- Advertisement -
ஆவடி காந்தி நகர் விவேகானந்தா தெருவை சேர்ந்தவர் ஐயப்பன்(44). இவர், ஆவடி கண்ணப்பாளையம் பகுதியில் மரக்கடை ஒன்று நடத்தி வருகிறார்.
இந்நிலையில், நேற்று முன்தினம்(20.02.2023) இரவு வழக்கம் போல் 9 மணி அளவில் கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். மறுநாள்(21.02.2023) காலை 7 மணி அளவில், அப்பகுதி மக்கள் மரக்கடையில் தீப்பற்றி எரிவதாக ஆவடி தீயணைப்புத் துறையினருக்கும் மற்றும் கடை உரிமையாரான ஐயப்பனுக்கும் தகவல் கொடுத்தனர்.

இதனை தொடர்ந்து, ஆவடி தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்தனர். பின்னர், அந்த தீயினை அரை மணி நேரம் போராடி அணைத்தனர். மேலும் இங்கு நடத்திய விசாரணையில், சாலையில் சென்ற மர்ம நபர் குப்பையை எரித்துவிட்டு சென்றதாகவும் அதனால், தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த தீ விபத்தில் சுமார் ரூபாய். 10,000 மதிப்புள்ளா பொருட்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து போலீசார் இன்று வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.


