திருவள்ளூர், பட்டாபிராமில் தமிழ்நாடு அரசு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறைசார்பில் இன்று(08.02.2023) “புதுமைப்பெண் இரண்டாம் கட்ட தொடக்கவிழா” 1.8 லட்சம் மாணவிகள் பயனடைய உள்ள இந்த திட்டத்தில் 10 பேருக்கு வங்கி பற்றட்டைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கி விழா தலைமை உரையாற்றினார்.
முதல்வர் ஸ்டாலின் பேச்சு,

நேற்று தலைமை செயலகத்தில் காவல் துறையில் பணிநியமன நிகழ்ச்சியில் 17 பேரில் 13 பேர் பெண்கள் என்னிடம் ஆணையை பெற்றனர். கடந்த ஆண்டை விட தமிழகத்தில் 27 சதவீதம் புதுமை பெண் திட்டம் மூலம் உயர்கல்வி அதிகரித்துள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்த முதன் முதலில் அரசு நிதி உதவியுடன் இந்த கல்லூரி தொடங்கப்பட்டது. ஒரு நாடு செழிப்பாக இருக்க கல்வி முக்கியம். பெண்களுக்கு கல்வி என்பது முக்கியம். அதனை செயல்படுத்தவே திராவிட இயக்கம் உருவாக்கப்பட்டது.

அனைவருக்கும் சம உரிமை வழங்க உருவாக்கப்பட்ட இயக்கம் தான் இந்த திராவிட இயக்கம். 2000 ஆண்டுகளாக அடக்கி வைக்கப்பட்ட எழுர்ச்சியே இந்த இயக்கம். கல்வியை அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும் என்று நீதி கட்சி காலத்தில் இருந்து சொல்லப்படுகிறது. பெண் கல்விக்கு என்று பல திட்டங்கள் உருவாக்கப்பட்டது.
புதுமைப் பெண் திட்டத்தின் முதற்கட்டத்தில் 1,16,342 மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். இதற்காக இதுவரை 69 கோடி 64 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் இடைநிற்றலில் இருந்து 12,000 மாணவிகள் மீண்டும் உயர்கல்வியில் சேர்ந்து பயனடைந்துள்ளனர்.
இந்த திட்டம் மூலம் கல்வி வளர்ச்சி அதிகமாகும், பாலின சமத்துவம் ஏற்படும், குழந்தை திருமணம் தடுக்கப்படும் இது தான் திராவிட மாடல் 10 ஆயிரத்து 106 மாணவிகள் கடந்த 5 ஆண்டுகளில் கல்லூரி படிப்பை நிறுத்தியவர்கள் இந்த திட்டம் மூலம் பயன் அடைந்துள்ளனர்.
