spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்ஆவடிதிறக்கபடும் முன்பே சேதமடைந்த ரேஷன் கடை…அதிர்ச்சியில் மக்கள்!

திறக்கபடும் முன்பே சேதமடைந்த ரேஷன் கடை…அதிர்ச்சியில் மக்கள்!

-

- Advertisement -

ஆவடியில் கட்டி முடிக்கப்பட்டு கடந்த மூன்று மாதங்களாக திறக்கப்படாமல் இருந்த நிலையில் இன்று திறக்க திட்டமிட்டு நேற்று பொருட்களை இறக்கி வைக்கும்போது வைப்பு அறை டைல்ஸ் கற்கள் முழுவதும் உடைந்து நொறுங்கியது. மக்கள் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பு சேதமடைந்த ரேஷன் கடை.திறக்கபடும் முன்பே சேதமடைந்த ரேஷன் கடை…அதிர்ச்சியில் மக்கள்!ஆவடி அடுத்த கன்னடபாளையத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக ரேஷன் கடை இல்லை. கன்னடபாளையத்தில் 675 குடும்ப அட்டைதாரர்கள் மட்டுமே உள்ளனர். இவர்களுக்கு தனியாக ரேஷன் கடை திறக்க முடியாது என்பதால், அப்பகுதிவாசிகள், வெள்ளானூர் ஊராட்சிக்கு உட்பட்ட சைதை வேளாண் விற்பனை கூட்டுறவு சங்கத்தில் ரேஷன் பொருட்களை வாங்கி வந்தனர்.

திறக்கபடும் முன்பே சேதமடைந்த ரேஷன் கடை…அதிர்ச்சியில் மக்கள்!

we-r-hiring

இந்நிலையில், பொதுமக்கள் தொடர் கோரிக்கை அடுத்து, எம்.எல்.ஏ., நிதியில் இருந்து 11.76 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், கன்னடபாளையம், அம்பேத்கர் சிலை அருகில் புதிய அமுதம் நியாய விலை கடை கட்டப்பட்டு, கடந்த சில மாதத்திற்கு முன் திறக்கப்பட்டது. குறைந்தபட்சம் ஆயிரம் ரேஷன் அட்டைகள் இருந்தால் மட்டுமே தனியாக ரேஷன் கடை இயங்கும் என கூறப்பட்ட நிலையில் இன்று முதல் கடை இயங்க திட்டமிடப்பட்டிருந்தது இதற்காக ரேஷன் பொருட்கள் நேற்று வரவழைக்கப்பட்டு ரேஷன் கடை வைப்பு அறையில் தொழிலாளிகள் இறங்கி வைத்தனர் அப்போது பாரம் தாங்காமல் அறையின் ஒரு பகுதி முழுவதும் உடைந்து சேதமானது இதில் புதைக்கப்பட்டிருந்த டைல்ஸ்கள் நொறுங்கியது, பாமாயில் பெட்டி வைத்ததற்கு பாரம் தாங்காமல் உடைந்து போனதாக சிரித்த சுமை தூக்கும் தொழிலாளிகள். கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்ட ரேஷன் கடை மக்கள் பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பே உடைந்த சம்பவம் ஆவடியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அந்த சாரை கண்டு பிடிச்சாச்சு ! 11 சாட்சிகள்! செல்டவர் ரகசியம்!  உடைத்துப்பேசும் சுபேர்!

MUST READ