Homeசெய்திகள்கட்டுரைஇது வெறும் சந்திப்பு அல்ல! பாஜகவுக்கு மரண அடி! உடைத்துப் பேசும் ஆழி செந்தில்நாதன்!

இது வெறும் சந்திப்பு அல்ல! பாஜகவுக்கு மரண அடி! உடைத்துப் பேசும் ஆழி செந்தில்நாதன்!

-

- Advertisement -

தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டத்தின் மூலம் எதிர்காலத்தில் இந்தியா அனைத்து மக்களுக்குமான ஒரு நாடாக இருக்குமா? என்கிற கேள்விக்கு பதில் தேடும் பயணத்தை முதலமைச்சர் தொடங்கியுள்ளார் என்று மூத்த பத்திரிகையாளர் ஆழி செந்தில்நாதன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற தென்மாநில அரசியல் தலைவர்களின் மாநாட்டின் அரசியல் முக்கியத்துவம் குறித்து மூத்த பத்திரிகையாளர் ஆழீசெந்தில்நாதன் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறி இருப்பதாவது:- நீண்ட காலத்திற்கு பிறகு அனைத்து இந்திய அரசியலை தீர்மானிக்கக்கூடிய சக்தியாக தமிழ்நாடும், திமுகவும் மீண்டும் அடி எடுத்து வைத்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொகுதி மறுவரையறை விவகாரத்தை முன்னெடுத்துச் செல்லும்  போதுதான் இது மிகப்பெரிய வரலாறு ஆக மாறும். எதிர்காலத்தில் இந்தியா அனைத்து மக்களுக்குமான ஒரு நாடாக இருக்குமா? என்கிற கேள்விக்கு பதில் தேடும் பயணத்தை முதலமைச்சர் தொடங்கியுள்ளார். கூட்டாட்சி தத்துவத்தை நோக்கி இந்தியாவை அழைத்துச் செல்லுகின்ற பெரிய பொறுப்பை அவர் தன் மீது ஏற்றி வைத்துக்கொண்டிருக்கிறார்.

மும்மொழி தொடர்பான பிரச்சினை வந்தது முதல் இந்தியாவில் முக்கியமான பேசு பொருளாக மாறியுள்ளது. இந்தியா முழுக்க உள்ள அத்தனை பேரும் இன்றைக்கு சென்னையை திரும்பி பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.  இது தென்னிந்தியாவின் குரல் மட்டும் கிடையாது. இதில் பஞ்சாப் இருக்கிறது. பெங்கால் இருக்கிறது. ஒடிசா இருக்கிறது. பாதிக்கப்படக்கூடிய அனைவரையும் ஒன்று சேர்த்துள்ளனர். சரியாக சொல்வது என்றால் தென்மாநிலங்களின் முயற்சி என்று மட்டுப்படுத்துவதற்கு பதிலாக, நாடு முழுவதும் உள்ள பாதிக்கப்பட்ட மாநிலங்களின் கூட்டு முயற்சி என்று சொல்லும்போதுதான் வலுப்படும். இல்லவிட்டால் அதனை பிரிவினை வாதம் என்று சொல்லிவிட்டு போய்விடுவார்கள். ஆனால் இப்போது அப்படி சொல்ல முடியாது.

இந்த ஆலோசனைக்கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆகியோர் பேசியதைதான் நான் கேட்டேன். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் விளக்கத்தை பார்த்தேன். இந்த கூட்டம் மிகவும் புரொபஷனலாக இருந்தது. குறிப்பாக ஒடிசா மாநில முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக் காணொலி காட்சி அனுப்பி இருந்தார். இந்த முயற்சி என்பது தென்னிந்திய மாநிலங்கள் எவ்வளவு அரசியல் முதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள் என்றும், பாராளுமன்றத்தில் கூச்சல் போடும் இந்தி எம்பிக்களின் கலாச்சாரத்தையும் நாம் புரிந்து கொள்ளலாம்.

தொகுதி மறுவரையறை என்று வருகிறபோது இந்தி பேசும் மாநிலங்களுக்கு பலன் இருக்கும். இந்தி பேசாத மாநிலங்களுக்கு பலன் இருக்காது. அப்போது, இந்தி பேசும் மாநிலங்களில் உள்ள பாஜக, காங்கிரஸ், அகிலேஷ் கட்சி, நிதிஷ் கட்சி, லாலு பிரசாத் கட்சி என அனைத்துக்கட்சிகளும் ஒன்றிணைந்து பாஜகவின் குரலில் தான் பேசுவார்கள்.இந்தியா கூட்டணியில் இருக்கிற மெஜாரிட்டி போர்ஸ் யார் என்றால் வடஇந்தியாவில் உள்ள பாஜக அல்லாத கட்சிகள் ஆகும். ஆனால் அடுத்த தேர்தல் வருகிறபோது கூட்டணி உடைந்து போகிறது. ஏனென்றால் பயனை அனுபவிப்பவர்களாக இருக்கிறபோது அவர்கள் நமக்கு குரல் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. எந்த காலத்திலும் கொடுப்பதும் இல்லை. இந்தியா கூட்டணியை உடைக்க பாஜக இதை எடுக்கிறது. இதை எடுக்கிறபோது இந்தியா கூட்டணி உடைந்துபோகும். அப்போது இந்தியாவில் உள்ளவர்களுக்கு மாற்று என்ன என்றால், கூட்டாட்சி முன்னணியை உருவாக்கிய நாளாக இந்த நாள் எதிர்காலத்தில் பதியப்படும்.

வியூகம் வகுத்த காங்கிரஸ்.... பெங்களூருவில் அணிதிரளும் எதிர்க்கட்சித் தலைவர்கள்!
File Photo

இந்த நடவடிக்கை இந்தி பேசும் மாநிலங்கள் மீதான வன்மம் கிடையாது. இந்தி பேசும்மநிலங்கள் தொடர்ந்து நம்மை புறக்கணிக்கும்போது, அலட்சியப்படுத்தும் போது, அதற்கு எதிராக உருவாகிற எதிர்வினைதான் அது. இன்று வரை தமிழ்நாடு எதிர்வினை ஆற்றி வருகிறது. எதிர்கால அரசியலில் மாநிலங்களின் குரலை உருவாக்குவதற்கு ஏதேனும் தொடக்கப்புள்ளி வேண்டும். இந்தியா கூட்டணியால் தற்போது இதனை செய்ய முடியாது. அவர்கள் பயன் அடையும்போது நம்முடன் நிற்க மாட்டார்கள். அதனால் அவர்களுக்கு வெளியில் உள்ள மற்ற மாநிலங்களை ஒன்றுதிரட்டி ஒரு கூட்டாட்சி முன்னணியை உருவாக்க வேண்டும். இந்த நிகழ்ச்சி என்பது அதை நோக்கி இந்தியாவை செலுத்தக்கூடிய மிக முக்கியமான நிகழ்வாகும். அந்த அடிப்படையில்  இதை தொகுதி மறுவரையறை விவகாரமாக மட்டும் பார்க்காமல் இந்தியா எதிர்காலத்தில் ஒரு கூட்டாட்சி நாடாக இருக்குமா? அல்லது பாஜக தலைமையில் ஒற்றை ஆட்சி நாடாக மாறுமா? என்கிற போராட்டத்திற்கும் மிகவும் முக்கியமான நாளாகும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ