Homeசெய்திகள்ஆவடிமனைவி இறந்த துக்கம் தாங்காமல் கணவர் தற்கொலை !

மனைவி இறந்த துக்கம் தாங்காமல் கணவர் தற்கொலை !

-

- Advertisement -

ஆவடியில் , உடல்நலக்குறைவு காரணமாக மனைவி இறந்த துக்கம் தாங்காமல் கணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சோகம்.

திருவள்ளுர் மாவட்டம் , ஆவடி, பக்தவச்சலபுரம், ஜோதி இராமலிங்கம் தெருவைச் சேர்ந்தவர் முத்துவீரன் (77). இவரது மனைவி சரஸ்வதி (65). இந்த தம்பதியினர் வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர். இவர்களது வீட்டையொட்டி மகன் தணிகைவேல் (35) என்பவர், இதே பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இதற்கிடையில்,  சரஸ்வதி உடல்நலக்குறைவு காரணமாக தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த வாரம் அவரை உறவினர்கள் வீட்டுக்கு அழைத்து வந்தனர். இந்த நிலையில், புதன்கிழமை இரவு சரஸ்வதி உயிரிழந்தார்.

 

we-r-hiring

இதைப் பார்த்து மனமுடைந்த முத்துவீரன் நள்ளிரவில் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். பின்னர், வியாழக்கிழமை காலை பெற்றோர் வீட்டுக்கு தணிகைவேல் வந்து பார்த்த போது, அம்மா சரஸ்வதி படுக்கை அறையில் இறந்து கிடப்பதையும்,  தந்தை முத்துவீரன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். தகவல் அறிந்த ஆவடி போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முத்துவீரன் சடலத்தை  மீட்டு, உடற்கூறு சோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

புகார் அடிப்படையில் காவல் ஆய்வாளர் டெல்லி பாபு தலைமையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவி இறந்த துக்கம் தாங்காமல், கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஆவடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

MUST READ