spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்ஆவடிசாலையோரம் நின்ற லாரி மீது இரண்டு லாரிகள் மோதி விபத்து

சாலையோரம் நின்ற லாரி மீது இரண்டு லாரிகள் மோதி விபத்து

-

- Advertisement -

ஆவடி அருகே மீஞ்சூர் வண்டலூர் வெளிவட்ட சாலையில் டீசல் இல்லாமல் நின்று கொண்டிருந்த லாரி மீது இரண்டு லாரி மோதி விபத்து நடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

we-r-hiring

சென்னை ஆவடி அடுத்த மோரை அருகே மீஞ்சூர் வண்டலூர் தேசிய நெடுஞ்சாலையில், டீசல் இல்லாமல் கண்டய்னர் லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்பொழுது அந்தவழியாக, இன்று அதிகாலை மணல் எடுத்துக்கொண்டு வந்த இரண்டு லாரிகள் ஒன்றன் பின் ஒன்று நின்று கொண்டிருந்த கண்டய்னர் லாரி மீது பயங்கர சத்தத்துடன் மோதியது. இதில் இரண்டு லாரிகளிலூம் உள்ள முன்பக்க பக்கவாடு சுக்கு நூறாக நொறுங்கியது.

இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆவடி மற்றும் அம்பத்தூர் தீயணைப்பு வீரர்கள், விபத்தில் படுகாயம் அடைந்து வண்டி இடுபாட்டிற்குள் சிக்கிக் கொண்டிருந்த ஓட்டுநர்களை கட்டிங் இயந்திரம் கொண்டு லாவகமாக ஒரு மணி நேரம் போராடி மீட்டனர். இந்த விபத்தில் ஒரு ஓட்டுநருக்கு லேசான காயமும் மற்றொரு ஓட்டுநருக்கு காலில் பலத்தகாயமும் ஏற்பட்டதில் அவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும் அம்பத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ