தமிழகம் முழுவதும் வேட்டி மற்றும் சட்டைகளை விற்பனை செய்வதில் முன்னணி நிறுவனமாக உள்ள ராம்ராஜ் காட்டன் நிறுவனம், தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் தனது விற்பனையகத்தை திறக்கப்பட்டு, சிறப்பாக வேட்டி சட்டைகளை விற்பனை செய்து வருகிறது.


அதன் ஒருபகுதியாக ஆவடி அரசு மருத்துவமனை எதிரில் அமைக்கப் பட்டுள்ள ராம்ராஜ் காட்டன் நிறுவன புதிய ஷோரூமினை ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கு ஏற்றி மகாலிங்கம் செல்வராணி திறந்து வைத்தார். துரைராஜன் முதல் விற்பனையைத் தொடங்கி வைக்க அய்யாதுரை பெற்றுக்கொண்டார்.

வருகிற பொங்கல் சிறப்பு விழாவை முன்னிட்டு வேட்டி வாரம் 17-ம் வரை அறிவித்து, ஆவடியில் புதிய கிளை துவங்கபட்டுள்ளதை யொட்டி பொங்கல் வரை (17.01.24) வேட்டி வாரமாக விற்பனை நீட்டிக்கபட்டுள்ளது. 500 ரூபாய்க்கு மூன்று வேட்டிகள் சலுகை முறையில் வழங்கப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது. இதனை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என இந்நிறுவனம் சிறப்பு சலுகைகளை அறிவித்திருக்கிறது.



