spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்ஆவடிஆவடியில் ஹாப்பி ஸ்ட்ரீட் - போதை பொருள் விழிப்புணர்வு கொண்டாட்டம்

ஆவடியில் ஹாப்பி ஸ்ட்ரீட் – போதை பொருள் விழிப்புணர்வு கொண்டாட்டம்

-

- Advertisement -

ஆவடியில் ஹாப்பி ஸ்ட்ரீட் - போதை பொருள் விழிப்புணர்வு கொண்டாட்டம்ஆவடி மாநகராட்சி, ஆவடி போலீஸ் கமிஷனரகம், தனியார் கல்வி நிறுவனம் மற்றும் தன்னார்வலர்கள் கூட்டமைப்பு சார்பில், ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி குடியிருப்பு சாலையில் ‘ஹாப்பி ஸ்ட்ரீட்’ என்னும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நாடு முழுவதும் உள்ள இளைஞர்களிடம் போதைப் பொருள் பழக்கம் அதிகரித்து வருகிறது. அதனால் இளைஞர்களின் வாழ்க்கை பாழாகுவதுடன் சமூகம் சீரழிகிறது. இந்த நிலையில் இளைஞர்களுக்கு போதைப்பொருள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், இளைஞர்களை நல்வழிப்படுத்தும் வகையில் காவல்துறை முன்னெடுத்து “ஹேப்பி ஸ்டீரிட்” நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர்.

we-r-hiring

ஆவடியில் ஹாப்பி ஸ்ட்ரீட் - போதை பொருள் விழிப்புணர்வு கொண்டாட்டம்அதனைத் தொடர்ந்து ஆவடியில் போதைப்பொருள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் இந்த நிகழ்ச்சி, ஆவடி வீட்டு வசதி வாரியம் குடியிருப்பு சாலையில், இன்று காலை 6:00 மணி முதல் 8:00 மணி வரை நடைபெற்றது.

எனது பிறந்த நாளுக்கு இது சிறந்த பரிசாக இருக்கும் – இந்திய அணிக்கு தோனி வாழ்த்து!

இதில், ‘டேபிள் டென்னிஸ்’, செஸ், கேரம், சிலம்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகள் இடம் பெற்றது. 2000 க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த ‘ஹாப்பி ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சியில், ‘டி.ஜே’ இசைக்கு ஏற்ப இளைஞர்கள் பங்கேற்று ஆடல் பாடல் செய்து 2 மணி நேரத்தை மகிழ்ச்சியாக கொண்டாடினர்.

ஆவடியில் ஹாப்பி ஸ்ட்ரீட் - போதை பொருள் விழிப்புணர்வு கொண்டாட்டம்இந்த நிகழ்ச்சியில் நசரத் கல்வி நிறுவனம் பங்கேற்று அனைத்துவிதமான உதவிகளையும் செய்து தந்தனர். மேலும் கல்வி நிறுவன உரிமையாளர் ஹென்றி பங்கேற்றதுடன் மாணவர்கள், பெற்றோர்களையும் கலந்துக் கொள்ள ஏற்பாடு செய்திருந்தார்.

ஆவடியில் ஹாப்பி ஸ்ட்ரீட் - போதை பொருள் விழிப்புணர்வு கொண்டாட்டம்ஆவடி சட்டமன்ற உறுப்பினர் சா.மு.நாசர் கலந்துக் கொண்டு மாட்டு வண்டியை ஓட்டியதை கண்டு மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆவடியில் ஹாப்பி ஸ்ட்ரீட் - போதை பொருள் விழிப்புணர்வு கொண்டாட்டம்மேலும் மேயர் உதயகுமார், ஆவடி காவல் ஆணையர் சங்கர், மாநகராட்சி ஆணையர் ஷேக் அப்துல் ரஹ்மான், பொறியாளர் ரவிச்சந்திரன் ஆகிய அதிகாரிகள் அதிகமாக கலந்துக் கொண்டது மக்களுக்கு உற்சாகம் தந்தது.

MUST READ