தமிழ்நாடு காவல் துறையில் 1986ம் ஆண்டில் பணியில் சேர்ந்த காவலர்கள் 40 ஆண்டு கழித்து ஒருவரை ஒருவர் சந்திக்கும் நிகழ்வு ஆவடியில் நடைபெற்றது.தமிழ்நாடு காவல் துறையில் 1986ம் ஆண்டு இரண்டாம் நிலை காவலர்களாக பணியில் சேர்ந்த பலர் தற்போது ஆய்வாளர்,உதவி ஆய்வாளராக 39 ஆண்டுகள் பல்வேறு மாவட்டங்களில் பணி புரிந்து தற்போது ஓய்வு பெற்றும்,சிலர் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில் இவர்கள் 39 ஆண்டை நிறைவு செய்து 40ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றனர். இதனை கொண்டாடும் வகையில் கன்னியாகுமாரி,நாமக்கல்,தஞ்சாவூர்,சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த காவலர்கள் 40 வருடம் கழித்து ஒருவரை ஒருவர் சந்திக்கும் நிகழ்வு ஆவடியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் அனைவரும் ஒரே வண்ண உடையில் கலந்து கொண்டனர்.
மேலும் நீண்ட நாட்களுக்கு பின்னர் ஒருவரை ஒருவர் சந்தித்ததை தொடர்ந்து கடியணைத்தும் நலம் விசாரித்து அன்பை பொழிந்தனர். மேலும் நண்பர்களை சந்தித்து செல்ஃபி எடுத்து கொண்டனர். இதனை அடுத்து அம்மன் கோவிலில் எல்லாரும் ஒன்றாக சேர்ந்து சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் தங்களுக்கு பயிற்சி அளித்த ஆசான்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தனர்.இதே போன்று தங்களுடன் பயிற்சி பெற்று பணி செய்த போது உயிரிழந்த காவலர்களுக்கு ஒரு நிமிட மெளன அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து அனைவரும் சம பந்தியில் அமர்ந்து உணவருந்தி சொந்த ஊர்களுக்கு திரும்பிச் சென்றனர்.
தமிழக ரயில் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு: விவரங்கள் எங்கே..? அன்புமணி கேள்வி