Homeசெய்திகள்ஆன்மீகம்ஆவடி அந்தோணியார் திருச்சபை 73 ஆண்டு கொண்டாட்டம்

ஆவடி அந்தோணியார் திருச்சபை 73 ஆண்டு கொண்டாட்டம்

-

ஆவடி அந்தோணியார் திருச்சபை 73 ஆண்டு கொண்டாட்டம்
அந்தோணியார் திருச்சபை

தூய்மையான வாழ்விற்கு வழிகாட்டக்கூடிய புனிதர்கள் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் தோன்றியிருக்கிறார்கள். அப்படி 13ம் நூற்றாண்டில் தோன்றியவர் தான் அந்தோணியார்.

புனித ஃபிரான்ஸிஸ் அஸீஸியர் நிறுவிய சபையின் துறவியான அந்தோணியார். இறை நம்பிக்கை அற்றவர்களையும் தன் அன்பால் இறை நெறியில் மாற்றினார். அவருடைய இறை நெறி சொற்பொழிவை கேட்க பெரும் திரளான மக்கள் கூடுவார்கள் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.

ஆவடி அந்தோணியார் திருச்சபை 73 ஆண்டு கொண்டாட்டம்
73ம் ஆண்டு கொண்டாட்டம்

பெரும் செல்வந்தராக பிரபுகள் குடும்பத்தில் பிறந்த அந்தோணியார் ஏழைகளிடமும், சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டவர்களிடமும் அதிக கனிவுடன் நடந்து கொள்வார் என்றும் அப்படி பழகுவதே அவருடைய தனி சிறப்பு என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இயேசுவின் நல் உபதேசங்களின்படி ஏழைகளின் மீது அன்பு செலுத்தி அவர்களுக்கு தொண்டு செய்வதில் ஆர்வமுடைய அந்தோணியார் தன் வாழ்வின் இறுதிவரை ஏழை மக்களுக்கு சேவை செய்து வந்தார். அந்தோணியார் தனது 36வது வயதில் 1231ம் ஆண்டு ஜுன் மாதம் 13ம் நாள் மறைந்தார். மறு ஆண்டே அவருக்கு புனிதர் பட்டம் வழங்கி திருச்சபை பெருமிதம் அடைந்தது.

ஆவடி அந்தோணியார் திருச்சபை 73 ஆண்டு கொண்டாட்டம்
புனித அந்தோணியார்

பல ஆண்டுகளுக்கு பின்னர் அவருடைய கல்லறையை திறந்து பார்த்தபோது அவருடைய நாக்கு மட்டும் அழியாமல் இருந்ததைக் கண்டு ஆய்வாளர்கள் மெய்சிலிர்த்து போனார்கள். இத்தாலி பதுவா நகரில் இன்றும் அவருடைய நாக்கு கண்ணாடிக்குள் வைத்து பாதுகாத்து வருகின்றனர்.

இரண்டாம் உலகப்போரின் போது ஆவடி படை வீரர்களின் தலமாக இருந்தது. ஆயுதங்கள், வெடி மருந்துகளை ஆவடியில் சேமித்தனர். அப்போது கணிசமான எண்ணிக்கையில் கிறிஸ்தவர்கள் வந்தனர். அவர்கள் வழிபாடு செய்ய கட்டப்பட்டதுதான் அந்தோணியார் திருச்சபை. 1930ம் ஆண்டு புனித அந்தோணியார் பெயரில் ஆலயம் அமைத்தனர். 1959ம் ஆண்டு பங்கு சபையாக மாறி கல்வி நிறுவனங்கள், சமுதாய செயல்பாடுகள் என்று சபையின் சேவை விரிவடைந்தது.

2000ம் ஆண்டில் புதிய வடிவமைப்பில் ஆலயம் கட்டப்பட்டது. ஆவடி அந்தோணியார் திருச்சபை 73 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. அதன் பங்கு தந்தைகள் கோயில் வளர்ச்சியில் பெரும் தொண்டாற்றி வருகின்றனர். ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர்கள் என்று அனைவரும் வழிபாடு செய்து வருகின்றனர். நிறைய பேர் நிறைய பிரச்சனைகளோடு வருகின்றனர். பிரச்சனைகள் தீரும் என்று நம்பிக்கையோடு செல்கின்றனர்.

ஆவடி புனித அந்தோனியார் திருத்தலத்தில் 73 ஆம் ஆண்டு பெருவிழா கொடி ஏற்றத்துடன் இன்று மாலை தொடங்கவுள்ளதாக திருத்தலத்தின் ஃபாதர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஆவடியில் உள்ள புனித அந்தோணியார் திருச்சபையின் இந்த ஆண்டு 73வது பெருவிழா ஜூன் 13ம் தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக  17ஆம் தேதி ஆடம்பர  திருத்தேர் பவனி மற்றும் திருவிழா திருப்பலியும் நடைபெறவுள்ளது.

குறிப்பாக விழாவை முன்னிட்டு ஆலயம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய 20 ஆயிரம் பக்தர்கள் வரை இந்த விழாவில் கலந்து கொள்ளவுள்ளதாகவும் இதற்கான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக விழா குழுவினர் தெரிவித்துள்ளனர்.

MUST READ