அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளதாகவும், இதன் மூலம் அந்த சார் ஞானசேகரன் தான் என்று உறுதியாகி உள்ளதாகவும் மூத்த பத்திரிகையாளர் சுபேர் தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலை. மாணவி வழக்கு தீர்ப்பு மற்றும் யார் அந்த சார் என்கிற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கும் விதமாக பத்திரிகையாளர் சுபேர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- சென்னை அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் வரலாற்று சிறப்பு மிக்க ஒரு தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது. 5 மாதத்தில் குற்றவாளிக்கு தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. பெரிய ஐ.டி.விங்கை வைத்து, யார் அந்த சார்? என்று டிரெண்ட் செய்தார்கள். யார் அந்த சார்? என்ற பதாகைகளுடன் சட்டப்பேரவைக்கு சென்றார்கள். இன்றைக்கு யார் அந்த சார்? என்பதற்கு விடை நீதிமன்றத்தில் வழங்கி உள்ளனர். அப்படி ஒரு சாரே கிடையாது. பாதிக்கப்பட்ட பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், குற்றவாளி ஞானசேகரனுக்கு செல்போன் ரிங்கே வரவில்லை. பாக்கெட்டில் வைத்திருந்த செல்போனை எடுத்து, அவர் ஆமா சார்… சொல்லுங்க சார்… என்று அந்த பெண்ணை மிரட்டுவதற்காக பேசியுள்ளார். பாதிக்கப்பட்ட மாணவி நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தை, நீதிமன்றத்தில் வெட்ட வெளிச்சமாக அரசுத்தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். அதை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. ஞானசேகரனுக்கு போனே வரவில்லை. ஆனால் அவர் போனை எடுத்து மிரட்டியுள்ளார்.
மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் முக்கிய ஆதாரம் ஞானசேகரன் பயன்படுத்திய செல்போன் ஆகும். இந்த வழக்கில் மொத்தம் 11 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு உள்ளன. அதில் முக்கிய சாட்சியாக எடுத்துக் கொள்ளப்பட்டது இந்த சொல்போன்தான். செல்போனை, காவல்துறை ஐ.டி பிரிவில் கொடுக்கப்பட்டு முழுமையான பரிசோதனை செய்து, ஞானசேகரன் என்ன என்ன தவறுகளை செய்துள்ளார் என்று முழு ஆவணமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். இன்றைக்கு நீதிமன்றம் 5 மாதங்களில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. சார் என்பது யாரும் கிடையாது. அந்த சாரும் ஞானசேகரன்தான், அந்த பொருக்கியும் அவன் தான், அந்த ரவுடியும் அவன்தான் என்று நீதிமன்றம் சொல்லியுள்ளது. இந்த வழக்கில் தமிழக அரசும், காவல்துறையும் செய்திருக்கிற துரிதமான வேலைகள் மிகவும் முக்கியமானது. அரசுத்தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், மிகவும் சென்சிட்டிவ் ஆன வழக்கு என்பதால் சாட்சிகளை நாங்கள் விசாரிக்க வேண்டும். சாட்சிகள் என்பது பாதிக்கப்பட்ட மாணவியின் உடன் படிக்கும் மாணவிகளாகும். அவர்களை விசாரிக்க வேண்டும். அதேவேளையில் அவர்களின் பெயர்கள் வெளிவரக்கூடாது. அவர்களை எச்சரிக்கையுடன் விசாரிக்க வேண்டும். விசாரணையின்போது அவர்கள் பயந்துவிடக்கூடாது. அவர்களின் எதிர்காலம் என இத்தனை விஷயங்களையும் கருத்தில் வைத்துக்கொண்டு அவர்களிடம் சாட்சியங்களை பதிவு செய்தோம் என்கிறார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை பொறுத்தவரை பாலியல் வன்கொடுமை சம்பவம் நடைபெற்ற உடன் தமிழக அரசும், காவல்துறையும் துரிதமாக நடவடிக்கை எடுத்து, குற்றவாளியை கைதுசெய்து, சம்பந்தப்பட்ட அனைத்து இடங்களுக்கு எல்லாம் விசாரணைக்காக அழைத்துச்சென்றனர். குற்றவாளி ஞானசேகரன் சம்பந்தப்பட்ட அனைத்து எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை எல்லாம் பறிமுதல் செய்தார்கள். அதேபோல், பாதிக்கப்பட்ட மாணவியுடன் படிக்கும் அனைத்து மாணவர்களையும் விசாரணை மேற்கொண்டு, சாட்சியங்கள் எடுத்து அதனை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். நீதிபதியும் விசாரித்து அதனை சரிபார்த்து குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகாலம் ஆயுள் தண்டனை விதித்துள்ளார். அவர் வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்கக்கூடிய தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது.
எதிர்க்கட்சிகள் கேட்கிற யார் அந்த சார்? என்பதற்கு பதில் அவன்தான் அந்த சார். மாணவியை ஏமாற்றுவதற்காக சார் என்கிற நபர் இருப்பது போல நடித்து, அந்த பெண்ணை மிரட்டியுள்ளார். நீதிமன்றத் தீர்ப்பு வந்த பின்னரும் அதிமுகவினர் யார் அந்த சார்? என்று கேட்கலாம். அதற்கு முன்னதாக பெண்கள் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறித்து பேச அடிப்படை தகுதி அற்றவர்கள் அதிமுகவினர். தருமபுரியில் சுற்றுலா சென்றுவிட்டு வந்த வேளாண் கல்லூரி மாணவிகளை பேருந்துடன் எரித்துக் கொன்றனர். அந்த வழக்கில் 3 பேரையும் விடுவித்தனர். அதற்கு காரணமாக தெரியாமல் எரித்துவிட்டதாக சொன்னார்கள். ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் போடப்பட்ட வழக்கில், எடப்பாடி காலத்தில் அத்தனை பேரும் விடுவிக்கப்பட்டனர். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில், பொள்ளாச்சியை சேர்ந்த முக்கிய அரசியல்வாதியின் மகன்தான் முக்கிய குற்றவாளி என்று சொல்லப்பட்டது. இன்று வரை அது மறைக்கப்பட்டு வழக்கில் தண்டனை கொடுத்திருக்கிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு வேகப் படுத்தப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுத்திருக்கிறார்கள்.
அன்றைக்கு ஊடகங்களின் தொடர் அழுத்தம் காரணமாகவும், கடுமையான போராட்டங்களின் காரணமாகவே பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. பொள்ளாச்சி வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டதில் தமிழ்நாடு அரசின் பங்கும் காவல்துறையின் பங்கும் உள்ளது. இத்தனைக்கும் பிறகும் அற்ப அரசியலுக்காக யார் அந்த சார்? என்று கேட்பது எந்த வித அர்த்தமும் கிடையாது. யாரையோ மறைப்பதற்காக தான் அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கை வேகவேகமாக விசாரணை நடத்துகிறார்கள் என்று ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள். தாமதமாக விசாரித்தாலும் அவர்கள் அரசு மீது குற்றம்சாட்டுவார்கள். ஒட்டுமொத்தமாக அரசியல் செய்வதற்கு வேறு வழியில்லாததால் எதிர்க்கட்சிகள் காலாவதியான இந்த டெம்பிளேட்டை தூக்கிக் கொண்டு திரிகிறார்கள்.
இதுபோன்ற பாலியல் வழக்குகள் மேல்முறையீட்டுக்கு செல்கிறபோது, அதனை தள்ளுபடி செய்துவிடுவார்கள். இந்த வழக்கில் அரசியல்வாதிகளுக்கு தொடர்பு உள்ளது என்று புகார் தெரிவித்தனர். அரசியல் கட்சி தலைவர்களுடன் புகைப்படம் எடுப்பதை மட்டும் வைத்துக்கொண்டு எப்படி வழக்கில் தொடர்பு உள்ளதாக சொல்ல முடியும்? என்று நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். எதிர் தரப்பில் ஞானசேகரன் முக்கிய நபர்களுடன் எடுத்த புகைப்படத்தை ஆதாரமாக தாக்கல் செய்தார்கள். அப்போது நீதிபதி, நான் ஒரு நிகழ்ச்சிக்கு செல்கிறேன் என்றால் என்னுடன் பலரும் புகைப்படம் எடுப்பார்கள். அவர்கள் யார் என்று எனக்கு தெரியாது? அவர்கள் குற்றம்செய்தால், என்னையும் குற்றவாளி என்று குற்றம் சாட்டுவீர்களா? என கேள்வி எழுப்பினார். அப்போது, யார் உடனே ஞானசேகரன் எடுத்த புகைப்படத்தை வைத்துக்கொண்டு அரசியல் ரீதியாக அரசு மீது குற்றம்சாட்டினார்கள். ஆனால் இன்றைக்கு நீதிமன்றம் எதிர்க்கட்சிகளின் அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது, இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.