2 வது இளைஞர் அணி மாநாடு, புல்லட் வாகன பிரச்சார பேரணியை துவங்கி வைத்து புல்லட் ஓட்டி பிரச்சாரம் மேற்கொண்டார் ஆவடி சட்டமன்ற உறுப்பினர் சா.மு நாசர்.
திமுக இளைஞர் அணியின் 2வது மாநில மாநாடு டிசம்பர் மாதம் 17 ஆம் தேதி சேலத்தில் நடைபெற உள்ளது. திமுக இளைஞரணி மாநில மாநாட்டை ஒட்டி இருசக்கர வாகன பேரணியை திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கன்னியாகுமரியில் நவம்பர் 15 ஆம் தேதி தொடங்கி வைத்தார். இந்த இருசக்கர வாகன பேரணியானது தமிழகமெங்கும் 13 நாட்களில் 234 தொகுதிகள் முழுவதும் பயணம் செய்யவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை திமுக இளைஞரணியினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில் இந்த இருசக்கர வாகன பேரணியானது ஆவடி சட்டமன்ற தொகுதியை நேற்று வந்தடைந்தது. அவர்களுக்கு ஆவடி எம்.எல்.ஏ சா.மு.நாசர் உற்சாகமாக வரவேற்பு அளித்தார்.பின்னர் புல்லட் பேரணியானது பட்டாபிராமில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இருந்து தொடங்கியது. இதில் எம்எல்ஏ நாசர் புல்லட் ஓட்டி திருவேற்காடு நோக்கி 15 கிலோ மீட்டர் பிரச்சார பேரணியில் ஈடுபட்டார்.இந்த பேரணியில் திமுக இளைஞர் அணியினர் 500கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.