசிங்கப்படுத்த வேண்டாம், அவர்கள் உரிமைகளைப் பறிக்க வேண்டாம் என்கிற எண்ணம் இல்லாமல், பார்ப்பனர்கள் கொடுங்கோலர்களாகத் தொடர்கிறார்கள்!

பெரியார் ஹிந்துக்களுக்கு எதிரியா?
இந்த 3 விழுக்காடு ஹிந்துக்களின் கொடுமைகளைத் தட்டிக் கேட்டதால், 97 விழுக்காடு தமிழர்களுக்கு எதிராக சுயமரியாதை இயக்கத்தை நிறுத்தப் பார்த்தார்கள்! பெரியாரையும், தமிழர்களையும் பிரிக்க நினைத்தார்கள், ஹிந்து மதத்தை மட்டுமே எதிர்க்கிறார் என்றும் தூண்டிவிட்டார்கள்!

ஆனால் உண்மை வரலாறு என்ன? பெரியார் ஹிந்துக்களுக்கு எதிராக இருந்தாரா? இன்றைக்குச் சாலையில் நடக்கவும், செருப்பு அணியவும், தண்ணீர் குடிக்கவும், படிக்கவும் என்று எல்லா உரிமைகளும் வந்துவிட்டது! எப்படி வந்தது? ஹிந்து மதம் தன்னைத் திருத்திக் கொண்டதா? மனிதநேயத்தைக் கற்றுக் கொண்டதா? மூன்று விழுக்காடு பார்ப்பன ஹிந்துக்கள், 97 விழுக்காடு தமிழ் இந்துக்களுக்கு உரிமைகள் கொடுத்துவிட்டார்களா?

இந்துக்களைப் பாதுகாத்த சுயமரியாதை இயக்கம்!

 

சுயமரியாதை இயக்கத்தின் சாதனைகள்!
பிறப்பு முதல் இறப்பு வரை பாதிக்கப்பட்டு வாழ்ந்த தமிழ் இந்துக்களுக்குப் பிறப்புரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை, மொழி உரிமை, கல்வி வேலை உரிமை, தொழில் கல்வி உரிமை,திருமண உரிமை, சொத்துரிமை, மொத்தத்தில் சுயமரியாதைக்கான அத்தனை உரிமைகளையும் பெற்றுத் தந்தது சுயமரியாதை இயக்கம்! தமிழர்கள் இந்து மதத்தில் இருந்தாலும், அதில் நமக்கு மாற்றுக் கருத்து இருந்தாலும், அந்த முரண்களை மட்டுமே பேசிக் கொண்டிருக்காமல், ஆக்கபூர்வமான செயல்களைச் செய்து, தமிழர் தம் வாழ்வை இன்று உலக அளவில் உயர்த்திக் காட்டியது சுயமரியாதை இயக்கமே!

இன்னும் சொன்னால் 3 விழுக்காடு ஹிந்து மதப் பார்ப்பனர்கள் வாழ்க்கையும் இன்று விஞ்ஞானப்பூர்வமாக மாறி இருக்கிறது. உடைகள் மாறிவிட்டன, உணவு மாறியது, தலைமுடிகள் மாறிவிட்டன. மொத்தத்தில் அஞ்ஞான வாழ்க்கையை அவர்கள் வாழ்வதில்லை. பத்து பைசாவுக்குப் பயன்படாத பூணூல் மட்டும் தான் அவர்களிடம் மிச்சமாக இருக்கிறது.

நாட்டிற்கு யார் தேவை?
அதேபோல பார்ப்பனப் பெண்களின் வாழ்க்கை மாற்றத்திற்கு யார் காரணம்? பத்து வயதில் திருமணம் செய்து, வீட்டிற்குள்ளேயே முடக்கி வைத்து, கணவர் இறந்தால் அதே நெருப்பில் போட்டு கொளுத்திய நிகழ்வுகள் எல்லாம் தானாக மாறிவிட்டதா? அல்லது அஹ்ரகாரத்தில் இருந்த ஆண்கள் தடுத்து நிறுத்தினார்களா? அம்மா சாவை மகன்கள் நிறுத்தினார்களா? அக்கா, தங்கை சாவை அண்ணன் தம்பிகள் நிறுத்தினார்களா! இல்லையே? திராவிடர் இயக்கம்தானே செய்தது! சுயமரியாதை இயக்கம்தானே பெண்களைச் சாவில் இருந்து தடுத்தது!”

எனவே, இந்து மதத்தை ஏற்றுக் கொண்ட தமிழர்களுக்கு இன்றுவரை பாதுகாப்பாக இருப்பது சுயமரியாதை இயக்கம்தான்! அதே நேரம் பல நூற்றாண்டுகள் ஆகியும் பார்ப்பனர்கள் தங்கள் அக்கிரமத்தைக் கைவிட வில்லை! நூற்றாண்டுகள் கடந்தும் சுயமரியாதை இயக்கமும் தம் போராட்டங்களை விட்டுவிட் வில்லை. எனவே, இந்த நாட்டிற்குத் தேவை சுயமரியாதை இயக்கமா? ஹிந்து மதமா? என்பதைத் தமிழர்கள் யோசிக்க வேண்டும்!

இந்துக்களைப் பாதுகாத்த சுயமரியாதை இயக்கம்!

அடிமேல் அடிவைத்து ஆகாயத்தைத் தொட்டவர்கள்!
சுயமரியாதை இயக்கத்தின் முன்னால் மூன்று விழுக்காடு பார்ப்பன ஹிந்துக்கள் தோற்றுப் போயிருக்கிறார்கள்! 97 விழுக்காடு  இந்துக்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள்! காரணம், தொடங்கிய காலத்தில் இருந்தே அடிமேல் அடி வைத்து, இந்த ஆகாயத்தைத் தொட்டிருக்கிறார்கள் சுயமரியாதை இயக்கத் தினர்! எனினும் 2 ஆயிரம் ஆண்டு காலபார்ப்பனர்கள் திருந்திவிடுவார்களா? இத்தனை ஆண்டு கால சொகுசு வாழ்க்கையைத்தான் விட்டு விடுவார்களா? அதனால்தான் சுய மரியாதை இயக்கமும் ஓயாது ஒலித்துக் கொண்டே இருக்கிறது!இந்துக்களைப் பாதுகாத்த சுயமரியாதை இயக்கம்!

சுயமரியாதை இயக்கக் கோட்டை!
திராவிடர் இயக்கத்தின், திராவிட ஆட்சியின் நன்மைகளைப் பெறாத ஒரே ஒரு தமிழ் இந்துவோ, ஒரே ஒரு தமிழ் கிறிஸ்தவரோ, ஒரே ஒரு தமிழ் இஸ்லாமியரோ தமிழ்நாட்டில் இருக்க முடியாது! தமிழர்கள் எந்த மதத்தில், எந்த ஜாதியில் இருந்தாலும், அதில் மாற்றுக் கருத்துகளும்,விமர்சனங்களும் இருந்தாலும் அவர்களின் உரிமைகளை ஒருபோதும் இந்த இயக்கம் விட்டுக் கொடுத்ததில்லை! இன்னும் சொன்னால் உரிமைகளுக்காகத் தங்கள் இன்னுயிரையும் இழந்திருக்கிறார்கள்! ஆகவே, தமிழர்களுக்கு மரியாதைக் குறைவு ஏற்படாமல் காத்திடும் கருப்புக் கவசமே இந்தச் சுயமரியாதை இயக்கம்! இந்த நூற்றாண்டுக் கோட்டையில்தான், அதன் உச்சியில்தான் தமிழர்கள் வாழ்கிறாா்கள்! அவர்கள்தம் வாழ்வு மிளிர்கிறது! இன்னும் உயரம் செல்ல வேண்டும்!

தெருவுல நிறுத்திட்டாங்க! ஸ்டாலின் உடனடி மூவ்! 3 மாதத்தில் தீர்ப்பு! எஸ்.பி.லெட்சுமணன் நேர்காணல்!

MUST READ