spot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைவிஜய் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்! அமித்ஷா திட்டம் படுதோல்வி! ஆட்டத்தை தொடங்கிய ஸ்டாலின்! தராசு ஷ்யாம்...

விஜய் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்! அமித்ஷா திட்டம் படுதோல்வி! ஆட்டத்தை தொடங்கிய ஸ்டாலின்! தராசு ஷ்யாம் நேர்காணல்!

-

- Advertisement -

காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைப்பது என்பது பாஜகவின் நேரடி எதிர்ப்பை சந்திப்பதாகும், எனவே அந்த முடிவை விஜய் எடுப்பாரா? என்பது சந்தேகத்திற்கு உரியதாகும் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.

tharasu shyam
tharasu shyam

அமித்ஷா தமிழக வருகை குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- நயினார் நாகேந்திரன் பிரச்சார நிறைவு கூட்டத்தில் பங்கேற்பதற்காக உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வருகிறார். அவரது வருகை என்டிஏ கூட்டணியை பலப்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. என்டிஏவில் அதிமுக, பாஜக, பாமக மற்றும் இதர சிறிய கட்சிகள் உள்ளன. விஜய் வந்தால் தான் இந்த கூட்டணி விரிவாக்கம் செய்யப்பட்டதாக அர்த்தமாகும். ஆனால் தவெக கூட்டணிக்கு வரப் போவது இல்லை. டிடிவி தினகரன், ஓபிஎஸ் மீண்டும் என்டிஏவுக்குள் வருவார்கள் என்று பேச்சுக்கள் எழ தொடங்கியுள்ளது.

we-r-hiring

ஓபிஎஸ்-ஐ பொருத்தவரை மீண்டும் அதிமுகவிற்குள் சேர்த்து பொறுப்பு வழங்க வேண்டும் என்பது தான் நிபந்தனையாக உள்ளது. அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒருபோதும் ஒப்புக்கொள்ள மாட்டார். என்டிஏ கூட்டணியில் டிடிவி, ஓபிஎஸ்க்கு இடம் கொடுக்க எடப்பாடி பழனிசாமி ஒப்புக்கொள்வார். ஆனால் அவர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பது கேள்விக்குரியது. என்னை பொருத்தவரை இதற்கு டிடிவி ஒருபோதும் ஒத்துக்கொள்ள மாட்டார்.

டிடிவி தினகரன் தவெகவை நோக்கிய பயணத்தை தொடங்கி விட்டதாகவே நினைக்கிறேன். பல முறை அதை வெளிப்படையாகவே சொல்லிவிட்டார். இன்றைய சூழலில் அமமுகவுக்கு அங்கீகாரம் பெற வேண்டும். தவெக அணிக்கு செல்லும்போது விஜய் வாக்குகளுடன் சேர்ந்து டிடிவி வாக்குகளும் சேர்கிறபோது அவருடைய கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்கும். அதே நோக்கத்திற்காக தான் அன்புமணியும் முயற்சிக்கிறார். அதிமுக – பாஜக கூட்டணியுடன் சேர்கிறபோது, அவருக்கும் சின்னம், அங்கீகாரம் கிடைக்கும்.

விஜயுடன் பேசிக் கொண்டிருப்பதாக தான் செங்கோட்டையன் போன்றவர்கள் சொல்கின்றனர். ஓபிஎஸ் ஆதரவாளர்கள் திமுக அணிக்கு செல்கிற முடிவில் உள்ளனர். டிடிவி அணியில், 2 முதல் 3 பேர் தங்களின் ஊர்களில் செல்வாக்கு மிக்கவர்கள். அவர்களும் திமுக, தவெக கூட்டணி வந்தால் சரியாக இருக்கும் என நினைக்கின்றனர். எனவே ஜனவரி இறுதிக்குள்ளாக இதற்கு ஒரு முடிவு கிடைக்கும் என்று நினைக்கிறேன்.

ஓபிஎஸ்சுடன் இணைவதை தொண்டர்கள் எப்படி ஏற்று கொள்வார்கள்?டிடிவி தினகரன் பதில்

இன்றைய தேர்தல்களில் வெற்றியை தீர்மானிக்கும் விஷயங்களில் பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவையும் உண்டு. இதில் தொழில்நுட்பம் மூலம் பேக் வீடியோக்கள் போன்றவற்றை உருவாக்க பெரிய அளவில் நிதி தேவை. இன்றைய கால கட்டத்தில் அது திமுகவால் தான் முடியும். அதிமுக பொருளாதார அளவில் வலுவான நிலையில் இல்லை. ஒருவேளை ஓபிஎஸ், டிடிவி ஆகியோர் திமுக கூட்டணிக்கு செல்வதாக இருந்தால், பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப உதவிகள் கிடைக்கும். ஆனால் மீண்டும் அவர் அதிமுகவுக்கு திரும்ப முடியாது. டிடிவி அந்த முடிவை ஒருபோதும் எடுக்க மாட்டார். அத்துடன்,ஓபிஎஸ் பாஜகவை முழுமையாக பகைத்துக்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.

மேலும், 2029 மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி பலம் பெறுவதை பாஜகவும் விரும்பாது. இதுவரை தவெகவை பெரிதாக விமர்சிக்காத பாஜக, ஒருவேளை காங்கிரஸ், தவெகவுடன் கூட்டணி சேர்ந்தால் அவர்களை விமர்சிக்கவும் வாய்ப்பு உள்ளது. தவெக உடன் சேர்ந்து காங்கிரஸ் தேர்தலில் வெற்றி பெற்றாலோ, வாக்கு சதவீதம் அதிகம் எடுத்தாலோ அது பாஜகவுக்கு பாதிப்பு ஆகும். அதனால் தவெக, பாஜகவின் முழு எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டி வரும்.

எதிர்காலத்தை கணக்கில் கொண்டுதான் எல்லோரும் கூட்டணி முடிவுகளை எடுப்பார்கள். சும்மா வாக்கு சதவீதத்தை வைத்து கணக்கு போடுவது ஏற்புடையது அல்ல. விஜய், படத்தில் நடிப்பதை நிறுத்திவிடுவார் என்பதை நான் நம்பவில்லை. கண்டிப்பாக அவர் நவம்பரில் திரைப்படம் நடிக்க பேசிக் கொண்டிருக்கிறார் என்று தான் என்னுடைய நண்பர்கள் சொல்கிறார்கள். எம்ஜிஆர் கட்சியை 1972ல் தொடங்கிய நிலையில், அவர் கடைசியாக 1977ல் படம் நடித்தார். திரைப்படத்தில் நடித்ததால் அவருடைய பதவி ஏற்பு நிகழ்ச்சியே தாமதம் ஆனது. முதலமைச்சர் ஆன பிறகும் எம்ஜிஆருக்கு நடிக்கும் ஆசை இருந்தது. திரைப்படத்தில் நடிக்கலாமா? என்று கேட்டு அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாய்க்கு கடிதம் எழுதினார். அவர் மழுப்பலாக தான் பதில் அளித்தார்.

அரசியல்வாதி ஆன பிறகு நடிக்கக்கூடாது என்று இல்லை. விஜய், இதுதான் என்னுடைய கடைசி திரைப்படம் என்று சொல்லிவிட்டார். ஆனால், அந்த முடிவு மாற்றக்கூடிய முடிவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் அதற்கு மத்திய ஆளும் கட்சியின் எதிர்ப்பு இல்லாமல் இருக்க வேண்டும். சினிமா உலகத்தில், மாநில ஆளுங்கட்சியின் எதிர்ப்பே கடினம். மத்திய அரசின் எதிர்ப்பையும் எதிர்கொள்ள முடியாது. அதனால் காங்கிரசை சேர்த்துக்கொள்வது மிகவும் பெரிய அரசியல் முடிவு.அந்த முடிவை விஜய் எடுப்பாரா? என்பதும் சந்தேகத்திற்குரியதாகும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ