Homeசெய்திகள்ஆவடிஆந்திராவில் இருந்து கடத்திவரப்பட்ட 21கிலோ கஞ்சா பறிமுதல்

ஆந்திராவில் இருந்து கடத்திவரப்பட்ட 21கிலோ கஞ்சா பறிமுதல்

-

- Advertisement -

ஆந்திர மாநிலத்தில் இருந்து விற்பனைக்காக கடத்திவரப்பட்ட 21 கிலோ கஞ்சாவை கைப்பற்றிய காவல் துறையினர் இது தொடர்பாக இருவரை கைது செய்துள்ளனர்.

kanja

அம்பத்தூர் மதுவிலக்கு அமலாக்கத்துறை போலீசார் இன்று சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலை பாடி அருகே ஆய்வாளர் டில்லி பாபு மற்றும் உதவி ஆய்வாளர் கார்த்திக் தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக வாகனத்தில் வந்த இருவரை மடக்கி மேற்கொண்ட சோதனையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னையில் புழக்கத்தில் விட 21 கிலோ கஞ்சா கொண்டு வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

we-r-hiring

இதனிடையே கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இந்த கடத்தலில் ஈடுபட்ட சிலம்பரசன் மற்றும் கோகுல்ராஜ் ஆகிய இருவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து அவர்கள் அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர் காவல்துறையினரின் வாகன தணிக்கையில் சிக்கிய 21 கிலோ கஞ்சாவால் சென்னை அம்பத்தூர் பாடி கொரட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் புழக்கத்தில் விட தீட்டிய திட்டம் முறியடிக்கப்பட்டதை அடுத்து வாகனம் தணிக்கையில் ஈடுபட்ட போலீசாரை ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் வெகுவாக பாராட்டி உள்ளார்.

MUST READ