ஆவடி காவல் ஆணையர் எல்லையில் கடந்த ஆறு மாதக் காலத்தில் திருடப்பட்ட 3 கோடியே 67 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பிலான தங்கம், வெள்ளி, செல்போன் போன்ற பொருட்களை மீட்டு உரியவரிடம் காவல் ஆணையர் சந்திப்ராய் ரத்தோர் ஒப்படைத்தார்.
அதில் 174 சவரன் நகை, 2,500 கிராம் வெள்ளி, 127 கேமரா, 331 செல்போன்கள் மற்றும் 10 லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.


அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆணையர் சந்திப்ராய் ரத்தோர், போதை இல்லா தமிழகம் என்ற இலக்கில் கஞ்சா கடத்தலில் ஈடுப்பட்ட 71 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 6 இருசக்கர வாகனம், 2 கார்கள் பறிமுதல் செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் சட்டம் ஒழுங்கில் 41 பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளதாக கூறினார். ஆவடி காவல் ஆணையர் எல்லையில் சிசிடிவி கேமராக்கள் மிக விரைவில் பொருத்தப்படும் என்றார்.
